நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படம் மே 12-ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவிப்பு…!

நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படம் மே 12-ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவிப்பு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படம் ‘கஸ்டடி’.

இப்படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி வில்லனாகவும், பிரேம்ஜி, சம்பத், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.

நவம்பர் 23-ம் தேதி நாக சைதன்யாவின் பிறந்தநாளன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டது படக்குழு.

மேலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாக சைதன்யா ஒரு போலீஸ்காரராக உள்ளார்.

இந்நிலையில், ‘கஸ்டடி’ படத்தை மே 12, 2023 அன்று திரைக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Naga Chaitanya’s Custody to release on May 12

2022 பார்டர் தாண்டி 2023-க்கு சென்றது அருண்விஜய்யின் ‘பார்டர்’

2022 பார்டர் தாண்டி 2023-க்கு சென்றது அருண்விஜய்யின் ‘பார்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குற்றம் 23’ மற்றும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகிய படங்களுக்கு பிறகு அருண் விஜய் – அறிவழகன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பார்டர்’.

ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றி இருந்தார்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2022ல் பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் ‘பார்டர்’ படம் 2023 பிப்ரவரி 24ல் ரிலீசாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
——

Arun Vijay ‘s Borrder release date is here

[email protected]_In_Pictures’s #ArunVijayInBorrder Is on a mission to conquer the audience from 24th Feb 2023

#BorrderFromFeb24

An @dirarivazhagan Film
Starring @arunvijayno1 @ReginaCassandra @StefyPatel
@SamCSmusic @UmeshPranav
@Viwinsr @11_11cinema @prabhuthilaak https://t.co/BaaaHfB7jW

‘பொன்னியின் செல்வன் பார்ட் 2’ ரிலீஸ் தேதியை வெளியிட்டது லைக்கா

‘பொன்னியின் செல்வன் பார்ட் 2’ ரிலீஸ் தேதியை வெளியிட்டது லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘பொன்னியின் செல்வன் 1 ‘.

பழம்பெரும் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை கொண்டு இந்த படம் உருவானது.

இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியானது.

இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 300 கோடியில் உருவான இந்த படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்த இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஜெயராம், அசோக் செல்வன், ஆதேஷ்பாலா உள்ளிட்ட பல நடித்திருந்தனர்.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘Ponniyin Selvan Part 2’ release date announced by Lyca

பிரபுதேவாவின் ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!

பிரபுதேவாவின் ‘வுல்ஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னதாக எஸ்.ஜே.சூர்யாவிடம் இணை இயக்குனராக பணியாற்றி ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் மூலம் அறிமுகமான வினோ வெங்கடேஷ்.

வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா ‘வுல்ஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஞ்சு குரியன், அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, ஸ்ரீகோபிகா மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு அம்பரீஷன் இசையமைக்க, அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு என தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இப்படம் தமிழ் ,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

வுல்ஃப்

Prabhudeva’s film ‘Wolf’ shoot wrapped up

விஷ்ணு விஷாலின் ‘கட்ட குஸ்தி’ OTT ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு..!

விஷ்ணு விஷாலின் ‘கட்ட குஸ்தி’ OTT ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்ல அய்யாவு இயக்கி, விஷ்ணு விஷால் நடித்து வெளியாகியப் படம் ‘கட்டா குஸ்தி’.

இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

‘கட்டா குஸ்தி’ திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘கட்ட குஸ்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள் இப்போது படத்தின் OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளனர்.

மேலும், இப்படம் ஜனவரி 1 முதல் பிரபல நெட்ஃபிக்ஸ் தளத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு ஸ்பெஷலாக திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘Gatta Kusthi’ OTT release date announcement by the crew

25-ம் தேதி காலமான தெலுங்கு நடிகர் “சலபதி ராவ்” உடல் இன்று நல்லடக்கம்..!

25-ம் தேதி காலமான தெலுங்கு நடிகர் “சலபதி ராவ்” உடல் இன்று நல்லடக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் நடிகரும் தயாரிப்பாளருமான சலபதி ராவ்.

இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் 25.12.2022-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

அவரது மகனும், நடிகரும் இயக்குனருமான ரவிபாபு, சலபதி ராவின் மகள்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பி வருவதற்காக மூன்று நாட்களாக காத்திருந்தனார்.

அவர்கள் இன்று வந்த நிலையில், ராவின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மேலும், இன்று ஹைதராபாத்தில் “சலபதி ராவ்” உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சலபதி ராவ் மறைவுக்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

Telugu actor Chalapathi Rao laid to rest in today

More Articles
Follows