நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தின் புதிய அப்டேட்

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படத்தின் புதிய அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் அரவிந்த் சாமி, பிரியாமணி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அறிவித்த படக்குழு, இயக்குனர் வெங்கட் பிரபு கடைசியாக ‘கட்’ என்று அழைக்கும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், ‘கஸ்டடி’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கஸ்டடி

Naga Chaitanya’s ‘Custody’ shooting has been completed

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லட்சுமி மேனன்

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஆதியும், இயக்குனர் அறிவழகனும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சப்தம்’ என்ற திகில் படத்துக்காக இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

இப்படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்தது.அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் திகில் படத்தின் செட்டில் இணைந்துள்ளார்.

லட்சுமி மேனன் ‘சப்தம்’ படத்தில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சப்தம் படத்தொகுப்பில் இணைந்த திறமையான & அழகான லட்சுமிமேனனை வரவேற்கிறோம்” என்று எழுதினார்.

Lakshmi Menon joins the sets of Sabdham

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’.

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம் 500 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்க நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் சென்னையில் நடந்தது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படத்தின் நடிகர்கள் படத் தொகுப்புகளில் இருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.

மேலும், தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

‘Chandramukhi 2’ shooting has been completed

துளசி வாசமிக்க ஆணுறை வேணும்.; ‘சிக்லெட்ஸ்’ ட்ரைலரில் 2K KIDS சீக்ரெட்ஸ்

துளசி வாசமிக்க ஆணுறை வேணும்.; ‘சிக்லெட்ஸ்’ ட்ரைலரில் 2K KIDS சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா, கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘சிக்லெட்ஸ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘திறந்திடு சிசேம்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’.

எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் ‘வலிமை’ ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிக்லெட்ஸ்

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார்.

‘துணிவு’ விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை ராஜு மேற்கொண்டிருக்கிறார்.

டீன்ஸ் டிராமா ஜானரில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னோட்டத்தில் காமமும், இளமை குறும்பும் ததும்பும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

அதிலும் ஒரு இளம் பெண், ‘துளசி வாசமிக்க ஆணுறை கிடைக்குமா?’ என கேட்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், இன்றைய இளம் தலைமுறையின் மனநிலையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது. அத்துடன் பெற்றோர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இடையே காதலிப்பது தொடர்பான கருத்து மோதல்களும் இடம் பிடித்திருக்கிறது.

மேலும் இப்படத்தின் டைட்டிலுடன் ‘2k கிட்ஸ்’ என்ற டேக்லைன் இணைக்கப்பட்டு இருப்பதால், இதற்கு இணையவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

https://youtu.be/-kRrofblYco

சிக்லெட்ஸ்

Chiclets 2K Kids Movie Trailer released

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடித்த ‘சூர்ப்பனகை’ ரிலீஸ் அப்டேட்

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா நடித்த ‘சூர்ப்பனகை’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸின் ராஜ்சேகர் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடித்த ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளை SP சினிமாஸ் இப்போது கைப்பற்றியுள்ளது.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், SP சினிமாஸின் கோல்டன் டச் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறது. ‘சூர்ப்பனகை’ படத்திற்கும் இதன் மூலம் சிறப்பான கவனம் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

ஃபேண்டசி- த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட ‘சூர்ப்பனகை’ திரைப்படம், 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். சில தனித்துவமான பழங்கால பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொல்பொருள் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார்.

இது சில மர்மமான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

உலகளாவிய வெளியீடு: SP சினிமாஸ்,
தயாரிப்பு: ராஜ் சேகர் வர்மா,
தயாரிப்பாளர்: ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்,
இயக்குநர்: கார்த்திக் ராஜு,
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவாளர்: கோகுல் பெனாய்,
படத்தொகுப்பு: சாபு ஜோசப்,
கலை இயக்குநர்: சீனு,
சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்புராயன்,
பாடலாசிரியர்: சாம் சிஎஸ்,
நடனம்: ஷெரிப்,
வண்ண மேற்பார்வையாளர்: க்ளென் காஸ்டினோ,
திட்ட வடிவமைப்பாளர்: கே. சதீஷ் (சினிமாவாலா),
கிரியேட்டிவ் ஹெட்: அஷ்வின் ராம்,
ஒலிக்கலவை: டி.உதய் குமார் (நாக் ஸ்டுடியோஸ்),
DI: ஃபயர் ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்,
கலரிஸ்ட்: ஸ்ரீகாந்த் ரகு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஜெயலட்சுமி,
வடிவமைப்பு: Tuney 24AM,
தயாரிப்பு நிர்வாகி: கே.ஆர்.பாலமுருகன்

Regina starrer Soorpanagai directed by Caarthick Raju movie update

விக்கியை வீசி எறிந்த அஜித்.; விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹீரோவை இணைக்க திட்டம்.?

விக்கியை வீசி எறிந்த அஜித்.; விஜய்சேதுபதியுடன் சூப்பர் ஹீரோவை இணைக்க திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் 62வது படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்குவார் என முன்பே அறிவிக்கப்பட்டது.

ஆனால் படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி நிர்பந்தம் ஏற்பட்டதாலும் அதற்கு இயக்குனர் ஒத்து வரவில்லை என்பதாலும் இயக்குனரை படக்குழு நீக்கியது.

தற்போது அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கடுப்பான விக்னேஷ் சிவன் அடுத்து அதிரடி வெற்றி கொடுக்க புதிய திட்டங்களை தீட்டி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடிப்பார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் மற்றொரு ஹீரோ கேரக்டரில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதனை் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளன.

பிரதீப் ரங்கநாதன்

Vignesh Shivan with Vijay Sethupathi and Pradeep Ranganathan

More Articles
Follows