‘கைதி’-யை தொடர்ந்து ‘வீரம்’ ஹிந்தி ரீமேக்..; என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.?!

‘கைதி’-யை தொடர்ந்து ‘வீரம்’ ஹிந்தி ரீமேக்..; என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் ‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக் ‘போலா’ என்ற பெயரில் வெளியானது.

அஜய் தேவ்கான் இந்த படத்தை இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இது ஒரிஜினல் ‘கைதி’ படம் போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் செய்து இருப்பதால் இதனை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அஜித்தின் ‘வீரம்’ பட ஹிந்தி ரீமேக் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரிஜினல் வீரம் படம் போல இல்லாமல் இருப்பதால் இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.. ஒரு சிலர் பார்த்து பயப்படாதீங்க இது வீரம் ரீமேக் தான் என்று சொன்னால் நம்பவா போறீங்க.? எனவும் கிண்டல் எடுத்து வருகின்றனர்.

இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கி இசையமைத்துள்ளார்.

இதில் அஜித் வேடத்தில் சல்மான் கான், தமன்னா வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.

Get a sneak peek into the world of #KisiKaBhaiKisiKiJaanTeaser

https://t.co/c6zZu3Nw7x

@BeingSalmanKhan @VenkyMama @hegdepooja @IamJagguBhai @bhumikachawlat @boxervijender #AbhimanyuSingh @TheRaghav_Juyal @siddnigam_off @jassiegill @ishehnaaz_gill @palaktiwarii https://t.co/9ouYrgfVZ2

Netizens trolls KisiKaBhai KisiKiJaan Teaser

துருவ நட்சத்திரத்தை மீண்டும் கையில் எடுத்த கவுதம் மேனன். விரைவில் ரிலீஸ்

துருவ நட்சத்திரத்தை மீண்டும் கையில் எடுத்த கவுதம் மேனன். விரைவில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுதம் மேனன் தனது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மல்டிஸ்டாரர் திட்டத்தை மெதுவாக புதுப்பிப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தயாரிப்பு சிக்கல்களால் படம் தாமதமாகின. இந்த படத்தில் விக்ரம் தனது பகுதிகளுக்கு முன்னதாகவே டப்பிங் செய்தார்.

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆதாரங்களின்படி, ஜிவிஎம் தற்போது சென்னையில் ஆர் பார்த்திபனுடன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார் . சியான் விக்ரமின் பேட்ச் ஒர்க் பகுதிகள் தங்கலானை முடித்த பிறகு படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Gautham Menon planning to release his long delayed film with Chiyaan Vikram next?

கவுண்டமணி நாயகனாகும் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் / சந்தானம்.?

கவுண்டமணி நாயகனாகும் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் / சந்தானம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் கவுண்டமணியின் புதிய பட அறிவிப்பு வெளியானது.

கவுண்டமணி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘பழனிச்சாமி வாத்தியார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை செல்வ அன்பரசு என்பவர் இயக்குகிறார். இவர் ‘பேய காணோம்’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்த படத்தை கவுண்டமணியின் நீண்ட கால நண்பரான மதுரை செல்வம் தயாரிக்கிறார்.

விரைவில் இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கவுண்டமணியின் முன்னாள் மாணவர்களாக சிவகார்த்திகேயன் அல்லது சந்தானம் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

கவுண்டமணியின் படம் பற்றி கேள்விப்பட்டதுமே தானாகவே முன்வந்து இந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தாராம் யோகி பாபு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Sivakarthikeyan / Santhanam to join Goundamani next film?

எல்லோர் வீட்டிலும் சட்டப் புத்தகம்.; ‘ஹரா’ படக்குழுவினரின் குடியரசு தின வாழ்த்து

எல்லோர் வீட்டிலும் சட்டப் புத்தகம்.; ‘ஹரா’ படக்குழுவினரின் குடியரசு தின வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜனவரி 26.. இந்தியா முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்திய மக்கள்.. அரசியல் கட்சித் தலைவர்கள்.. பிரபலங்கள் திரைத்துறையினர் என பல்வேறு அமைப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோகன் நடிக்கும் ‘ஹரா’ பட குழுவினரும் வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘ஹரா’ படத்தை கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் மோகன், குஷ்பூ, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம் புலி ரயில் ரவி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகின்றனர்.

லியாண்டர் லீ மார்டி இசையமைக்க பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த படக்குழுவின் ட்விட்டர் பதிவில்…

‘இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த புத்தகங்கள், மாணவர்கள் முதல் ஒவ்வொரு இந்தியர்கள் வீட்டிலும் இருக்க வேண்டும்.

அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல.. நமது கடமையும் கூட!’ என்ற வாசகங்களுடன் அந்த பதிவில் உள்ளது.

மேலும் ‘ஹரா’ படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் மோகன் ஹிந்து – இஸ்லாமிய தோற்றத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Republic day wishes from Haraa team

மருத்துவமனையில் மனோபாலா அனுமதி.; நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்

மருத்துவமனையில் மனோபாலா அனுமதி.; நேரில் நலம் விசாரித்த பூச்சி முருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர் மனோபாலா.

இதுவரை 1000 படங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது இதய நோய் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் மனோபாலாவை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது மனோபாலா சிகிச்சை பெற்றதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் உற்சாகமாக உரையாடியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று ஜனவரி 26 மருத்துவமனையில் இருந்து மனோபாலா வீடு திரும்ப உள்ளார் என கூறப்படுகிறது.

Manobala admitted in hospital. Poochi Murugan who inquired about the well-being in person

பட்டைய கிளப்பும் ‘பதான்’.; இந்தியா முழுவதும் மிட் நைட் ஷோஸ்.; உலகெங்கிலும் 8000 திரைகள்

பட்டைய கிளப்பும் ‘பதான்’.; இந்தியா முழுவதும் மிட் நைட் ஷோஸ்.; உலகெங்கிலும் 8000 திரைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அலைமோதும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க இந்தியா முழுவதும் பதான் படத்திற்காக நள்ளிரவு 12.30 மணி காட்சிகளை இணைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸ்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பதான் இன்று வெளியாகி உள்ளதுடன், முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை புயல் போல அடித்து நொறுக்கி உள்ளது.

நாளை (ஜன-26) குடியரசு தின விடுமுறையாக என்பதால் படத்தை பார்க்க குவியும் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று முதல் நள்ளிரவு 12.30 மணி காட்சியை இந்தியா முழுவதும் திரையிடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 8,000 திரைகளில் மிகப்பெரிய அளவில் திரையிடப்படும் இந்திப் படம் என்கிற பெயரை பதான் திரைப்படம் பெற்றுள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் என நாட்டின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களை கொண்டுள்ளதுடன், பதான் திரைப்படம் ஆதித்ய சோப்ராவின் லட்சியமான ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகவும் உருவாகி உள்ளது.

பதான் படத்திற்கு உருவான எதிர்பார்ப்பு இதுவரை திரையுலகம் கண்டிராதது. படத்தின் டீசர், “பேஷரம் ரங்” மற்றும் “ஜூமே ஜோ பதான்” என்கிற இரண்டு பாடல்கள் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ட்ரைலர் என இந்தப்படம் தொடர்பாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட அனைத்துமே இணையதளத்தை அதிர வைத்தது.

அதுமட்டுமல்ல.. இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் இணைந்தது தான், இந்தப்படம் குறித்து இவ்வளவு எதிர்பார்ப்பு உருவாக மற்றுமொரு மிகப்பெரிய காரணம்..

ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேப்பி நியூ இயர் என இந்த இருவரும் இணைந்து நடித்த படங்களின் மூலம், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிகம் விரும்பப்படும் குறிப்பிட்ட சில திரை ஜோடிகளில் ஒன்றாகவே இவர்களும் கருதப்படுகின்றனர்.

‘Pathan’ Mid Night Shows All over India.; 8000 screens worldwide

More Articles
Follows