தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ், ஷெரின் (பேபி), யோகிபாபு, நிழல்கள்ரவி மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை : சைமன் கிங்
ஒளிப்பதிவு: அருண்மணிபழனி
எடிட்டிங்: கௌதம் ரவிச்சந்திரன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: சத்யராஜ் நாதம்பாள் பிலிம்ஸ்
கதைக்களம்…
தெலுங்கில் ஹிட்டான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக்தான் இப்படம். தெலுங்கு படத்தில் கல்லூரி இருக்கும். ஆனால் இதில் ஐ.டி நிறுவனம் என மாற்றம் செய்திருக்கிறார்கள்.
சிபிராஜின் முன்னாள் காதலி ரம்யா நம்பீசன். சிபிராஜ் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது நண்பர் யோகிபாபு.
ஒரு நாள் சிபிக்கு போன் செய்து என் மகளை கடத்திவிட்டார்கள். நீதான் அவளை காப்பாற்ற வேண்டும் என உதவி கேட்கிறார் ரம்யாநம்பீசன்.
இதனால் இந்தியாவுக்கு வருகிறார் சிபிராஜ்.
அவர் கண்டுபிடிக்க செல்ல இதில் பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வருகிறது.
அப்படி ஒரு குழந்தையே இல்லை, ரம்யா நம்பீசனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என அவளது கணவர் உட்பட பலரும் சொல்கின்றனர்.
இதனால் குழம்பி நிற்கிறார் சிபி.
ஆனால் தன்னை நினைவில் வைத்துக் கொள்ளும் அவளுக்கு நிச்சயம் குழந்தையும் நினைவில் இருக்கும் என தேடுதல் வேட்டையில் களம் இறங்குகிறார்.
அதன்பின் என்ன ஆனது? குழந்தை உண்மையில் இருந்ததா? மற்றவர்கள் அதை மறைக்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நாய்கள் ஜாக்கிரதையில் நாய், ஜாக்சன் துரையில் பேய்யை நம்பிய சிபிராஜ் இதில் கதையை நம்பி இறங்கியிருக்கிறார். இந்த சத்யா மூலம் சிபிராஜ் சிக்ஸரும் அடித்துள்ளார்.
கதைக்கு எது தேவையோ? அதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் ரம்யா போன்ற ஒரு அழகான நாயகி இருந்தும் இவருக்கு ரொமான்ஸ்தான் வரமறுக்கிறது.
ரம்யா மற்றும் வரலட்சுமி இரு நாயகிகள். ரம்யா அழகு என்றால் வரலட்சுமி திமிர் அழகு. க்ளைமாக்ஸ் காட்சியில் வரலட்சுமி ஸ்கோர் செய்கிறார்.
இதில் காமெடி நாயகன் சதீஷ் சீரியஸ் நாயகனாக மாறியிருக்கிறார்.
காமெடியும் மிரட்டலும் கலந்த போலீஸ் ஆனந்த்ராஜ்.
யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் நம்மை நிச்சயம் சிரிக்க வைக்கிறார்.
பேபி ரியா அழகு குட்டி. ஆனால் இவர் காணாமல் போனபிறகு பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட அம்மாவை (ரம்யா) கூப்பிடவில்லையே அது ஏன்..?
தொழில்நுட்ப கலைஞர்கள்..
யவ்வனா’ பாடல் ரசிக்க வைக்கிறது. சைமன் கிங் அவர்களின் பின்னணி இசை பெரிதாக பேசப்படும். இதுபோன்ற த்ரில்லர் படங்களுக்கு இசைதான் பலம். அதை சரியாக செய்திருக்கிறார்.
அதுபோல் அருள்மணியின் ஒளிப்பதிவில் ஐடி கம்பெனி, குழந்தை கடத்தல், போலீஸ் என ரசிக்கும்படி காட்சிகளை கொடுத்திருக்கிறார்.
தெலுங்கு ரீமேக் என்றாலும் அதில் சில மாற்றம் செய்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தப்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நிறைய ட்விஸ்ட்டுக்கள் இருப்பதால் சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்)
ஆனால் கிளைமாக்ஸில் அந்த குழந்தை யாருடையது? அதற்கு ஆனந்த்ராஜ்ம் சிரித்துக் கொண்டே துணை போவது எல்லாம் ரொம்ப ஓவர்.
சத்யா… ரசிக்க தகுந்தவன்






















