‘தூக்குதுரை’ படத்தை அஜித் ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவாங்க.. – கூல் சுரேஷ்

‘தூக்குதுரை’ படத்தை அஜித் ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவாங்க.. – கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ்…

“நண்பர்களாக அனைவரும் இணைந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். என்னை ஹீரோவாக வைத்து அடுத்து ஒரு படத்தை எடுக்க போகிறேன் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அரவிந்த் சொல்லி இருக்கிறார்.

தூக்கு முழுவதும் பணமாக சேரும் அளவுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அஜித் சாருடைய அல்டிமேட் கதாபாத்திரப் பெயரை இந்த படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.

அதனால் நிச்சயமாக அஜித் சார் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆதரவு கொடுப்பார்கள்.

யோகிபாபு, சென்றாயன், பால சரவணன், மகேஸ் இவர்கள் படத்தில் இருப்பதை பார்க்கும்பொழுது படம் நிச்சயமாக கலகலப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

சமீபத்தில் நல்ல படங்களை ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் ஹரி உத்ரா புரொடக்‌ஷன்ஸூக்கு வாழ்த்துக்கள். அஜித் சார், விஜய் சாரை ஆடவைத்த ஸ்ரீதர் மாஸ்டர் இந்த படத்திற்கு நடனம் அமைத்திருப்பது மிகப்பெரிய பலம். இயக்குநர் டெனிஸூம் அடுத்தடுத்து வெவ்வேறு உயரங்களுக்கு செல்வார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!”.

தூக்குதுரை

நடிகர் மகேஸ் சுப்ரமணியன்…

“இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் மூன்று பேருக்கும் நன்றி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள்.

இந்த சமயத்தில் அன்பு சாரை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்திருக்கிறார். உங்கள் ஆசீர்வாதத்தோடு இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் பெறும். பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நிச்சயம் மீடியா மற்றும் மக்கள் ஆதரவு தேவை. என்னைப் புதுமுகமாக பார்க்காமல் ஆதரவு கொடுத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் டெனிஸ் இல்லை என்றால் நான் இல்லை. நான் நடிக்க நினைத்த விஷயத்திற்கு எந்தத் தடையும் சொல்லாமல் ஆதரவு கொடுத்தார். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் இன்று நடந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு வந்து பார்த்து ஆதரவு கொடுங்கள்”.

தூக்குதுரை

இணைத் தயாரிப்பாளர் வினோத்குமார்…

“இந்தப் படம் இவ்வளவு பெரிதாக வர முக்கிய காரணம் அன்பும் அரவிந்தும்தான். நாங்கள் மூன்று பேரும் நண்பர்கள். இந்த நட்புதான் படம் செய்யும் அளவுக்கு வந்தது. பத்துவருடத்திற்கு முன்னால் நாங்கள் பேசிய விஷயம் இப்போது நிஜமாகி இருக்கிறது. ‘முத்தழகு’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த மகேஸ் இதில் லீடாக நடித்திருக்கிறார்.

படத்தில் உள்ள மற்ற நடிகர்கள், சிறந்த அவுட்புட் கொடுத்த தொழில்நுட்பக் குழுவினர்கள் அனைவருக்கும் நன்றி. கிளைமாக்ஸ் போர்ஷனில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவரும் இணைந்து நடிக்கும்படியான ஒரு காட்சி. செட் போட அதிக பட்ஜெட் தேவைப்பட்டது. அரவிந்திடம் கேட்டபோது, தரமான படமாக வரவேண்டும், படத்தை யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக உடனே சம்மதித்தார். நடிகர்கள் தேதி கிடைத்ததும், இரண்டு நாட்களில் ஈவிபியில் பிரம்மாண்டமான செட் போட்டு அசத்தினார் கலை இயக்குநர் பாக்யராஜ். இந்த ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகர்களும் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

இந்தப் படத்தில் ஸ்ரீதர் மாஸ்டரும் சிறப்பான பாடலைக் கொடுத்துள்ளார். நிச்சயம் அந்தப் பாடல் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.

தயாரிப்பாளர் அரவிந்த்..

“இந்தத் தருணத்திற்காக நாங்கள் பல வருடம் காத்திருந்தோம். நண்பர்களாக நாங்கள் பேசி உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம்தான் இது. அமெரிக்காவில் பல வருடங்கள் வேலை பார்த்ததால், இந்தியாவை மிஸ் செய்ய ஆரம்பித்தேன்.

இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய காரணமும் அதுதான். அன்பு என்னுடைய சகோதரர் போன்றவர். அவர் இருக்கும் தைரியத்தில்தான் சினிமாவுக்கு வந்தேன். இவ்வளவு பெரிய விஷயத்தையும் தொடங்கினோம். ஆனால், இந்த மேடையில் அன்பு இல்லை. நிச்சயம் அவரது ஆசீர்வாதம் இருக்கும். நாங்கள் புதியவர்கள் என்பதால் யோகிபாபு, இனியா, மாரிமுத்து, பால சரவணன் என அனுபவசாலிகளை வைத்துக் கொண்டோம். மாரிமுத்து சார் எங்களுக்கு சிறப்பான ஆதரவைக் கொடுத்தார். அதை நாங்கள் மறக்க மாட்டோம். அவர் இந்நேரம் இருந்திருந்தால் இந்த மேடை இன்னும் பெரிதாகி இருக்கும். அவரை மிஸ் செய்கிறோம். பாலசரவணன், அஸ்வின், சென்றாயன், மகேஸ் என நடிகர்கள் அனைவரும் எங்களோடு நட்போடு பழகி படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளனர்.

இயக்குநர் டெனிஸூம் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டவர். எங்களை எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். தொழில்நுட்பக் குழுவினரும் ஆர்வமாக உழைத்துக் கொடுத்துள்ளனர். எங்கள் நிறுவனத்திற்கும் ஆர்வத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிக் கொடுக்க வேண்டும்” என்றார்.

தூக்குதுரை

இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத்…

“தயாரிப்பாளர் அன்பு மற்றும் நடிகர் மாரிமுத்து எங்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம்.

ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் அன்பு, அரவிந்த், வினோத் மூவரும் இந்தப் படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளனர்.

கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

தூக்குதுரை

Ajith fans will support Thookudhurai says Cool Suresh

யோகிபாபு – நான் – சென்றாயன் நாங்க ரொம்ப பிசி நடிகர்கள்… – பாலசரவணன்

யோகிபாபு – நான் – சென்றாயன் நாங்க ரொம்ப பிசி நடிகர்கள்… – பாலசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பால சரவணன்…

“இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு முக்கியமான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர்கள் மூன்று பேருமே உதவி இயக்குநர்கள் போல, இந்தப் படத்திற்காக இறங்கி வேலைப் பார்த்தார்கள். யோகிபாபு, நான், சென்றாயன் என எல்லோருமே பரபரப்பாக ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள்தான்.

எங்கள் காம்பினேஷன் காட்சியில் டேட்ஸ் பிரச்சினை வரும்போது, மற்ற பட இயக்குநர்களிடம் தன்மையாகப் பேசி பிரச்சினை வராமல் தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த்தான் ஒருங்கிணைத்தார்கள்.

சிறிய பட்ஜெட் படம் போல இல்லாமல், பெரிய பட்ஜெட் படத்திற்கு எப்படி செலவு செய்வார்களோ அதை எல்லாம் மறுக்காமல் தயாரிப்பாளர்கள் செய்தார்கள். படம் அவர்களுக்காகவே நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்”.

தூக்குதுரை

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம் …

“‘தூக்குதுரை’ படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. மீடியாவும் மக்களும் படத்திற்கு ஆதரவு தர வேண்டும். சினிமாவில் இருக்கக்கூடிய தயாரிப்பாளர்களில் 10% பேர் முழு நேரமாக சினிமா செய்து கொண்டிருக்கின்றனர். மீதமிருக்கும் 90 சதவீதம் பேர் சினிமாவை பார்த்து விரும்பி தாங்களும் அதில் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வத்தோடு தான் வருகிறார்கள்.

நானும் அப்படியானவன்தான். இந்த 90% பேர் தான் முக்கியமான, புது திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் படங்கள் வெற்றி பெற்றால் தான் பல திறமையானவர்களுக்கான வாய்ப்பு கிடைத்து பல நல்ல படங்கள் உருவாகும். இந்தப் படத்திற்கு அப்படியான பெரிய வெற்றிக் கொடுங்கள்”.

நடிகர் மகேந்திரன்…

“சின்ன வயதில் இருந்து கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிற மொழியில் உள்ளவர்கள் நம் தமிழ் சினிமாவை பெரிதாக பார்க்கிறார்கள். இங்கு பெரிய படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கிறது.

சின்ன பட்ஜெட் படங்களுக்குப் அதிக திரையரங்குகளோ, நல்ல டைமிங்கோ கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதில் நிறைய நடிகர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதில் நானும் ஒருவன். பெரிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களை வருடத்திற்கு இரண்டாவது தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஸ்ரீனிவாஸ் சார் சொன்னதுபோல அந்த 90% தயாரிப்பாளர்கள்தான் எல்லா மொழி சினிமாவையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால், தயவுசெய்து தியேட்டர் கொடுத்து படத்தை வெற்றிப் பெற வையுங்கள்”.

தூக்குதுரை

நடிகர் சத்யா…

“இந்தப் படம் நீங்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பாலசரவணன், சென்றாயன் என அனைவருமே கல்லூரி நண்பர்கள் போல படப்பிடிப்புத் தளத்தில் அவ்வளவு கலாட்டா செய்வார்கள். அன்பு சார், மாரிமுத்து சார் நம்மோடு இல்லை. நிச்சயம் அவர்களுடைய ஆசீர்வாதம் நமக்கு இருக்கும். படத்தை எல்லோரும் திரையரங்குகளில் 25 ஆம் தேதி பார்த்து வெற்றிக் கொடுங்கள்”.

உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா, “உத்ரா புரொடக்சன்ஸூக்கு ‘தூக்குதுரை’ தான் முதல் பெரிய படம். அந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அரவிந்த், வினோத், அன்பு, இயக்குநர் டெனிஸூக்கு நன்றி. படம் வெளியே கொண்டு வருவதில் நிறைய சிக்கல்கள் உள்ளது. படங்களுக்கு அதிக ஸ்கிரீன் கிடைப்பதில் கார்ப்பரேட்டுடைய ஆதிக்கம் உள்ளது. படங்களுக்கு மக்கள் வரவில்லை என்றால் கூட, திரையரங்குகளில் அதுபோன்ற படங்கள் தான் ஆக்கிரமித்து இருக்கிறது.

இருந்தாலும் நல்ல படங்கள் வரும்போது மக்களும் மீடியாவும் ஆதரவு கொடுக்கத் தவறுவதில்லை. கே.எஸ். ரவிக்குமார், சுந்தர்.சி போன்ற இயக்குநர்களுக்குப் பிறகு இப்போதுள்ள இயக்குநர்கள் யாரும் ஃபேமிலி எண்டர்டெயினரோடு கூடிய காமெடி படங்கள் இயக்குவதில்லை. அப்படியான கதையாக ‘தூக்குதுரை’ வந்திருக்கிறது. படம் வெளியான பின்பு நிச்சயம் இந்தப் படக்குழுவுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்திருக்கிறது. கார்ப்பரேட் கையில் இருக்கும் திரையரங்குகளை அனைத்து சங்கங்களும் சேர்ந்து முறைப்படுத்தி சின்னப் படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும். அது ‘தூக்குதுரை’ படத்தில் இருந்து நடக்க வேண்டும். நன்றி!”.

தூக்குதுரை

Yogibabu me Sendrayan we are busy actors says Bala Saravanan

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் என் மாணவர்… – டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் என் மாணவர்… – டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது..

“‘தூக்குதுரை’ என்னுடைய முதல் படம். தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்துக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

எடிட்டர் ஸ்ரீதர்…

“படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை. எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த மேஜிக் டிரைய்லரில் இருந்தது போல, நிச்சயம் படத்திலும் இருக்கும். திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

இசையமைப்பாளர் மனோஜ் கே.எஸ்., “தயாரிப்பாளர்கள், இயக்குநர், படத்தில் நடித்துள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படம் முழுக்க முழுக்க கமர்ஷியலாக உருவாகி இருக்கிறது. நீங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழும் அளவுக்கு படத்தின் கதையும் விஷூவல்ஸூம் வந்திருக்கிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தூக்குதுரை

டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்…

“‘தூக்குதுரை’ படத்தின் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர்.

எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் அரவிந்த், அன்பு, வினோத் என மூன்று பேருமே எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள். படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.

படக்குழுவினருக்கு வாழ்த்துகள்! படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்!”

நடிகர் கும்கி அஸ்வின், “இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நடிப்பு, நடனம் என நீண்ட நாள் கழித்து இந்தப் படம் எனக்கு நிறைவாக அமைந்துள்ளது”.

தூக்குதுரை

நடிகர் சென்றாயன்…

“படத்தின் டைட்டில் ‘தூக்குதுரை’ போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”.

தூக்குதுரை

Mahesh is my student says Sridhar

தேசத்தை உலுக்கிய சம்பவம் ‘மட்கா’..; நான்கு வேடங்களில் வருண் தேஜ்

தேசத்தை உலுக்கிய சம்பவம் ‘மட்கா’..; நான்கு வேடங்களில் வருண் தேஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் நடிப்பில், பலாசா 1978, ஸ்ரீ தேவி சோடா சென்டர் படப்புகழ் கருணா குமார் இயக்கத்தில், பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது “மட்கா”.

டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா, வைரா என்டர்டெயின்மென்ட்டின் சார்பில், ரஜனி தல்லூரியின் SRT என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து, இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் போடப்பட்டு, பரபரப்பாக நடந்து வருகிறது. மட்கா திரைப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன்,
பிரம்மாண்டமாக உருவாகிறது.

வருண் தேஜுவின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள் “மட்கா” திரைப்படத்தின் அறிமுகத்தை, ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், படத்திலிருந்து ஓப்பனிங் பிராக்கெட் என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கிராமபோனில் கதாநாயகன் இசையை வாசிப்பதை காட்டும் காட்சியுடன் இந்த வீடியோ துவங்குகிறது. பின் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் கதாப்பாத்திரங்களைக் காட்டுகிறது.

இதில் நவீன் சந்திரா கேங்ஸ்டராகவும், பி ரவிசங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகனின் சிறுவயதுப் பகுதி அவன் கபடி விளையாடுவதைக் காட்டுகிறது,

மட்கா

பின்னர் அவன் சூதாட்ட மாஃபியாவின் தலைவனாகிறான். அவன் ஒரு சிகார் புகைத்துக் கொண்டு, யாரிடமோ போனில் ‘ப்ராமிஸ்’ என்று சொல்வதோடு வீடியோ நிறைவுபெறுகிறது.

இந்த வீடியோ கிளிப்பில், வருண் தேஜ் முழுமையாகக் காட்டப்படவில்லை என்றாலும், மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் முழுமையான தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது.

அவரது ஆடை வடிவமைப்பு, 80களின் ஃபேஷன் பாணியை ஒத்திருக்கிறது. வருண் தன் கவர்ச்சிகரமான நடிப்பு மற்றும் மேனரிசம் மூலம் திரையில் அசத்துகிறார். அவர் பேசும் ‘பிராமிஸ்’ என்ற ஒரே வார்த்தை, மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1958 மற்றும் 1982 க்கு இடையில் நடக்கும் கதை என்பதால், 50 களில் இருந்து 80 கள் வரையிலான சூழலை மீண்டும் கச்சிதமாக உருவாக்கி இயக்குநர் கருணா குமார் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் A கிஷோர் குமார் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஆஷிஷ் தேஜா புலாலா ஆகியோரின் திறமையில் கடந்த காலத்தின் அழகியல் திரையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அற்புதம். தொழில் நுட்ப தரமானது, வெகு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த அறிமுக வீடியோ படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.

மட்கா

மட்கா படக்கதை முழு தேசத்தையும் உலுக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 24 வருட கதை என்பதால் வருண் தேஜ் இப்படத்தில் நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றுகிறார்.

வருண் தேஜ் ஜோடியாக நோரா ஃபதேஹி மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் நவீன் சந்திரா மற்றும் கன்னட கிஷோர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R எடிட்டராகவும், சுரேஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இத்திரைப்படத்தில் பல அதிரடி காட்சிகள் இருப்பதால், 4 ஃபைட் மாஸ்டர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.

மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

Varun Tej starrer Matka opening bracket video goes viral

RDX பட மலையாள நடிகரை ‘மெட்ராஸ்காரன்’ ஆக்கிய வாலி மோகன்தாஸ்

RDX பட மலையாள நடிகரை ‘மெட்ராஸ்காரன்’ ஆக்கிய வாலி மோகன்தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், SR PRODUCTIONS தயாரிப்பில், பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’

மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” !!

புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன் திரைப்படம்.

SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்க, புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.

மெட்ராஸ்காரன்

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.

தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் நாயகி மற்றும் துணை கதாப்பாத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

மெட்ராஸ்காரன்

Shane Nigam Mollywood star joins Madraskaaran

பொங்கல் விழாவை மகிழ்ச்சி பொங்க மக்களுடன் கொண்டாடிய இமான்

பொங்கல் விழாவை மகிழ்ச்சி பொங்க மக்களுடன் கொண்டாடிய இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்து தன்னுடைய பாடல்களால் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த இசையமைப்பாளர் D.இமான்.

முதலில் விளம்பரஙகளுக்கு இசையமைத்த அந்த இவர் பின்னர் சினிமாவில் இசையமைக்க தொடங்கினார். தற்போது 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

தமிழில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் நடத்திய பாட்டுப்போட்டி, நடன போட்டியில் கலந்துகொண்டு அங்குள்ளவர்களை மிகவும் சந்தோஷப்படுத்தி உள்ளார்.

D.இமான்

இவர் தனக்கென்று ஒரு TRUST ஆரம்பித்து, அதன் மூலமாக பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்தும், பல உதவிகளை தேடி போய் செய்தும் வருகிறார்.

இசையமைப்பாளர் இமான் அவர்கள் உசிலம்பட்டிக்கு சென்று அங்குள்ளவர்களை ஊக்குவித்தது மதுரை மாவட்ட உசிலம்பட்டி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விழாவை FRIENDS FILM FACTORY TEAM அவர்களும் BUTTERFLY NETWORK TEAM இருவரும் ஊருதுணையாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.

D.இமான்

Music Composer D Imman celebrated Pongal with Village peoples

More Articles
Follows