விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி கொடுக்க காத்திருக்கும் இயக்குனர்.; கண்டுக் கொள்வாரா தளபதி.?

விஜய்க்கு மீண்டும் ஒரு வெற்றி கொடுக்க காத்திருக்கும் இயக்குனர்.; கண்டுக் கொள்வாரா தளபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால், விஜய், காஜல் அகர்வால் இணைந்து நடித்த ‘ஜில்லா’ படத்தை இயக்கியவர் நேசன்.

இந்த படம் 2014ல் அஜித்தின் ‘வீரம்’ படத்துடன் மோதினாலும் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

ஆனால் ‘ஜில்லா’ பட இயக்குனர் நேசனுக்கு அதன் பிறகு எந்த வாய்ப்புகளும் வரவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

‘தனது நண்பர் நேசன் விஜய்க்காக ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இந்த கதையை கேட்டால் விஜய் இந்த கதையில் நடிக்க நிச்சயமாக ஒப்புக்கொள்வார்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பத்ரி வெங்கடேசன்

Will Vijay listen script from Jilla Director

விஐபி பட டயலாக்கை பேசிய ‘வாத்தி’.; ஆந்திராவிலும் அசத்திய தனுஷ்

விஐபி பட டயலாக்கை பேசிய ‘வாத்தி’.; ஆந்திராவிலும் அசத்திய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘வாத்தி’.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இந்த படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் வாத்தி / சார் பட டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஆந்திராவில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தெலுங்கு ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கலந்து பேசினார்.

அவர் பேசியதாவது…

“இது என்னுடைய முதல் நேரடி தெலுங்கு படம். எனக்கு தெலுங்கு சரளமாக பேச வராது. எனவே தமிழில் பேசுகிறேன்.

வாத்தி பட கதை தமிழ்நாட்டிற்கும் ஆந்திராவுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் நடக்கும் கதைக்களம்.

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.

அதன் பின்னர் ரசிகர்கள் அவரை விஐபி பட டயலாக்கை பேச சொல்லி கூச்சலிட்டனர்.

நான் தமிழில் அந்த வசனத்தை பேசுகிறேன் என சொல்லி… “அமுல் பேபி.. நீ இந்த ரகுவரனை வில்லனாதானே பார்த்திருக்க.. இனிமே ஹீரோவா பார்ப்ப..” என்று பேசினார்.

Dhanush mass speech at Vaathi Sir Trailer Launch

‘LEO’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா…!

‘LEO’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய நடிகை த்ரிஷா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துவருகிறார்.

இதில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது ‘லியோ’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ளது.

இந்நிலையில், காஷ்மீரின் வானிலையின் காரணமாக நடிகை டெல்லிக்கு சென்றுவிட்டார்.

லியோ

காஷ்மீரில் வானிலை -1°C முதல் -3°C வரை நிலவுகிறது மற்றும் த்ரிஷாவின் உடல்நிலைக்கு தட்பவெப்ப நிலை பொருந்தவில்லை. எனவே, த்ரிஷா காஷ்மீரில் இருந்து வெளியேறிவிட்டார்.

மேலும், விரைவில் அவர் மீண்டும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பில் இணைவார்.

Trisha has left the Kashmir schedule of ‘LEO’

மீண்டும் போலீஸாக மாறும் ரஜினிகாந்த்.!? இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் போலீஸாக மாறும் ரஜினிகாந்த்.!? இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது, விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி, மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய நட்சத்திரப் பட்டாளத்தில் உள்ளனர்.

நெல்சன் இயக்கி பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

அடுத்ததாக, ரஜினி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் அவர் சக்திவாய்ந்த துணை வேடத்தில் நடிக்கிறார்.

ரஜினியின் 171வது படமான ‘தலைவர் 171’ படத்தை ஜெய் பீம் புகழ் டி.ஜே.ஞானவேல், ரஜினிகாந்துடன் ஒத்துழைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாங்கள் தெரிவித்தோம்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்

Rajinikanth to play a police officer in Thalaivar 171

விஜய் ஸ்ரீயின் ‘பவுடர்’ கொடுத்த பாப்புலாரிட்டி.; ஹீரோவானார் விக்கி

விஜய் ஸ்ரீயின் ‘பவுடர்’ கொடுத்த பாப்புலாரிட்டி.; ஹீரோவானார் விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வித்யா பிரதீப், நிகில் முருகன், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி, அனித்ர நாயர், ஆதவன், சில்மிஷம் சிவா, வையாபுரி, விக்னேஷ் நடித்த திரைப்படம் ‘பவுடர்’.

கடந்தாண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பாராட்டை பெற்றது.

இதில் வையாபுரியுடன் நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்றவர் விக்கி என்ற விக்னேஷ்.

இந்த நிலையில் தற்போது வங்கி ஹீரோவாகியுள்ளார்

அதன் விவரம் வருமாறு…

Evolution entertainment நிறுவனம், Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் சண்டே படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் முதல் முறையாகத் தமிழில் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகிறது “சண்டே” திரைப்படம்.

இப்படத்தின் கதை திரைக்கதையை இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இருவருமாக இணைந்து இப்படத்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆதித்யா டிவி புகழ் வைக்க என்ற விக்னேஷ் ராமமூர்த்தி நாயகனாக அறிமுகமாகிறார். நிவேதா & மித்ரா நாயகிகளாக நடிக்கின்றனர்.

முன்னணி நட்சத்திரங்கள் கஜராஜ், வின்சென்ட் அசோகன், தர்மா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஒரே கட்டமாக ஊட்டியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திரையில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புது அனுபவமாக இப்படம் இருக்கும்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் : Evolution entertainment
இணை தயாரிப்பு : Blueberry studios

எழுத்து & இயக்கம் : சதீஷ் கீதா குமார் & நந்தினி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு , படத்தொகுப்பு : சதீஷ் கீதா குமார்

இசை : செந்தமிழ்

பாடல்கள் : கவி கார்கோ

ஸ்டன்ட் : டேன்ஜர் மணி

கலை : தினேஷ் மோகன்

உடைகள் : அக்‌ஷியா & விஷ்மியா

மேக்கப் – பிரின்ஸ் பிரேம்

Powder fame Vikki @ Vignesh plays lead in Sunday

சண்டே

Vignesh plays lead in Sunday movie

‘வசந்த முல்லை’ படத்துல ஒரு சீன் மிஸ்ஸானாலும் கன்ப்யூசன் ஆகும் – சிம்ஹா

‘வசந்த முல்லை’ படத்துல ஒரு சீன் மிஸ்ஸானாலும் கன்ப்யூசன் ஆகும் – சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் பாபி சிம்ஹா தயாரித்து நடித்துள்ள படம் ‘வசந்த முல்லை’.

பிப்ரவரி 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளரை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது தயாரிப்பாளர் & நாயகன் சிம்ஹா பேசுகையில்….

” சில ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திக்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கடந்த ஆண்டு ‘மகான்’ திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று ‘வசந்த முல்லை’ வெளியாகிறது.

தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன்.

பத்திரிக்கையாளர்களின் கரங்களின் மூலம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டதை பெருமிதமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் முதல் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான். மக்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதில் உங்களுடைய எழுத்துக்களுக்கும், கருத்துகளுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.

கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வர சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, ‘வசந்த கோகிலா’ எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

சிவ ராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும், அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.

‘டிஸ்கோ ராஜா’ எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ராம் தல்லூரி எனக்கு அறிமுகமானார். நட்புடன் பழகத் தொடங்கியவுடன், படங்களில் இணைந்து பணியாற்றலாமா? என கேட்டார். இணைந்து பணியாற்றலாம் என்று சம்மதம் தெரிவித்து, இயக்குநர் ஒருவரை தேர்வு செய்து படத்தின் பணிகளைத் தொடங்கினோம்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கதை முழுமையாகாததால், வேறு கதைகளை தேடத் தொடங்கினோம். நான் இயல்பாகவே வேகமாக டக் டக்குன்னு முடிவெடுப்பேன். அந்தத் தருணத்தில் முகநூலில் குறும்படம் ஒன்றை பார்த்தேன்.

அருண் என்ற நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த குறும்படம் அது. நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருந்தது. அதன் இயக்குநரான ரமணன் புருஷோத்தமாவை முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு சந்தித்தேன். அதன் பிறகு அவர் 2014ஆம் ஆண்டு முதல் எனக்காக ஒரு கதையினை தயார் செய்து, இணைந்து பணியாற்றலாமா..! என செய்தி அனுப்பியிருந்தது தெரிய வந்தது.

அவரிடம், ‘முதல் படைப்பாக இதனை உருவாக்க வேண்டும் என்றளவில் ஏதேனும் கதைகள் இருக்கிறதா?’ என்று கேட்டேன். ஒரே ஒரு வாக்கியத்தில் ‘வசந்த முல்லை’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு பிடித்திருந்தது.

உடனடியாக தயாரிப்பாளர் ராம் தல்லூரியைத் தொடர்பு கொண்டு கதையும், கதை சுருக்கத்தையும் விவரித்தேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அதே தருணத்தில் ரேஷ்மிக்கும் இந்த கதை பிடித்திருந்தது.

பின்னர் படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினோம். மிகவும் அழுத்தமான திரைக்கதை. படம் தொடங்கி 20 நிமிடத்திற்கு பிறகு ஒரு காட்சியை காணத் தவறினாலும், குழப்பம் ஏற்படலாம். ஏனெனில் இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ராம் தல்லூரி உதவியுடன் ஒரு வணிக ரீதியான திரைப்படத்தை வழங்கி இருக்க முடியும். ஆனால் புதுமையான விசயத்தை நேர்த்தியாக சொல்ல முடியும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் ‘வசந்த முல்லை’யை உருவாக்கி இருக்கிறோம்.

ஒரே இரவில் நடைபெறும் கதை என்பதால், மூணாறு போன்ற மலை பிரதேசத்தில் நேரடியாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பை நடத்தலாம் என திட்டமிட்டோம். ஆனால் காட்சிப்படி இரவு முழுதும் மழையில் நனைந்து கொண்டிருக்க வேண்டும். இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதனால், சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம்.

அரங்கம் அமைத்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டதால்… அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த இயலாத சூழல் உருவானது. பிறகு மீண்டும் அரங்கத்தை மறுசீரமைப்பு செய்து படப்பிடிப்பு நடத்தினோம். இதனால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

முன்னதாக உயிர் நீத்த பிரபல பின்னணி பாடகி ‘பத்ம பூஷன்’ வாணி ஜெயராம் மற்றும் இயக்குநரும், நடிகருமான டி.பி. கஜேந்திரன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

வசந்த முல்லை

Bobby Simha speech at vasantha mullai trailer launch

More Articles
Follows