தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது.
தற்போது வரை 3 வாரங்களை கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 450+ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
விரைவில் இந்த படம் ரூ 500 கோடியை நெருங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் குறைந்த நாட்களில் ரூ 120 கோடியை இந்த படம் வசூலித்துள்ளது.
மேலும் கமல் தயாரித்து நடித்து அண்மையில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ஒட்டு மொத்த வசூலை ‘பொன்னியின் செல்வன்’ முறியடித்துள்ளது.
ஆனால் உலகளவில் ரஜினி படம் சாதித்த சாதனையை முறியடிக்கவில்லை.
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 765 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.