29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்த அரவிந்த் சாமி..!

29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்த அரவிந்த் சாமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘துணிவு’.

இந்த படத்தை 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘AK62’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தநிலையில், இப்படத்தில் நெகட்டிவ் லீடாக நடிக்க அரவிந்த் சாமியை அணுகியுள்ளனர்.

இந்த கதாபாத்திரத்திற்கு அதிக கவர்ச்சி உள்ள ஒருவர் தேவைப்படுவதால், அரவிந்த் சாமி பொருத்தமானவர் என்று தயாரிப்பாளர்கள் கருதினர்.

மேலும், அஜித் மற்றும் அரவிந்த் சாமி இருவரும் 1994 இல் ‘பாசமலர்கள்’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர் கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

Arvind Swamy joins in Ajith’s AK62

‘ஜெயிலர்’ சூட்டிங் அப்டேட் : ரஜினிகாந்துடன் இணையும் மோகன்லால்

‘ஜெயிலர்’ சூட்டிங் அப்டேட் : ரஜினிகாந்துடன் இணையும் மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப் குமார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்த வருகிறார்.

இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு உள்ளிட்டோரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் ஷூட்டிங் நாளை ஜனவரி 8ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.

இதுவரை 65% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் ரஜினிகாந்தை பொறுத்தவரை 75% அவரது காட்சிகள் முடிவு நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மோகன்லால் கேரக்டர் உறுதியாகும் பட்சத்தில் ஒரே படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகிய இணைவது இந்திய சினிமாவையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் என எனலாம்.

Rajinikanth and Mohanlal join hands to shoot for #Jailer

@rajinikanth @Mohanlal @Nelsondilpkumar #Nelsondilipkumar

JUST IN ‘வாரிசு’ பட கலைஞர் திடீர் மரணம்.; திரையுலகினர் உருக்கம்

JUST IN ‘வாரிசு’ பட கலைஞர் திடீர் மரணம்.; திரையுலகினர் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம் தமிழ் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் சுனில் பாபு.

விரைவில் வெளியாகயுள்ள விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும் இவர் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

மலையாளத்தில் பிரபலமான பிரேமம் சீதாராமம், உருமி, பெங்களூர் டேஸ், நோட் புக் உள்ளிட்ட படங்களில் இவரது கலைப்பணி பாராட்டுக்குரியது.

மேலும் இவர் தன் கலைப்பணிக்காக கேரள அரசின் மாநில விருதையும் (2005 film Ananthabhadram) வென்றுள்ளார்.

50 வயதான சுனில் பாபு திடீர் மாரடைப்பால் நேற்று கேரளா – எர்ணாகுளத்தில் காலமானார்.

மலையாள சினிமாவை சேர்ந்த துல்கர் சல்மான், அஞ்சலி மேனன் உள்ளிட்டோர் தங்களது உருக்கமான பதிவை இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இவர் நிறைய மலையாள படங்களில் பணிபுரிந்துள்ள நிலையில் கேரள சினிமாத்துறையை சுனில் பாபுவின் மரணம் பெருமளவில் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Art director and production designer Sunil Babu passed away at 50

பாலிவுட்டிலும் விஜய்.; துணிச்சலான முடிவை எடுத்த ‘வாரிசு’ படக்குழு

பாலிவுட்டிலும் விஜய்.; துணிச்சலான முடிவை எடுத்த ‘வாரிசு’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மட்டும் தெலுங்கில் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருவதால் தியேட்டர் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிட உள்ளனர்.

வாரிசு படத்தில் வட இந்திய உரிமையை (Manish Shah’s G Tele Films along with Anil Thadani’s AA Films will be releasing Varisu across North India) நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் ஜனவரி 11ஆம் தேதியே வாரிசு படத்தின் ஹிந்தி பதிப்பும் வெளியாகிறது.

Varisu team takes bold decision

BREAKING ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் உடலுக்கு ரஜினி அஞ்சலி.; உருக்கமான பேச்சு

BREAKING ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் உடலுக்கு ரஜினி அஞ்சலி.; உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைப்பதற்காக உலக அளவில் பல மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் என்பவர் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சுதாகர் இன்று ஜனவரி 6 உடல்நலக் குறைவால் காலமானார்.

ரஜினி ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்ன செய்தியாளர்களிடம் பேசும் போது..

“எனது நீண்ட கால நண்பரை நான் இழந்து விட்டேன். எனக்கு நெருக்கமான ஒரு நண்பரை இழந்தது வருத்தம் அளிக்கிறது.

என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் சுதாகர்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. எவ்வளவு மருத்துவங்கள் செய்தும் அது பயனில்லை. இன்று அவரை இழந்தது பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.”

இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth paid last respect to Sudhakar

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன் அஜித் டூப்.? மஞ்சுவாரியர் நெத்தியடி பதில்

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன் அஜித் டூப்.? மஞ்சுவாரியர் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இந்த படம் தொடர்பான அவரின் சமீபத்திய பேட்டியில்…

“துணிவு’ படத்தில் எந்த டூப்பும் போடாமல் 100 % அஜித் தான் நடித்தார்.

அவர் எதுவாக இருந்தாலும் டிரைவ் செய்வார். டிரைவ் தெரியாதது என்று எதுவுமே அவருக்கு இல்லை.

பாங்காக்கில் போட் ஓட்டும் சீன்..்எனக்கு அது தான் முதல் தடவை என்பதால், அவரே சொல்லிக் கொடுத்தார்.

அந்த அனுபவம் ரொம்ப திரில்லிங்காக இருந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என் செல்போனிலேயே இருக்குது.” என்றார்

Manju warrier about boat scene making in thunivu

More Articles
Follows