தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா சதீஷ் குமார்..
கார் மெக்கானிக் வேலை பார்க்கிறார் நாயகன் ஜஸ்டின் விஜய். ஒரு நாள் இவர் கார் வேலை பார்க்கும் போது பிரேக்பை மட்டும் சரி செய்யாமல் விட்டு விடுகிறார்.
அந்த சூழ்நிலையில் கஸ்டமர் காரை டெலிவரி எடுத்து செல்கிறார். அந்த காரை பின் தொடர்ந்து நாயகன் செல்லும்போது அந்த கார் விபத்தில் சிதறுகிறது. இப்படியாக கதை தொடர்கிறது..
கதைக்களம்…
நாயகன் ஜஸ்டின் ஒரு கட்டத்தில் அமானுஷ்ய விஷயங்களை அறிந்து கொள்ள நினைக்கிறார். அதன்படி இது தொடர்பான சந்தேகங்களை அமானுஷ்ய ஆசிரியர் கஸ்தூரியிடம் கேட்டு பயிற்சி பெறுகிறார்.
அப்போது வித்யா பிரதீப் உடன் ஜஸ்டினுக்கு நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கு பேயை விரட்ட வரும்படி ஒரு புதிய ஆர்டர் வருகிறது. அந்த பங்களாவிற்கு சென்ற பின் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் ஜஸ்டின் விஜய்..
அங்கு என்ன நடந்தது ? என்பதுதான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள்.. & டெக்னீசியன்கள்…
கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.்இவருக்கும் வித்யா பிரதீப்புக்கும் கெமிஸ்ட்ரி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்களுக்குள் உள்ள பாடலும் ரசிக்க வைக்கிறது.
நாயகன் ஜஸ்டின் விஜய் புதிய முகம் என்பதால் கொஞ்சம் மெனக்கெட்டு நடிப்பை கொடுத்திருக்கலாம்.. இவரும் வித்யா பிரதீப்பும் தோன்றும் காட்சிகள் நீண்டு கொண்டே இருப்பதால் நமக்கு போர் அடிக்கிறது.
ஒரே பங்களாவுக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர்கள் குழம்பி நம்மையும் குழப்பி உள்ளனர்.
இயக்கம்: எஸ் ஏ பிரபு
ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி
இசை: விஜய் சித்தார்த்
ஓஜா போர்டு வைத்து இவர்கள் ஆவியுடன் பேசும் காட்சிகளில் எந்த புதுமையும் இல்லை.. எனவே சுவாரசியமும் இல்லை.
எத்தனையோ பேய் படங்களை நாமும் பார்க்கிறோம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களும் பார்க்கிறார்கள்.. கொஞ்சமாவது ரசிகர்களுக்கு கலகலப்பு ஊட்டி புதுமையை கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம்.
ஆக இந்த ஸ்ட்ரைக்கர்… ஸ்லீப்பர்..
Striker movie review and rating in tamil