தமிழ் புத்தாண்டில் தடம் பதிக்க வரும் அருண்விஜய்

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Yearகுற்றம் 23 படத்தை தொடர்ந்த நடிகர் அருண்விஜய் மற்றும் தயாரிப்பாளர் இந்திரகுமார் இணைந்துள்ள திரைப்படம் தடம்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படத்தில் அருண்விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத் தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் “தடம்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் “தடம்” தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arun Vijay plans to release his Thadam movie on Tamil New Year

Overall Rating : Not available

Latest Post