மே மாதம் ஒரு படம்.. ஜூன் மாதம் ஒரு படம்..; ஓடிடி-யில் தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகி தியேட்டர்களில் ஏப்ரல் 9ல் ரிலீசான படம் ‘கர்ணன்’.

இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்..

தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

தற்போது கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதன்படி மே 9-ம் தேதி கர்ணன் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் மாதம் 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

ஆக மே & ஜூன் ஆகிய 2 மாதங்களில் தனுஷ் ரசிகர்களுக்கு செம விருந்து இருக்கு…

Dhanush 2 films will release in OTT

Overall Rating : Not available

Latest Post