தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
‘லியோ’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் நாளுக்கு நாள் ‘லியோ’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டே செல்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மற்றும் இந்தியா சம்பந்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் நகைச்சுவை நிறைந்த தமிழ் கமெண்ட் கொடுத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் பிரதீப் முத்து.
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ‘லியோ’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் போல் தெரிகிறது.
அதனை அவர் தனது ட்விட்டர் பயோவிலும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் காஷ்மீர் செட்யூலில் ஒரு நாள் படமாக்கினார் என்றும், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் எடுத்த கொண்ட புகைப்படம் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பிரதீப் முத்து இதற்கு முன்பு ‘மீசைய முறுக்கு’ மற்றும் ‘வீட்ல விஷேஷம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cricket commentator Pradeep Muthu joined in vijay in leo