ரஜினி விஜய் சூர்யாவுக்கு பிறகு தனுஷுக்கு கிடைத்த கௌரவம்..; ரசிகர்கள் ரகிட.. ரகிட… ஆட்டம்

Dhanushகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது..

இந்த நிலையில் ட்விட்டர் எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு.

ட்விட்டர் தளத்தில் #JagameThandhiram, #JagameThandhiramOnNetflix, #LetsRakita, #Rakita மற்றும் #Suruli ஆகிய ஹேஷ்டேக்குகளை வைத்து ட்வீட் செய்தால் எமோஜி வருவது போன்று படக்குழு வடிவமைத்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், ட்விட்டர் எமோஜி கொண்ட முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘காலா’, ‘2.0’, ‘என்.ஜி.கே’, ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களுக்கு ட்விட்டர் எமோஜி இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Dhanush in Jagame Thanthiram gets twitter emoji

Overall Rating : Not available

Related News

இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை…
...Read More
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்…
...Read More
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட்…
...Read More

Latest Post