ரஜினி சொன்னபடியே நடந்தது.; 4 நாளில் ரூ. 400 கோடி.. 2.0 உலக சாதனை

rajiniகடந்த நவம்பர் 29ஆம் தேதி ரஜினியின் 2.0 படம் உலகமெங்கும் 15,000 தியேட்டர்களில் வெளியானது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தை லைகா நிறுவனம் 600 கோடி செலவில் தயாரித்து இருந்தது.

3டியில் படமாக்கப்பட்ட இப்படத்தை அனைவரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

ஹாலிவுட் தரத்திற்கு தமிழர்களாலும் படம் எடுக்க முடியும் என்பதை ஷங்கர் நிரூபித்துள்ளார் என பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் வெளியாகும் முன்பு படத்திற்கான புரமோசன் சரியில்லை. போதுமான வரவேற்பு கிடைக்காது என பலரும் கூறினர்.

ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை புரோமோட் செய்வார்கள் என ரஜினிகாந்த் சென்னையிலும் ஐதராபாத்திலும் மேடையில் தெரிவித்தார்.

அவர் சொன்னப்படியே இப்போது நடந்து வருகிறது. படத்தை அனைவரும் பாராட்டி வருவதால் அதுவே தற்போது விளம்பரமாகி உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல்நாளில் உலகமெங்கும் 120 கோடியை வசூலித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் நான்கு நாட்களில் ரூ.400 கோடி வரை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா, டுவிட்டரில் அறிவித்துள்ளது.

குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இவையில்லாமல் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Overall Rating : Not available

Related News

ரஜினிகாந்த், அக்சய்குமார், ‌ஷங்கர், லைகா ஆகியோரது…
...Read More
மேற்கு ஆஸ்திரேலியா டெர்பி மாநில டிராபிக்…
...Read More

Latest Post