‘மிஷன் சாப்டர் 1’ படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு ஸ்கிரீன் அதிகப்படுத்தினாங்க – விஜய்

‘மிஷன் சாப்டர் 1’ படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துட்டு ஸ்கிரீன் அதிகப்படுத்தினாங்க – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் விஜய் பேசியதாவது…

“எங்கள் எல்லோருக்கும் சிறப்பான வருடம் இது. இந்த தேங்க்ஸ் மீட் எதற்கு என்று முதலில் சொல்லி விடுகிறேன். படம் வெளியாகும்போது எங்களுக்குத் திரையரங்குகள் குறைவாகவே கிடைத்தது. இரண்டு பெரிய படங்கள் வருகிறது எனும்போது எங்களுக்கு அப்படி அமைந்து விட்டது.

எங்கோ பிரிவியூ ஷோ போவது போலதான் இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியான ஒரு ஃபீல் கிடைக்கவே இல்லை. ஆனால், படத்தில் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. அடுத்தடுத்து நீங்கள் புஷ் செய்வதுதான் படத்தை இன்னும் அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு போகும் என மோகன் சார், விஜயகுமார் சார் சொன்னார்கள்.

அதன்படிதான் நாங்கள் நடந்து கொண்டு வருகிறோம். படத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல லைகா சரண் சார், சுரேஷ் சந்திரா சார், ஷ்யாம் சார் என அனைவரும் சேர்ந்து உழைத்தோம். படத்திற்கான ரெஸ்பான்ஸ் பார்த்துவிட்டு தானாகவே ஸ்கிரீன் அதிகப்படுத்தினார்கள். இன்றைய தேதியில் நிறைய திரையரங்குகளில் நிறைய ஸ்கிரீன்கள் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மீது அந்த நம்பிக்கையை கொடுத்த மீடியா விமர்சனங்களுக்கு நன்றி. இப்போதுதான் எங்களுக்கு முதல் வாரம் போல. நீங்கள் அடுத்தடுத்து கொடுக்கும் ஆதரவுதான் எங்களை இன்னும் அடுத்துச் செல்லும். என்னுடைய வழக்கமான ஸ்டைலில் இருந்து வேறொரு ஜானரில் நான் செய்திருக்கும் படம் இது. பட்ஜெட் பெரிதாகத் தேவைப்படுகிறது எனச் சொன்னபோது, அதற்கு முழு ஆதரவுக் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் லைகாவுக்கும் நன்றி.

அந்த அளவுக்கு படத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ‘அச்சம் என்பது இல்லையே’ என இருந்த படத்தின் டைட்டிலை ‘மிஷன்’ என மாற்றி அனைத்து மொழிகளுக்கும் எடுத்துச் சென்ற லைகா சுபாஸ்கரன் சாருக்கும் தமிழ்க்குமரனுக்கும் நன்றி.

படப்பிடிப்பில் செட் பலமுறை விழுந்து, மீண்டும் அதை உருவாக்கினோம். இப்படி படப்பிடிப்பில் இருந்து ரிலீஸ் வரை பல சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதற்கெல்லாம் நிச்சயம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம். படத்திற்கு பாசிட்டிவான ஆதரவு கொடுத்து எடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றி.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பெரிய பலம். அருண் விஜய் சார், இயல், அபிஹாசன், ஏமி, நிமிஷா, பரத், சரவணன், ராமலிங்கம் மேஸ்திரி என அனைவருக்கும் நன்றி. படம் இன்று இவ்வளவு பெரிதாகத் தெரிய இவர்கள் தான் காரணம். படத்தில் முக்கியமான விஷயம் கதைதான். அதைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படத்தில் மொட்டை மாடியில் இருந்து அருண் விஜய் சார் குதிக்கும் காட்சி ஒன்று வரும். அது சிஜி கிடையாது. டூப் போடாமல் அவரே செய்தார். அது மேஜிக் போல நடந்துவிட்டது.

அந்தத் தருணங்களில் எங்களுக்கு பாதுகாப்பைச் சரியாக செய்து தந்த செல்வா மாஸ்டருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் மீண்டும் நன்றி!”.

மிஷன் சாப்டர்1

After response Mission Chapter 1 screens increased says Vijay

உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களில் நடிப்பேன் – அருண் விஜய்

உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களில் நடிப்பேன் – அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.

நடிகர் அபிஹாசன் பேசியதாவது…

“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மீடியாவுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி. படம் பார்த்தீர்கள் என்றால் தெரியும். அந்த சிங் கதாபாத்திரம் நான் தான் நடித்திருக்கிறேன்.

நான் எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புக் கொடுத்த அருண் விஜய் சாருக்கு நன்றி. எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத பொங்கலாக மாறியிருக்கிறது”.

நடிகர் பரத் போபண்ணா…

“எங்கள் படக்குழுவினர் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பார்க்க முடிகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பார்வையாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. தமிழ் சினிமாவுக்கு என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி.

என்னுடைய தமிழ் சினிமா பயணத்தை அருண் விஜய் சாருடன் ஆரம்பித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் நாட்களில் படம் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது”.

மிஷன் சாப்டர்1

படத்தின் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர்…

“அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரது கடின உழைப்புக்கான வெற்றி இது. பார்வையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி”.

நடிகர் அருண் விஜய் பேசியதாவது…

“நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது.

புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி. படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி”.

மிஷன் சாப்டர்1

Audience will connect to my movies script says Arun Vijay

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி..; முதல்வருக்கு கோரிக்கை வைத்த அமீர்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி..; முதல்வருக்கு கோரிக்கை வைத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*மாண்புமிகு தமிழக முதல்வர்,* அவர்கள் மற்றும் *மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்*, அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை,

ஆகியோரது கனிவான கவனத்திற்கு..

*பொருள்: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரி..*

வணக்கம்,

திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக,
“கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்..”

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.

நன்றி.!
அன்புடன்,

அமீர்
சென்னை
17.01.2024

அமீர்

Govt job for Jallikattu winners Ameer request CM Stalin

TALENT HUNT நீங்கள் ஏங்கிய சினிமா மேடை ரெடி.! அந்தோணி தாசன் தரும் அரிய வாய்ப்பு

TALENT HUNT நீங்கள் ஏங்கிய சினிமா மேடை ரெடி.! அந்தோணி தாசன் தரும் அரிய வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை.

அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch) ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.

நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாய் மின்னுவது உறுதி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மட்டும் இன்றி திரைப்படங்களிலும் அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்க, இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக தயாரித்து பதிவேற்றம் செய்யலாம்.

நடனத்தில் தனி ஒருவர் நடனம் ஆடுவது மட்டும் இன்றி, குழுவாக நடனம் ஆடும் வீடியோவும் பதிவேற்றம் செய்யலாம். குழு நடனம் என்றால் ஒரு குழுவில் 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த 24 பேர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டி பிரமாண்டமான முறையில், தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிக்கவும், இசை திறமையுள்ளவர்களுக்கு பாடகர், இசைக் கலைஞர், நடனத்தில் திறமையுள்ளவர்களுக்கு நடனம் என பல வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் பட தலைப்பு ஆகியவை ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை குளோப் நெக்சஸ் நிறுவனம் பிரபலப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க பொது பிரிவு வயது வரம்பாக 3 முதல் 45 என நிர்ணயம் செய்துள்ளோம். அதேபோல், டீன் என்ற பிரிவுக்கு 13 முதல் 19 வயதும், சீனியர் என்ற பிரிவுக்கு 20 முதல் 45 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வயது வரம்பாக 3 முதல் 12 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்துக்கொள்ள www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்வதோடு, உங்களது 30 நொடிகள் வீடியோவையும் இதே தளத்தில் பதிவேற்றலாம்.

மேலும், இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தனிப்பட்டவர்களுக்கு ரூ.299 வசூலிக்கப்படுகிறது. குழுவாக நடனம் ஆடுபவர்களுக்கு குழு கட்டணமாக ரூ.1499 வசூலிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஆர்வத்தில் பதிவு செய்துவிட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதை சாதாரணமாக விட்டுவிடாமல், இதில் தீவிரமாக செயல்படுவதற்காகவே இந்த சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திருமதி. மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் செல்வி.பவித்ரா, பொது மேலாளர் செல்வி.தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடகத்தினருக்கும் நன்றி. எங்கள் நிருவனம் கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக செயல்பட்டு வருகிறோம். தற்போது மீடியாவுக்குள் நுழைகிறோம். இதை சாதாரணமாக செய்ய கூடாது என்பதால், ஒரு கற்றலோடும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதத்திலும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம். நாங்க பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறோம்.

நீங்கள் எப்படிப்பட்ட தொழில் தொடங்கினாலும் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டியாக உங்களுக்கு துணையாக நின்று உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வோம், இதை தான் பிஸினஸ் புரோமோட்டராக செய்து கொண்டிருக்கிறோம். அதே போல் சொத்துக்கள் பராமரிப்பு, பொது வர்த்தகம் போன்றவற்றை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருப்பது போல் தற்போது மீடியா மேனஜ்மெண்ட் துறையிலும் நாங்கள் நுழைந்திருக்கிறோம், இதையும் நாங்கள் சிறப்பாக செய்வோம். இதற்கான ஆரம்ப புள்ளி தான் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’.” என்றார்.

அந்தோணி தாசன் பேசுகையில்…

“மிகவும் சந்தோஷாம இருக்கு, கிளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன்.

கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன், ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குநர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன், கடவுளுக்கு நிகராக இருக்கும் ஊடகத்தாரையும், ரசிகர்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன். குளோப் நெக்சஸின் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் பங்கேற்று வெற்றிகரமாக வாய்ப்புகளை பெற வேண்டும். எனக்கு கூட நிறைய பேர் போன் செய்து, நான் நல்லா பாடுவேன், நடனம் ஆடுவேன் என்று சொல்வார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு சரியான தளம் அமையவில்லையே என்று நான் நினைத்தது உண்டு, தற்போது அப்படி ஒரு தளத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்ததில் மகிழ்ச்சி. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி.” என்றார்.

Anthony Dasan announces Talent Hunt Show

பிரபாஸ் – அமிதாப்புக்கு வில்லனாக கமல் மிரட்டும் ‘கல்கி 2898 AD’ பட ரிலீஸ் அப்டேட்

பிரபாஸ் – அமிதாப்புக்கு வில்லனாக கமல் மிரட்டும் ‘கல்கி 2898 AD’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி மொழியான சினிமாவை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அத்தகைய சினிமாவின் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள்.

அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்.. ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது.

வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

Kamal Amithap Prabhas starrer Kalki 2898AD movie release news

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க இணைந்தனர் எழில் & விமல்

மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க இணைந்தனர் எழில் & விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா”, சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் s.எழில்.

குடும்பங்கள் கொண்டாடும் இவரது படங்களில் மனதை தொடும் இதமான காதல்.. அதிரும் காமடி.. ஆக்‌ஷன்.. செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்து இருக்கும். அப்படிபட்ட படமாக ஹிட் அடித்த படம்தான் “தேசிங்குராஜா”.

10 வருடம் கழித்து மீண்டும் “தேசிங்குராஜா” இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்கிறார் s.எழில்.

‘தேசிங்குராஜா’ வில் கதாநாயகனாக நடித்த விமல், “தேசிங்குராஜா-2” விலும் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மூலம் விமல், எழில் மீண்டும் இணைகிறார்கள்.

இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P.ரவிசந்திரன் தயாரிக்கிறார்.

இரண்டாவது முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள்.

இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை படம் முழுக்க காமடி கதையாக உருவாக்கி இருக்கிறார் டைரக்டர் s.எழில்.

இவரது படங்களில் காமடி சற்று தூக்கலாகவே இருக்கும். சூரி, யோகிபாபு என ஒரு காமடி பட்டாளமே நடித்திருப்பார்கள்.

இப்படத்திலும் அப்படிதான்… ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் கலக்குகிறார்கள்.

s.எழில் படங்களில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும். இசை அமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார், யுவன் சங்கர்ராஜா , டி.இமான், சத்யா போன்ற பல இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய s.எழில், அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படத்திற்கு பிறகு ‘ஹிட் காம்போவாக’ வித்யாசாகருடன் மீண்டும் இதில் இணைகிறார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது.

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார்
ஒளிப்பதிவு: செல்வா.ஆர்
எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்
ஆர்ட்: சிவசங்கர்
வசனம்-முருகன்
ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )
நடனம் : தினேஷ்
பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்
பி.ஆர்.ஓ: ஜான்சன்

தேசிங்குராஜா-2

Ezhil and Vimal combo Desingu Raja 2 movie news

More Articles
Follows