அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

ajith appukuttyசிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டிக்கு இளையராஜாவின் இசையில் உருவான ‘அழகர்சாமியின் குதிரை’ தேசிய விருதை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, சுந்தர பாண்டியன், வீரம், வேதாளம் படங்களில் நடித்து அஜித்தின் அன்பை பெற்றார்.

இதன் பின்னர் அவருக்காக ஒரு போட்டோ சூட் நடத்தி, இவரின் இயற்பெயரான சிவபாலன் பெயரில் இனி நடிக்க வேண்டும் என அஜித்தும் வலியுறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘தல 57’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

முதலில் அப்புக்குட்டியின் காட்கிளை சென்னையில் படமாக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் தற்போது அந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் அஜித் இருந்திருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் அஜித்தின் அன்பை முழுவதுமாக பெறப்போகிறார் அப்புக்குட்டி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *