தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க,
மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது.
மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ‘ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’, ‘ஐ ஆம் ஏ பாதர்’ என இரண்டு மலையாள படங்களை இயக்கிய ராஜு சந்திரா, தனது மூன்றாவது படமாக தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்!
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்திரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார்.
விரைவில் திரைக்கு வர, தயாராகி வருகிறது “பிறந்தநாள் வாழ்த்துகள்”!
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டின் முன்பு இருந்து மது அருந்துவது போல புகைப்படம் உள்ளது.. அதன் கீழே ‘மகிழ்ச்சியாக வாழ..’ என்ற வாசகம் இடம் பெற்று இருக்கிறது.. இது பல சர்ச்சைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.
Appukutty new movie title Pirandhanaal Vazhuthukal