தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாக சைதன்யாவின் 22வது படத்திற்கு ‘கஸ்டடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மே 12 ஆம் தேதி தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் முக்கிய வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜு அல்லது ராசு என்று பெயரிடப்பட்ட அவர், கொடூர வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல் அவருடைய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
Arvind Swami to scare us as Raju aka Raazu in ‘Custody’