சீமராஜா & 96 படங்களுடன் மோத தயாராகும் நரகாசூரன்

Naragasooran release pushed to 13th September 2018‘துருவங்கள் 16’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.

இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரோன் இதான் யோகன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை அறிவிக்கப்பட்டு அடிக்கடி தள்ளிக் கொண்டு போனது.

தற்போது இறுதியாக செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, விஜய்சேதுபதி நடித்துள்ள ‘96’, சமந்தா நடித்துள்ள ‘யு டர்ன்’ ஆகிய படங்களும் இதே நாளில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Naragasooran release pushed to 13th September 2018

Overall Rating : Not available

Latest Post