தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் யோகி பாபு ‘மிஸ் மேகி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ‘மெஹந்தி சர்க்கஸ்’ மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் இசையமைக்கிறார்.
இப்படத்தில் யோகி பாபு ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளார்.
இதன் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘மிஸ் மேகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
யோகிபாபு, ஆங்கிலோ இந்திய பெண் கெட்டப்பில் கேக் வெட்டும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
yogi babu’s miss maggie movie shooting wrap