ரவுடி பேபி ரகளை… மாரி2 விமர்சனம்

ரவுடி பேபி ரகளை…  மாரி2 விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், கிருஷ்ணா, சாய்பல்லவி, வரலட்சுமி, ரோபோ சங்கர், வினோத், டோமினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், வின்சென்ட் அசோகன், சங்கிலி முருகன் மற்றும் பலர்
இயக்கம் – பாலாஜி மோகன்
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டர் – பிரசன்னா ஜிகே
தயாரிப்பு – தனுஷ்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹ்மத்

கதைக்களம்…

மாரி முதல் பாகத்தில் ஆட்டோ ஓட்டிக் கொண்டும் அராஜகம் செய்துக் கொண்டும் புறா பந்தயத்தில் கலந்துக கொண்டும் அலப்பறை செய்தவர் மாரி.

2ஆம் பாகத்தில் புறா பந்தயம் இல்லை. மற்றபடி அதே அராஜகம், புதிய வில்லன், நியூ ப்ரெண்ட், காதலி, குடும்பம், ஜீனியர் மாரி என கலந்துக் அடித்திருக்கிறார் தனுஷ்.

முதல் பார்ட்டில் வரும் சண்முகராஜன் இறந்துவிடுவார். எனவே அவரின் மகனாக கிருஷ்ணா வருகிறார். மாரியும் கிருஷ்ணாவும் நண்பர்கள்.

மாரியையும் கலையையும் (கிருஷ்ணா) கொலை செய்துவிட்டு ஒட்டுமொத்த ஏரியாவையும் தனது கன்ட்ரோலுக்குக் கொண்டு வர நினைக்கிறது எதிர் அணி.

இதனிடையில் சிறையில் இருக்கும் பீஜா (டோவினோ தாமஸ்) முன் பகையின் காரணமாக மாரியைக் கொல்ல திட்டமிடுகிறான்.

ஒரு சூழ்நிலையில் சென்னையை விட்டு மாரி வெளியேறுகிறார்.

கிட்டதட்ட 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாரி அவதாரம் எடுத்து எதிரிகளை தீர்த்து கட்டுகிறார்.

இடையில் என்ன ஆனது? மாரி எங்கே போனார்? என்பதே கதை.

கேரக்டர்கள்…

தனுஷ் சொன்னதுபோலவே அவருக்கு ஜாலியான கேரக்டர்தான் இந்த மாரி. வழக்கமான ஸ்டைல், கெத்து டயலாக் என வலம் வருகிறார். செஞ்சிருவேன் என்ற டயலாக்கை மாற்றி இந்த படத்தில் உறிச்சிடுவேன் என்கிறார்.

கிருஷ்ணாவின் முறுக்கு மீசை, தாடி, நீண்ட தலை முடி என கெட்டப் அப் அசத்தலாக இருக்கிறது. நடிப்பிலும் குறையில்லை.

இதில் அராத்து ஆனந்தியாக வரும் சாய்பல்லவியுடன் டூயட் பாடுகிறார். ரவுடி பேபி பாடல் இளைஞர்களின் காலர் ட்யூனாக நிச்சயமாக மாறியிருக்கும்.

அராத்து ஆனந்தியாக அதிரடி காட்டியிருக்கிறார் சாய்பல்லவி. ஆட்டோவும் இவரது ஆட்டமும் செம ஸ்பீடு. ஆனால் மேக்கப் அப்பில் இன்னும் கவனம் செலுத்துவது நல்லது.

வரலட்சுமி கேரக்டரில் வலுவில்லை. பயங்கர எதிர்பார்ப்பு இருந்தாலும் டம்மியாக்கிவிட்டார் டைரக்டர்.

தனுஷுக்கு அடியாளாக ரோபோ ஷங்கர் மற்றும் கல்லூரி வினோத். அங்கங்கே சின்ன சின்ன சிரிப்பு வெடிகளை போடுகின்றனர்.

வில்லன் டோவினோ தாமஸ் மலையாள நடிகர். செம ஸ்மார்ட்டா இருக்கிறார். முதலில் கொடூர மேக்அப்பிலும் பின்னர் அரசியல்வாதியாகவும் கவர்கிறார்.

ஆனால் படத்தில் நிறைய பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவன் இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் மாரி பர்ஸ்ட் பார்ட் போல இல்லையே என்பதே பல திசைகளிலும் இருந்தும் குரலாக ஒலிக்கிறது.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்களில் பணிகளில் கச்சிதம்.

டைரக்டர் பாலாஜி மோகன் வெறுமனே மாஸ் மட்டும் கொடுக்காமல் குடும்பம், சென்டிமெண்ட் என இரண்டையும் கலந்துக் கொடுத்திருக்கிறார்.

எனவே ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரவுடி பேபியின் ரகளை தான் இந்த மாரி 2

Maari2 review rating

Comments are closed.

Related News

தனுஷ் நடித்து வரும் படம் `மாரி-2'.…
...Read More
திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தான் தயாரிக்கும்…
...Read More
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம்…
...Read More