தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் இளைய திலகம் பிரபு புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது..
சூப்பர் ஸ்டார் என்றால் அண்ணன் ரஜினிகாந்த் மட்டும்தான்.
ஆனால் அவரே ஒரு முறை சொல்லி இருக்கிறார் என் இடத்திற்கு நாளை வேறு யாராவது வரலாம் என தெரிவித்திருக்கிறார்.
‘தேவர் மகன்’ படத்தில் பெரிய தேவர் ஐயா மறைவுக்குப் பின் அவரது இடத்திற்கு சின்ன தேவரய்யா வருவார்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் எங்கள் அண்ணன் ரஜினி மட்டும்தான்.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 4ஆம் தேதி… நடிகர் அருண் விஜய் திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவரிடமும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது.. “நான் ரஜினிகாந்த் ரசிகன்” என்று அதிரடியாக பதில் கொடுத்தார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபு மற்றும் அருண் விஜய் ஆகிய இருவருமே ஒரே கருத்தை தெரிவித்திருந்தனர்.
“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இளைஞர்கள் வரவேண்டும் என்கிறார்கள். எனவே விஜய்யும் வரலாம்.
நல்லது செய்ய வேண்டும் என நினைத்து விஜய் வருகிறார். எனவே அவரை வரவேற்போம் என்ற கருத்தை இருவரும் பேசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மாஞ்சா வேலு’ என்ற திரைப்படத்தில் பிரபு மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் அண்ணன் தம்பியாக நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Prabu and Arun Vijay speaks about Vijay politics and Superstar title