சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

சென்னை முதல் காரைக்கால் வரை ‘திருவின் குரல்’.; வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 24’ படத்திற்கு ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இதில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார்.

ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து வெளியாகும்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ஹரிஷ் பிரபு எழுதி இயக்குகிறார்.

இசை – சாம் சி.எஸ்.,
ஒளிப்பதிவு – சின்டோ போடுதாஸ்,
படத்தொகுப்பு – கணேஷ் சிவா,
கலை – இ.தியாகராஜன்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன், பாண்டம் பிரதீப்,
பாடல் வரிகள் – உமாதேவி, கருப்பன்,
ஆடை வடிவமைப்பாளர் – டினா ரொசாரியோ,
ஒப்பனை – ஆர்.சீரலன்,
ஒலி வடிவமைப்பு – பிரதாப்,
ஒலிக்கலவை – டி.உதயகுமார்,
VFX – ஆர். ஹரிஹர சுதன்,
ஸ்டில்ஸ் – மோதிலால்,
DI – இன்ஃபினிட்டி மீடியா,
கலரிஸ்ட் – சண்முக பாண்டியன்.எம்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
டைரக்ஷன் டீம் – கிஷோர் கே.குமார், ஹரி பிரசாத் வி,
தயாரிப்பு நிர்வாகி – கே.ஆர்.பாலமுருகன்,
சீனியர் எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன்ஸ் – சந்திரசேகர் வி,
நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன்.

லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜிகேஎம் தமிழ் குமரன்

‘Thiruvinkural’ first Look Poster released

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

பெண்களின் அதிகாரம் & உரிமையை உரக்கச் சொன்னது ‘அயலி’.. – சிங்கம் புலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

எனவே நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

அப்போது நடிகை அபி நக்ஷத்ரா பேசியதாவது…

”என்னுடைய நடிப்பை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. என்னைத் தமிழ் செல்வி கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கும் இந்த செய்தியை மற்றவர்களிடமும் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி. எனக்குப் பக்கபலமாக இருந்த இயக்குநர் முத்துக்குமார் சாருக்கும் மொத்த டெக்னிகல் குழுவிற்கும் எனது நன்றி” என்றார்.

நடிகர் சிங்கம்புலி கூறியதாவது…

“அயலியை ஊக்குவித்து அதை மக்களிடையே கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. பெண்களின் அதிகாரத்தை அவர்களது உரிமையையும் உரக்கச் சொல்லி இருக்கிறது இந்த அயலி.

என்னையும் இந்த வெற்றி தொடரில் பங்களிக்க வாய்ப்பளித்த தயாரிப்புக் குழுவிற்கும் ஜீ5 தளத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் சச்சின் மற்றும் படக்குழுவினர் சரியான திட்டத்தை வகுத்து அதைச் சுமுகமாக நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளனர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் முத்துக்குமார் கூறியதாவது…

”இந்த கதையை நம்பிய ஒட்டு மொத்த குழுவுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் முழு மனதோடு இதனை ஏற்றுக் கொண்ட பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றிகள். இதில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் நன்றி.

இந்த படத்தில் சிறு சிறு காட்சிகளில் நடித்தாலும் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணித்து நடித்தனர். தயாரிப்பாளரான Zee5 குழு இதனை முழுதாக நம்பியதால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. இந்த தொடரில் வரும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகத் தேர்வு செய்து அதைப் பலரிடமும் கொண்டு சென்ற பத்திரிகை ஊடக நண்பர்களைப் பாராட்டி நன்றி கூறுகிறேன்” என்றார்.

Actor Singam Puli praises Ayali web series

கேரள எல்லையை தாண்டிய ‘இரட்டா’..; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ்

கேரள எல்லையை தாண்டிய ‘இரட்டா’..; இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜோஜு ஜார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘இரட்டை’.

இரட்டை சகோதரர்களான வினோத் மற்றும் பிரமோத் ஆகியோரின் கதையை சொல்லும் இப்படம் பல சஸ்பென்ஸ்களை மறைத்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படம் மலையாளத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜோஜு ஜார்ஜ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் என்ற பெருமையை ‘இரட்டா’ பெற்றுள்ளது.

சஸ்பென்ஸ் காட்சிகள் மற்றும் எதிர்பாராத க்ளைமாக்ஸ் கொண்ட இப்படம் பிப்ரவரி 17 முதல் கேரளாவுக்கு வெளியே வெளியாகிறது.

மற்ற படங்களில் இருந்து ‘இரட்டா’ வித்தியாசமானது, இதுவரை நாம் பார்த்த போலீஸ் கதையோ, காவல் நிலையம் சார்ந்த படமோ இது இல்லை.

இப்படத்தின் கதாநாயகியாக தமிழ் – மலையாள நடிகை அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை ஜோஜு ஜார்ஜின் அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ், மார்ட்டின் பிரகாட் பிலிம்ஸ் மற்றும் சிஜோ வடகன் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜோஜு ஜார்ஜைப் பற்றி சொல்லவே வேண்டாம், அவர் தனது கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் நடிகர். சில தமிழ் படங்களிலும் இவர் நடித்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

ஜோஜு ஜார்ஜின் கேரியரில் ‘இரட்டா’ படம் இன்னொரு திருப்புமுனை என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்ரிந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபுமோன், அபிராம் ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘இரட்டா’ படத்தின் ஒளிப்பதிவை சமீர் தாஹிர், ஷைஜு காலித், கிரீஷ் கங்காதரன் ஆகியோருடன் ஒளிப்பதிவுத் துறையில் பணியாற்றிய விஜய் கையாண்டுள்ளார். அன்வர் அலியின் பாடல் வரிகளுக்கு ஜேக்ஸ் பிஜோ இசையமைத்துள்ளார்.

இவர் ரசிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். மனு ஆண்டனி இப்படத்திற்கு எடிட்டராக பணியாற்றி உள்ளார். கலை திலீப் நாத், ஆடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒப்பனை ரோனெக்ஸ். சங்கதானம் கே ராஜசேகர், மார்க்கெட்டிங் & மீடியா பிளான் அப்ஸ்குரா.

இரட்டை

Joju Georges super hit Iratta releases out of Kerala

‘அயலி’-க்கு கிடைத்த வரவேற்பு புது பெஞ்ச்மார்க்… – வசனகர்த்தா சச்சின்

‘அயலி’-க்கு கிடைத்த வரவேற்பு புது பெஞ்ச்மார்க்… – வசனகர்த்தா சச்சின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

எனவே நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்..

அப்போது வசனகர்த்தா சச்சின் கூறியதாவது…

”ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது.

எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது.

ஜீ5 நிறுவனத்தின் கௌசிக் சார், விவேக் சார், ஷாம் சார் மற்றும் தயாரிப்பாளர் குஷ்மாவதி அவர்களுக்கு நன்றி, மேலும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் ஒட்டு மொத்த குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொடரைப் பற்றி நல்ல ரீவியூ எழுதிய பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில்…

“விலங்கு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. விலங்கு மற்றும் அயலி போன்ற சிறப்பான படைப்புகளில் என்னையும் ஒரு பகுதியாக மாற்றியதற்காக ஜீ5 குழுவிற்கு நன்றி. இந்தத் தொடரிற்குக் கிடைத்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

அயலி-க்கு ஒரு பெரிய ரீச் கிடைக்க உதவிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் இசையமைப்பாளர் ரேவா ஆகிய இருவரும் தான் இந்த தொடரின் வலுவான தூண்கள். இந்தத் தொடரில் பணியாற்ற வாய்ப்பை வழங்கிய ஜீ5 இன் கௌசிக் சார் மற்றும் படக்குழுவிற்கும் நன்றி” என்றார்.

நடிகை காயத்ரி பேசுகையில்…

“ அயலியை ஊக்குவித்து ஆதரித்த பத்திரிகை-ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்தத் தொடரில் பணிபுரிவது படக்குழுவில் உள்ள அனைவருக்கும் முழு வாழ்நாள் திருப்தியைக் கொடுத்துள்ளது. இந்தத் தொடரை இவ்வளவு பரந்த அளவில் பிரபலப்படுத்திய ஜீ5 க்கு நன்றி . முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து இந்தத் தொடரைப் பற்றி முழு குழுவினரும் பாஸிடிவாகவே உணர்ந்தோம், அது இப்போது மக்களிடத்திலும் பிரதிபலித்துள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் லிங்கா பேசுகையில்…

“அயலியின் ஒவ்வொரு எபிசோடையும் பாராட்டுவதில் பத்திரிகைகளும், ஊடக நண்பர்களும் மகத்தான பணி செய்துள்ளனர். அயலிக்கு உங்களிடம் இருந்து கிடைத்த அன்பையும் மரியாதையும் கண்டு நான் வியப்படைகிறேன். மிக்க நன்றி. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க இந்த வாய்ப்பை வழங்கிய எனது இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ZEE5 குழுவிற்கு நன்றி” என்றார்.

நடிகர் ஶ்ரீனிவாசன் பேசுகையில்…

”இந்த தொடரில் பல முக்கியமான கதாபாத்திரங்களை உயிர்ப்புள்ளதாக இயக்குநர் முத்துக்குமார் உருவாக்கியுள்ளார். அது அயலியின் வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்னும் பத்து வருடங்களுக்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும். லவ்லின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் அனைத்து நடிகர்களும் சிறப்பாகப் பணி புரிந்துள்ளனர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற அயலியை உருவாக்கிய Zee5 குழுவிற்கு நன்றி” என்றார்.

Dialogue writer Sachin about Ayali web series

‘அயலி’ பார்த்தவங்க அப்படியே ஒன்றிட்டாங்க.. – நடிகை லவ்லின்

‘அயலி’ பார்த்தவங்க அப்படியே ஒன்றிட்டாங்க.. – நடிகை லவ்லின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான ‘அயலி’ இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

நடிகர் ‘அருவி’ மதன் பேசுகையில்…

“எனது கதாபாத்திரம் பார்த்தவர்களின் தந்தையின் சாயலைப் பிரதிபலிப்பதாகப் பலர் பாராட்டினார்கள் அது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அயலியை மாபெரும் வெற்றியடையச் செய்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி. இந்தத் தொடரை மாற்றி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் பார்த்து மகிழும் வகையில் ஒரு திரைப்படமாக வெளியிடுமாறு ஜீ5 தளத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் பிரகதீஸ்வரன் பேசுகையில்,

“அயலி’ தொடரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஜீ5 தளத்தின் விவேக் சார், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் மணிகண்டன் சாருக்கு நன்றி. இந்தத் தொடரின் வெற்றிக்கு இந்த மூன்று நபர்களும் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்” என்றார்.

நடிகை லவ்லின் சந்திரசேகர் பேசுகையில்..

“ ‘அயலி’ தொடரை வெற்றிப்படைப்பாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி.

இத்தொடரைப் பார்த்தவர்கள் இதனுடன் நன்றாக ஒன்ற முடிந்தது எனக்கூறினார்கள். அது மகிழ்ச்சியைத் தந்தது. இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய முத்துக்குமார், சார், குஷ்மாவதி மேடம் மற்றும் ஜீ5 ஆகியோருக்கு நன்றி. இந்த படைப்பில் நல்ல செய்தி உள்ளது. இப்படியான நல்ல தொடரின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்” என்றார்.

Those who saw ‘Ayali’ were united.. – Actress Lovelin

RC 15 பட ஷெட்யூலை முடித்து விட்டு ‘இந்தியன்2’ ஸ்பாட்டுக்கு வந்த ஷங்கர்

RC 15 பட ஷெட்யூலை முடித்து விட்டு ‘இந்தியன்2’ ஸ்பாட்டுக்கு வந்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன்2’ மற்றும் ராம் சரணுடன் ‘RC 15’ ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஷங்கர், படப்பிடிப்பு அட்டவணைகளை அற்புதமாக நிர்வகித்து வருகிறார்.

ஷங்கர் கடந்த வாரம் ராம் சரண் படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிய நிலையில், அவர் இப்போது ஷெட்யூலை முடித்துவிட்டார்.

இந்நிலையில், இயக்குனர் மீண்டும் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படப்பிடிப்புக்கு வந்துள்ளார்.

தகவல்களின்படி, இது ‘இந்தியன்2’ படத்திற்கான மிக நீண்ட ஷெட்யூலாக இருக்கும், மேலும் இந்த ஷெட்யூலில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் செட்டில் இருந்த படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், “மீண்டும் ‘இந்தியன்2’ படப்பிடிப்புக்கு” என்று பதிவிட்டுள்ளார்.

Director Shankar back on the sets of Kamal Haasan’s ‘Indian 2’

More Articles
Follows