சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் பிரியா பவானி சங்கர் & மனுஷ்யபுத்திரன் & டிஜே

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் பிரியா பவானி சங்கர் & மனுஷ்யபுத்திரன் & டிஜே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pathu Thalaசிம்பு @ எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வரும் கோடை காலத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணைந்து வரும் நடிகர் பட்டாளம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச்செய்கிறது.

சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் படத்தில் நாயகியாக இணைந்த நிலையில் தற்போது தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் அசுரன் படப்புகழ் டிஜே இப்படத்தின் நடிகர் குழுவில் இணைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது…

தமிழக இலக்கிய ஆளுமை, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் டிஜே அவர்களை எங்கள் படத்திற்கு, வரவேற்பதில் மகிழ்சியடைகிறோம்.

மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித்திறமையும், இலக்கிய திறமையும் பிரசித்தி பெற்றது. இப்படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நிறைய நேர்மறைதன்மை கொண்ட, படத்தின் கதையில் அழுத்தம் தரும் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் அது.

டிஜே வின் புகழும் “அசுரன்” போன்ற படத்தில் அவர் காட்டிய நடிப்பு திறமையும் அனைவரும் அறிந்ததே. மிக அழுத்தமான நெகட்டிவ் தன்மை கொண்ட பாத்திரத்தை அப்படத்தில் அவர் செய்திருந்தார். இப்படத்திற்கான கதாப்பாத்திரத்திற்காக, அவரை அணுகிய போது அவர் லண்டனில் இருந்தார். எங்கள் முழு உரையாடலும் zoom calls ல் தான் நடந்தது.

அவருக்கு லுக் டெஸ்ட் எடுப்பது என்பது இயலாது என்றே நாங்கள் நினைத்தோம் ஆனால் அவரே ப்ரத்யேகமாக கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார்செய்து கொண்டு லண்டனில் இருந்து கொண்டே லுக் டெஸ்ட் செய்தார். அவரது லுக் டெஸ்ட் புகைப்படம் மிக அட்டகாசமாக கதாப்பாத்திரத்துடன் பொருந்தியிருந்தது. அதனை படத்தின் விளம்பரங்களுக்கான போஸ்டரில் பயன்படுத்தவுள்ளோம்.

இப்படத்தின் மிகச்சிறந்த திறமையாளர்களுடன், பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

“பத்து தல” படத்தினை “சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை” படப்புகழ் இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இயக்குகிறார். தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்…

STR in Pathu Thala movie updates

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வேண்டும்..; கொரோனா வந்தா தான் சிம்புக்கு தெரியும்.. – கருணாஸ்

50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வேண்டும்..; கொரோனா வந்தா தான் சிம்புக்கு தெரியும்.. – கருணாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karunasஇன்று காலை தமிழக காவல்துறை டிஜிபியை சந்தித்தார் நடிகரும் திருவாடனை எம்எல்ஏவுமான கருணாஸ்.

அப்போது தேசிய தெய்வீக யாத்திரை என்ற பெயரில் சென்னை நந்தனம் தேவர் சிலை தொடங்கி பசும்பொன் வரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி மனு அளித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது… “மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.

1994-ம் ஆண்டு தேவர் சிலையை நந்தனத்தில் திறந்து வைத்தார் ஜெயலலிதா. அப்போது கள்ளர், மறவர், அகமுடையோரை தேவர் இனம் என அறிவித்தார்.

அந்த அரசாணையை உடனடியாக நடைமுறைபடுத்தனும்.

தற்போது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாகபோய் விடக்கூடாது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.

கொரோனாவை வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை உள்ளது?

நடிகர் சிம்பு அது போல் பேசியது தவறு.. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி?

அவருக்கு கொரோனா வந்தால் தான் தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளேன்” என பேசினார் கருணாஸ்.

MLA Karunaas reply to Silambarasan TR

தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தனுஷ் படத்தில் ‘மாஸ்டர்’ நாயகியுடன் ‘தடம்’ நாயகியும் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ்பாலிவுட்டில் ‘அத்ரங்கி ரே’, கோலிவுட்டில் ‘கர்ணன்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.

மேலும் தாணு தயாரிப்பில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை யுவன்.

இதனையடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதில் நாயகியாக ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்த நிலையில் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் இணைந்துள்ளதை படக்குழு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தடம், மூக்குத்தி அம்மன் படங்களில் ஸ்மிருதி நடித்துள்ளார்.

மேலும் தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம், பற்ற வைத்த நெருப்பொன்று ஆகிய படங்களிலும் ஷ்மிருதி வெங்கட் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thadam girl Smruthi Venkar is part of D43

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

பொங்கல் முடிந்தவுடன் தமிழக பள்ளிகள் திறப்பு..; முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

School reopen 2021கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தீபாவளி சமயத்தில் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதன் முடிவில் பள்ளிகள் திறக்க அதிகப்படியான பெற்றோர்கள் & மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு இன்று ஜனவரி 6 முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற கருத்து கேட்பின் படி தமிழகத்தில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

TN Schools likely to reopen after Pongal

2021 சென்னை புத்தகக் காட்சி நடைபெறுமா..? வாசகர்கள் எதிர்பார்ப்பு..; ‘பபாசி’ விளக்கம்

2021 சென்னை புத்தகக் காட்சி நடைபெறுமா..? வாசகர்கள் எதிர்பார்ப்பு..; ‘பபாசி’ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு 2020ல், 43-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது.

எனவே இந்தாண்டும் ஜனவரியில் சென்னை புத்தகக் காட்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில்…

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே..

வழக்கமாக ஜனவரி பொங்கல் திருநாளில் நடைபெரும் சென்னை புத்தக காட்சி 2021 இந்த ஆண்டு பெருந்தொற்றுகாரணமாக பொங்கல் விடுமுறை காலங்களில் நடத்த இயலவில்லை.

ஆனால் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை வருகின்ற பிப்ரவரி /மார்ச் காலங்களுக்குள் நடத்துவதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பம் பேரிடர் மேலாண்மை துறையில் அனுமதிக்காக காத்திருக்கிறது.

அரசு அனுமதி கிடைத்தவுடன் பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் 44ஆவது சென்னை புத்தகக் காட்சி 2021 நடைபெறும் வாசகர்கள் இதுகுறித்து விசாரிப்பதால் இந்த தகவலை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கிடையே கடந்த 8 மாதகாலமாக புத்தக விற்பனை இல்லாத சூழலில் இந்த பொங்கல் விடுமுறை காலங்களில் வாசகர்களின் புத்தக ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில பதிப்பாளர்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அவர்கள் சக்திக்கு ஏற்றபடி சிறு சிறு புத்தக காட்சிகளை சென்னையை சுற்றி நடத்தி வருகிறார்கள்.

இது வாசகர்களின் அறிவு தாகத்திற்கு சிறு வடிகாலாக அமையுமென்று நம்புகிறோம்.

மேலும் பபாசி நடத்தும் பிரம்மாண்டமான 44 ஆவது சென்னை புத்தகக் காட்சி அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் அதனுடைய சிறப்பு தன்மைகளோடு பல்வேறு புதிய அம்சங்களுடன் சிறந்த பண்பாட்டு நிகழ்வாக நடைபெறும் என்பதையும் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

ஆர்.
எஸ்.சண்முகம்
தலைவர் பப்பாசி.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Book Fair 2021 Official new Statement from bapasi

மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

மறைந்த நடிகை சித்ராவின் பர்ஸ்ட் & லாஸ்ட் படம் ‘கால்ஸ்’..; டீசர் படைத்த ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை மூலம் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட
வி.ஜே சித்ரா நடித்த கால்ஸ் திரைப்பட டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

சின்னத்திரை புகழ்
விஜே சித்திரா அவர்கள் இறப்பிற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் கால்ஸ்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்(first look) ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் டீசரும் செகண்ட் லுக்கும் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியானது.

இத்திரைப்படம் இப்போது திரைக்கு வர தயாராகி உள்ளது.

தற்போது வெளிவந்த டீஸர் (Teaser) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் டீஸர் (Teaser) ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான
திரு. ஜெ. சபரிஷ் அவர்கள் கூறியதாவது “நம்மிடையே வி.ஜே சித்து தற்போது இல்லையென்றாலும்.. அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள் தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

VJ Chithra’s Calls teaser records

More Articles
Follows