First on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

First on Net வௌங்காத கிரகம்… வெல்வெட் நகரம் விமர்சனம் 2.5/5

கதைக்களம்…

பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக உதவுகிறார் கஸ்தூரி. இவரின் தோழிதான் வரலட்சுமி. இவர் ஒரு பத்திரிகையாளர்.

ஆனால் பழங்குடியின மக்களின் உரிமையை பறித்து, அங்குள்ள 45 பேர்களை காட்டுத்தீயால் இறந்துவிட்டதாக தவறான செய்தியை பரப்புகின்றனர்.

இதனையறிந்த கஸ்தூரி சில ஆதாரங்களை திரட்டி வரலட்சுமிக்கு போன் செய்து இவர்களின் மற்றொரு தோழியின் (மாளவிகா சுந்தர்) வீட்டிற்கு வர சொல்கிறார்.

வரலட்சுமி அங்கு செல்வதற்குள் கஸ்தூரி கொல்லப்படுகிறார்.

எனவே ஆதாரங்களை தேடி வரலட்சுமியும் அந்த கும்பலும் அங்கே விரைகிறது

அதன்பின்னர் வரலட்சுமி என்ன செய்தார்? கொன்றது யார்? ஆதாரங்கள் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

First On Net அஜீரணம்… ஜிப்ஸி விமர்சனம்… 2.75/5

அட…. கதை சூப்பரா இருக்கே… என நீங்கள் நினைக்கலாம். இது ஒன் லைன் தான். ஆனால் இந்த கதைக்குள் மற்றொரு கதையை திணித்து வைத்துள்ளனர்.

அதுபற்றிய சின்ன பார்வை இதோ….

மாளவிகா சுந்தர் மற்றும் அவரது கணவர் முகிலன் இருவரும் ஒரு பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கு செல்வம் என்பவன் ஒரு பெண்ணை கற்பழிக்க முற்படுகிறான். அப்போது முகிலன் அவனை அடித்து விடுகிறார்.

இதனால் டான் அர்ஜய் மற்றும் கண்ணன் ஆகியோருடன் முகிலன் வீட்டை தேடி செல்கிறார் செல்வம். அங்கு பெரிய ரகளையே நடக்கிறது.

சரி ஏதோ சொல்ல வருகிறார்கள் என்றால்… அந்த கதைக்கும் இதுக்கும் ஒன்னுமே சம்பந்தமில்லை. அந்த வீடு மட்டும்தான் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

சரி.. கேரக்டருக்கு வருவோம்…

படத்தின் நாயகி வரலட்சுமிதான். இடைவேளை வரை கெத்தாக வலம் வரும் இவர் அதன்பின்னர் மற்ற கேரக்டர்களில் ஒன்றாக வருகிறார். தனியாக தெரியவில்லை.

அர்ஜய், கண்ணன், முகிலன், செல்வம், டில்லி (ரமேஷ் திலக்) என மாற்றி மாற்றி அடித்துக் கொள்கின்றனர். அதை எல்லாம் நமக்கே முடியல.

சரி இந்த கதை வேற லெவல்ல இருக்கும் போல. டைரக்டர் ஏதாச்சும் ட்விஸ்ட் வச்சி ரெண்டு கதையை கனெக்ட் பண்ணி இருப்பாரு பார்த்தா? அதுவும் பெருசா இல்லை.

இந்த ரகளை முடியும் போது போலீஸ் வருகிறார். அவர் அந்த ஆதாரங்களை எடுக்க வருகிறார் அவ்வளவுதான். இதுக்கு ஏன்ப்பா இவ்வளவு பில்டப்? என கேட்குறீங்களா? எங்களுக்கும் அதே டவுட் தான் பாஸ்.

இதனிடையில் கஸ்தூரி வேற வருகிறார். ஹைய்யா.. நானும் இந்த படத்துல நடிச்சுருக்கேன் என அவர் சொல்லிக் கொள்ளலாம்.

போலீஸ் கேரக்டரில் வருபவர் கவனம் பெறுகிறார். மாலை போட்டு இருக்கும் மற்றொரு போலீசை பார்த்து… பக்தியை தொழில்ல காட்டுங்க.. சாமி சந்தோஷப்படும் என சொல்லும்போது சிறப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல் இல்லை. பின்னணி இசையை சரண் ராகவன் என்பவர் அமைத்துள்ளார். த்ரில்லர் இசை ஒரு சில காட்சியில் தெறிக்கவிட்டுள்ளார். ஆனால் படம் முழுவதும் அதையே ரிப்பீட் செய்திருப்பதால் அதுவும் போரடிக்கிறது.

துப்பறிவாளன் தினேஷ் ஸ்டண்ட் அமைத்துள்ளார். அதிலும் சும்மா போட்டு புரட்டி புரட்டி அடிப்பது, அறைவது என சின்னப்புள்ளதனமாக சண்டையாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் பகத்குமார் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். ஒரு வீட்டுக்குள் ஒரு இரவில் நடக்கும் கதையை அதற்கேற்ப ஆங்கிள்களை வைத்துள்ளார்.

லிப்ட், நீச்சல் குளம், பெரிய ஸ்கீரின் தியேட்டர் என பக்காவான ஒரு வீட்டை தன் கலை பணியால் அலங்கரித்துள்ளார் கலை இயக்குனர் குமார் கங்கப்பன்.

ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்துள்ளார். அவராவது பாத்து செய்திருக்கலாம்.

மனோஜ் குமார் நட்ராஜன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் எதுவுமில்லை. எடுத்தவுடனே கதைக்குள் சென்றுவிட்டார். அது எல்லாம் சரிதான்.

கதைக்குள் கதை வைத்து சொல்லிவிட்டு அதில் சுவாரஸ்யம் இல்லாமல் செய்துவிட்டார். என்ன சொல்கிறோம்.. ஏன் சொல்கிறோம்.. என்பதற்கான தெளிவே இல்லை.

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனால் கடைசி வரைக்கும் வெல்வெட் நகரம்ன்னு ஏன் டைட்டில் வச்சாங்கன்னு தெரியலையே….

ஆக.. இந்த வெல்வெட் நகரம்.. வௌங்காத கிரகம்

Velvet Nagaram review rating

Comments are closed.