தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரகுமான் நடித்த `துருவங்கள் 16′ என்ற படத்தின் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பாரக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
இவர் அடுத்த இயக்கவுள்ள படத்திற்கு `நரகாசூரன்’ என தலைப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.
ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதில் மீசைய முறுக்கு படப்புகழ் நாயகி ஆத்மிகாவும் இணைந்து இருக்கிறார்.
கௌதம் மேனனின் ஒண்றாகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதன் சூட்டிங் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஊட்டியில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.
Aathmika teams up with Arvindswamy for Naragasooran