தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். ஒரு கட்டத்தில் இவர் நடிகராகவும் உருவெடுத்து பல படங்களில் நாயகனாக நடித்தார்.
கிட்டத்தட்ட மாதத்திற்கு ஒரு படம்.. வாரத்திற்கு ஒரு படம்.. என பல படங்களை அதிரடியாக கொடுத்து வந்தார்.
ஒரு கட்டத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அதிரடியான ஹிட் பாடல்களை கொடுத்து வந்தார்.
தனுஷின் ‘அசுரன்’.. சூர்யாவின் ‘சூரரை போற்று’ உள்ளிட்ட பல படங்கள் ஜி வி பிரகாஷ் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.. இந்த இரு படங்களும் தேசிய விருதையும் பெற்றது.
எனவே இசையில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஜிவி பிரகாஷ்.
இந்த நிலையில் மறுபடியும் இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் ஜீவி பிரகாஷ்.. அவர் நடிகராக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.? இசையமைப்பாளராக எத்தனை படங்களை கைவசம் வைத்திருக்கிறார்? என்பது குறித்த பார்வை இதோ…
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் :
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி, சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான், கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் SK21, அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே, சூர்யா நடிப்பில் வாடிவாசல், கார்த்தி நடிப்பில் ஜப்பான், வசந்த பாலனின் அநீதி மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் இசையில் தயாராகி வருகின்றன.
நடிகர் ஜிவி. பிரகாஷ் படங்கள்..:
தினேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடியே, சீனுராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.
upcoming movies of acting and music compose in gvprakash