தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘துருவங்கள் 16′.
இதனையடுத்து இதே இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.
ரோன் ஈதன் யோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அரவிந்த் சாமி, இந்ரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில்,இப்படத்திற்கு சென்சாரில் யூ/ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.
இந்த தகவலை கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில் தெரிவிக்க, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், “எப்போது படம் வெளியாகும்? உங்களுடைய ‘துருவங்கள் 16’ படத்திற்கு நான் பெரிய ரசிகன்” என பதிலளித்துள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த கார்த்திக் நரேன், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.
Why Anurag Kashyap is waiting for Karthick Narens Naragasooran