கதைக்குள் என்னை பிட் பண்ணிக்கிறேன்; கார்த்திக் நரேனிடம் அரவிந்த்சாமி வாக்குறுதி

கதைக்குள் என்னை பிட் பண்ணிக்கிறேன்; கார்த்திக் நரேனிடம் அரவிந்த்சாமி வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will fit into my character says Arvindsamy to Karthick Narenதுருவங்கள் 16 என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன்.

இதில் அரவிந்த்சாமி, சந்தீப்கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இப்படத்தை ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியிடுகின்றனர்.

இந்த படத்தின் டிலைர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது நாயகன் அரவிந்த்சாமி பேசுகையில்,

இந்த படத்தில் நடிப்பதற்கு கார்த்திக் நரேன் என்னை சந்தித்தார்.

நான் அப்போதே அவரிடம் எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்குள் நான் என்னை பிட் செய்துக் கொள்கிறேன் என சொல்லிவிட்டேன்.

ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையை நன்றாக படமாக்கியுள்ளார். அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு” என பேசினார்.

I will fit into my character says Arvindsamy to Karthick Naren

வசந்தபாலன்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் தகவல்

வசந்தபாலன்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash 17th movie first look will be released 3rd August 2018ஏற்கெனவே 8 படங்களை கையில் வைத்திருக்கும் ஜிவி. பிரகாஷ் தற்போது வசந்தபாலன் இயக்கி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முக்கிய கேரக்டரில் ராதிகா நடிக்க, கணேஷ் சந்திரா என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இத்துடன் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் ஆகியவையும் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

GV Prakash 17th movie first look will be released 3rd August 2018

gvp 17 first look

சுசீந்திரன்-யுவன் இணையும் *ஜீனியஸ்* படத்தில் சூப்பர் சிங்கர் கலைஞர்

சுசீந்திரன்-யுவன் இணையும் *ஜீனியஸ்* படத்தில் சூப்பர் சிங்கர் கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Singer Finalist Srikanth Makes His Debut Singing For Geniusசுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ மற்றும், ‘ஆதலால் காதல் செய்வீர்’ ஆகிய படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார்.

இந்த இரு படங்களுக்குமே நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது ‘ஜீனியஸ்’ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இவர்கள் இணைந்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து வரிகளில், சூப்பர் சிங்கர் இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது.

படத்தை முழுவதுமாக பார்த்த யுவன் படம் நன்றாக வந்துள்ளது என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்து வருகிறார்.

செப்டம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Super Singer Finalist Srikanth Makes His Debut Singing For Genius

யுவன் இசையில் தனுஷுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

யுவன் இசையில் தனுஷுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and prabhu devaபாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வித்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளார்.

ஏற்கெனவே நடனத்தில் அசாத்திய திறமை உள்ளவர் தனுஷ்.

எனவே இப்பாடல் செம தர லோக்கலா இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

லெஸ்பியனாக ஐஸ்வர்யா.; அவளா நீ ?என ட்ரோல் செய்யும் *பிக்பாஸ்* ரசிகர்கள்

லெஸ்பியனாக ஐஸ்வர்யா.; அவளா நீ ?என ட்ரோல் செய்யும் *பிக்பாஸ்* ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya duttaவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் நடிகை ஐஸ்வர்யா தத்தாவை சர்வாதிகார ராணி என்று பலரும் கூறுகின்றனர்.

தாடீ பாலாஜி மீது குப்பையை கொட்டினார். நடிகை ரித்விகாவின் துணிகளை நீ்ச்சல் குளத்தில் போட்டார்.

இதனால் கோபமான பிக்பாஸ் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை திட்டி வருகின்றனர்.

அவரை பழிவாங்க, திட்டி தீர்க்க இணையத்தை அலசியுள்ளனர்.

அப்போது ஒரு வீடியோ சிக்கியுள்ளது.

அந்த படத்தில் ஐஸ்வர்யா லெஸ்பியனாக நடித்துள்ளார்.

எனவே அதை பகிர்ந்து அவளா நீ..?? என ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷால்

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam ravi and vishalவிஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரும்புத்திரை.

தமிழ் & தெலுங்கு இரண்டிலும் செம ஹிட்டானது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற அக்டோபர் 18-ல் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், `ரோமியோ ஜூலியட்’, `போகன்’ படங்களை இயக்கிய லஷ்மண் இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

More Articles
Follows