மிஸ் மேகீ – க்காக பாட்டியாக மாறிய யோகிபாபு.; மாதம்பட்டி ரங்கராஜ் கூட்டணி

மிஸ் மேகீ – க்காக பாட்டியாக மாறிய யோகிபாபு.; மாதம்பட்டி ரங்கராஜ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘மிஸ் மேகீ’ என்ற படத்திற்காக ஆங்கிலோ இந்தியன் பாட்டி லுக்கில் யோகிபாபு நடிக்கிறார்.

இந்த படத்தை லதா ஆர் மணியரசு இயக்க ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இன்று ஜனவரி 15ல் பொங்கல் அன்று இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

Who is Miss Maggie First look cum Title Teaser released

——-

Click the link to find the Gorgeous Granny!

▶️ https://youtu.be/vNhR-T0if7U

Surprising Firstlook cum Title Teaser
#MissMaggie Movie

@iYogiBabu @MadhampattyRR @DrumsticksProd @im_aathmika #LathaRManiyarasu @singer_karthik #GowthamRajendran @ertviji @teamaimpr

‘துணிவு’ படத்தை பின்னுக்குத்தள்ளிய ‘வாரிசு’ படம்..!

‘துணிவு’ படத்தை பின்னுக்குத்தள்ளிய ‘வாரிசு’ படம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘வாரிசு’.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ ஒரே நாளில், ஜனவரி 11 அன்று, பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித்தின் பாக்ஸ் ஆபிஸ் மோதல் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘வாரிசு’ படம் 4வது நாளில், சுமார் 125 முதல் 130 கோடிகள் வரை உள்ளது. ‘துணிவு’ பாக்ஸ் வசூல் 4வது நாளில் ரூ.110 கோடியை வசூலித்துள்ளது.

அதனால் பாக்ஸ் வசூலில் ‘துணிவு’ படத்தை பின்னிக்குத்தள்ளிய ‘வாரிசு’ படம்.

‘Varisu’ has overtaken ‘Thunivu’ at the box office

‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸ் நான்காவது நாள் வசூல் அப்டேட்…

‘துணிவு’ பாக்ஸ் ஆபிஸ் நான்காவது நாள் வசூல் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’.

இப்படத்தில் மஞ்சு வாரியர், மோகன சுந்தரம், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11 அன்று பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்குதிரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

‘துணிவு’ பாக்ஸ் வசூல் 4வது நாளில் வெற்றிகரமாக ரூ.110 கோடியை வசூலித்துள்ளது.

‘துணிவு’ திரைப்படம் அஜித்தின் 6வது படமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

‘Thunivu’ box office Fourth day collection

‘பொன்னியின் செல்வனை தொடர்ந்து சபரிமலையிலும் இணைந்த ஜெயராம் – ஜெயம் ரவி

‘பொன்னியின் செல்வனை தொடர்ந்து சபரிமலையிலும் இணைந்த ஜெயராம் – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்த மாதத்தில் ஐயப்பனை தரிசிக்க 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை பயணத்தை பக்தர்கள் மேற்கொள்வர்.

ஜெயராம் - ஜெயம் ரவி

தென்னிந்திய திரை பிரபலங்களும் தற்போது சபரிமலை யாத்திரை பயணம் செய்து வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் ‘துணிவு’ பட இயக்குனர் வினோத் சபரிமலை பயணம் மேற்கொண்டார். இந்த செய்தியை நம் FILMISTREET இணையதளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சபரிமலை யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெயராம் - ஜெயம் ரவி

தற்போது அவர்களது புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராம் - ஜெயம் ரவி

Jayaram – Jayam Ravi going Sabarimalai temple

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட்..!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் அப்டேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக படம் ‘எஃப்ஐஆர்’.

இப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா, ரெபோ மோனிகா, கௌரவ் நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அஸ்வத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிருமி புகழ் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 11ல் வெளியாகியது.

இப்படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களே கிடைத்தால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைத்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எஃப்ஐஆர் 2’ விரைவில் தொடங்குவதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Vishnu Vishal to begin ‘FIR 2’ soon

கமல்ஹாசனின் கடிதத்தை பார்த்து திகைத்துப் போனா ‘காந்தாரா’ நடிகர்..!!??

கமல்ஹாசனின் கடிதத்தை பார்த்து திகைத்துப் போனா ‘காந்தாரா’ நடிகர்..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிஷப் ஷெட்டியின் சொந்த இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘காந்தாரா’ 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

கன்னடப் படம் பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் சம்பாதித்தது. ‘காந்தாரா’ சமீபத்தில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் பிரிவுகளுக்கான 2 ஆஸ்கார் 2023 தகுதிகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் தற்போது ரிஷப் ஷெட்டிக்கு ‘காந்தாரா’ படத்தில் நடித்ததையும், படத்தின் கதையையும் பாராட்டி அவருக்கு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் கடிதத்தில், ‘காந்தாரா’ படம் பேசப்படாத துணை உரைகளில் சிறந்தவற்றை பட்டியலிட்டுள்ளார் மற்றும் ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்தில் தனது சொந்த சாதனைகளை முறியடிக்க கமல்ஹாசன் வாழ்த்தி உள்ளார்.

கமல்ஹாசனின் பாராட்டுக் கடிதத்தின் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் லெஜண்டிலிருந்து இதுபோன்ற ஒரு அழகான செய்தியைப் பெறுவதற்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. கமல் சார் அளித்த இந்த ஆச்சரியப் பரிசைக் கண்டு மிகவும் வியப்படைந்தேன். இது விலைமதிப்பற்றதற்கு நன்றி என கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

‘Kantara’ actor was shocked to see Kamal Haasan’s letter

More Articles
Follows