தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.
நடிகர் அபிஹாசன் பேசியதாவது…
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மீடியாவுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. படம் பார்த்தீர்கள் என்றால் தெரியும். அந்த சிங் கதாபாத்திரம் நான் தான் நடித்திருக்கிறேன்.
நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக் கொடுத்த அருண் விஜய் சாருக்கு நன்றி. எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத பொங்கலாக மாறியிருக்கிறது”.
நடிகர் பரத் போபண்ணா…
“எங்கள் படக்குழுவினர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பார்க்க முடிகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி.
என்னுடைய தமிழ் சினிமா பயணத்தை அருண் விஜய் சாருடன் ஆரம்பித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் நாட்களில் படம் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது”.
படத்தின் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர்…
“அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரது கடின உழைப்புக்கான வெற்றி இது. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.
நடிகர் அருண் விஜய் பேசியதாவது…
“நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது.
புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.
அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி”.
Audience will connect to my movies script says Arun Vijay