மீண்டும் ஆலுமா டோலுமா கூட்டணி.; அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

மீண்டும் ஆலுமா டோலுமா கூட்டணி.; அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகும் ‘துணிவு’ படத்தை இயக்கி வருகிறார் வினோத்.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

‘துணிவு’ படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ‘சில்லா சில்லா’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார் என்பதனை ஜிப்ரான் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் அனிருத் பாடிய ‘ஆலுமா டோலுமா’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Anirudh sung Chilla Chilla for AJITH in Thunivu

Once A King Always A King.; மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம்.; முதன்முறையாக ஏஆர் ரஹ்மான்

Once A King Always A King.; மீண்டும் இணைந்த கமல் – மணிரத்னம்.; முதன்முறையாக ஏஆர் ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை இந்தியளவில் கொண்டு சென்றவர்களில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தை முதலிடத்தில் வைக்கலாம்.

இவர்கள் இருவரும் புதிய யுக்திகளை கையாண்டு தமிழ் சினிமாவின் தரத்தை இந்திய அளவில் உயர்த்தினர்.

இன்றளவிலும் பாலிவுட் பிரபலமான ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படம் 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த ஈடு இணையற்ற கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. கமல்ஹாசனின் 234 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை கமலும் மணிரத்னமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கமல் நடிக்க மணிரத்னம் இயக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.

மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். அதுபோல கமலின் இந்தியன், தெனாலி உள்ளிட்ட படங்களுக்கும் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஆனால் 35 வருடங்களுக்கு பிறகு கமல் மணிரத்னம் இணையும் படத்திற்கு ரகுமான் இசையமைப்பது இதுவே முதன் முறையாகும்.

2024ல் இந்த படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நாளை நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் இன்று மாலை இந்த அறிவிப்பை ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்று இருக்கிறார்.

இந்தப் பட அறிவிப்பில் Once A King Always A King என குறிப்பிட்டுள்ளனர்.

After 35 years Kamal and Maniratnam join together

#KH234 #OnceAKingAlwaysAKing

#Ulaganayagan #KamalHaasan

@ikamalhaasan #ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM

சீரியஸ் காட்சிகளை சிரிக்க வைத்தீர்கள் – ரவீனா.; உங்கள் திறமைக்கே அந்த வாய்ப்பு – பிரதீப்

சீரியஸ் காட்சிகளை சிரிக்க வைத்தீர்கள் – ரவீனா.; உங்கள் திறமைக்கே அந்த வாய்ப்பு – பிரதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதிப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய ‘லவ் டுடே’ படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியானது.

இந்த படத்திற்கு முதல் நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துள்ளன.

இதில் இவானா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் மட்டுமே வந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ரவீனா தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் , “‘லவ் டுடே’ படம் வெற்றியடைந்துள்ளது. இதில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தை எல்லோரும் தங்கள் கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டாடுகிறார்கள். அதேசமயம் சிந்திக்கவும் வைத்துள்ளீர்கள், அது மிகவும் முக்கியமான ஒன்று. வாழ்த்துகள். யோகி பாபு சாருக்கு நன்றி. சீரியஸ் காட்சிகளிலும் கூட ‘ஆக்ஷன்’ என்று சொன்னவுடன் என்னைச் சிரிக்க வைத்தீர்கள். இதனால் படப்பிடிப்பின் போது நான் ரீடேக்ஸ் வாங்கினேன். படக்குழு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு இயக்குநர் பிரதீப், “உங்களைப் போன்ற திறமைசாலிக்கு வாய்ப்பளித்ததில் எனக்குத்தான் மகிழ்ச்சி” என பதில் பதிவிட்டுள்ளார்.

இவை தற்போது வைரலாகி வருகிறது.

Raveena & Pradeep talks about Love Today response

ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! – என்ன குழந்தை?

ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! – என்ன குழந்தை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகர் ரன்பீர் மற்றும் நடிகை ஆலியா பட் இருவரும் பல வருடங்களாக காதலித்தனர்.

பிறகு,இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர் .

திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜூன் மாதம் ஆலியா தனது கர்ப்பத்தை அறிவித்தார்.

இந்நிலையில், இன்று மும்பையில் உள்ள HN Reliance மருத்துவமனையில் ஆலியா பட்டுக்கு பிரசவம் நடைபெற்று இருக்கிறது.

பிரசவத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது என கூறப்படுகிறது.

மேலும்,ரன்பீர் – ஆலியா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்ததால், இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

Ranbir Kapoor and Alia Bhatt couples born a baby

‘பொன்னியின் செல்வன்’ வெற்றி விழாவிற்கு த்ரிஷா வராததற்கு காரணம் இதுதான்?!

‘பொன்னியின் செல்வன்’ வெற்றி விழாவிற்கு த்ரிஷா வராததற்கு காரணம் இதுதான்?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் தயாரித்து இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் லைக்கா சுபாஷ்கரன் இயக்குனர் மணிரத்னம் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி பங்கேற்றனர்.

ஆனால் நாயகி த்ரிஷா இந்த விழாவிற்கு வரவில்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

அண்மையில் வெளிநாட்டுக்கு திரிஷா சென்ற போது அங்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் தனது பயணத்தை செய்து விட்டு இந்தியா திரும்பி உள்ளார்.

ஆனாலும் டாக்டர்கள் அறிவுறுத்தல் படி அவர் சிறிது ஓய்வு எடுக்க வேண்டியுள்ளதால் அவரால் இந்த விழாவிற்கு வர முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகை த்ரிஷா காலில் கட்டுடன்வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..

விபத்தை உறுதி செய்யும் வகையில், த்ரிஷாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Here is reason why Trisha not participated in PS1 Success meet

தலைமுறை இடைவெளி – காதல் – காமம் குறித்து சொல்லும் ‘சிக்லெட்ஸ்’

தலைமுறை இடைவெளி – காதல் – காமம் குறித்து சொல்லும் ‘சிக்லெட்ஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திர நடிகர்களான அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ் ஆகியோரின் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாத்விக் வர்மா, தமிழில் முதன்முறையாக கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை முன்னணி நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஸ்ரீகாந்த் அடாலாவின் இணை இயக்குநரும், ‘திறந்திடு சிசே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா கதையின் நாயகர்களில் ஒருவராக நடிக்கிறார்.

இவர் ‘பாகுபலி 1’ மற்றும் ‘எஃப் 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ‘வலிமை’ படத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜாக் ராபின்சன் மற்றொரு கதையின் நாயகராக நடித்திருக்கிறார்.

நடிகைகள் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.

‘வலிமை’ மற்றும் ‘துணிவு’ படப்புகழ் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.

டீன்ஸ் டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ். எஸ். பி. ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றது. தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே ஏற்படும் தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாகி இருக்கிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் காதல் குறித்தும், காமம் குறித்தும் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கும், இது தொடர்பாக அவர்களுடைய பெற்றோர்களின் நிலைப்பாட்டிற்கும் இடையே உள்ள கருத்தியல் இடைவெளியை சுவாரசியமான சம்பவங்களுடன் சிக்லெட்ஸில் விவரித்திருக்கிறோம்.

இதனால்தான் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லேனையும் இடம்பெற வைத்திருக்கிறோம். இந்த படத்தின் படபிடிப்பு தமிழகம், விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ” என்றார்.

‘சிக்லெட்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் தோற்றம்.. பின்னணியில் இடம் பெற்றிருக்கும் வண்ணங்கள்.. இளைய தலைமுறையின் எண்ணங்களை பிரதிபலிப்பதால் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Chiclets movie about Love Lust and Generation gap

More Articles
Follows