தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
துல்கர் சல்மான் & ரக்ஷன் ப்ரெண்ட்ஸ்.. இவர்களுக்கு சொல்லி கொள்கிற மாதிரி குடும்பம் இல்லை.
App Developer & Animator என்று பந்தாவாக சொல்லிக் கொண்டு ஆன்லைன் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்து பொருளை வாங்கிவிட்டு அதிலிருந்து பார்ட்ஸை மாற்றி விட்டு கம்ப்ளைன்ட் கொடுத்து ரிட்டன் செய்வது இவர்களின் வழக்கம்.
மேலும் Break fastku Bavana & Lunchku Lavanya என ஜாலியாக செல்கிறது இவர்களது வாழ்க்கை.
ஒரு கட்டத்தில் ரிது வர்மாவை ஹீரோ துல்கர் சந்திக்க காதல் ❤️ கொள்கிறார். அடுத்து என்ன நீங்களே யூகித்து இருப்பீர்கள்.. ரக்ஷன் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது காதல் கொள்கிறார்.
இவர்களுக்கும் குடும்பம் கிடையாது.
தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5
நால்வரும் கோவா சென்று செட்டிலாக நினைக்க, அங்கே வருகிறார் போலீஸ் அதிகாரி கெளதம் வாசுதேவ் மேனன்.
அப்போது சூப்பர் ட்விஸ்ட் வைத்து கதையை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறார் டைரக்டர் தேசிங்கு பெரியசாமி.
அடுத்து என்ன நடக்கிறது? என்பது எல்லாம் கற்பனைக்கு எட்டாத கதை.
கேரக்டர்கள்..
துல்கரை கண்டால் இளம் பெண்களின் மனசு துள்ளும்… துறு துறு நடிப்பில் இதயங்களை கொள்ளை கொல்கிறார்.. ஆக்சன் இல்லை. ஆனால் ரொமான்சிலும் ஏமாறும் போதும் ரசிக்க வைக்கிறார்.
ப்ளான் பண்ணி இவர் செய்யும் ஒவ்வொரு திருட்டும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.. ஆன்லைன் விரும்பிகளை அலர்ட்டும் செய்ய வைக்கும்..
டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாம் பார்த்த ரக்ஷன், இதில் ரெண்டாவது ஹீரோ எனலாம். பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்
டைமிங் காமெடியில் செம கலக்கல்.. சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் ரக்ஷன்.
செம்மொழி பூங்காவில் இவர் பேசும் வசனங்கள் சூப்பரூ…
மச்சி ஒரு குவார்ட்டர் சொல் என்பதுபோல.. எனக்கு கால் பண்ணு மச்சி என சொல்லும்போது நீங்களே கை தட்டுவீங்க..
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்… சிம்பு சொன்னது சரிதான் என கூறும்போது தியேட்டரில் அப்ளாஸ்.
ரிது வர்மா க்யூட் சில காட்சிகளில்.. இவர் ஆண்களுக்கு பிராகெட் போடுவது ஹைலைட்..
எங்க போனாலும் படுக்க கூப்டுறாங்க.. இப்படிதானடா நீங்க எல்லாம்.. பொண்டாட்டி இருந்தாலும் இவங்களுக்கு இன்னொன்னு வேணும் என ரிது சொல்லும் போது பெண்களே கை தட்டுவாங்க..
இவரின் தோழியாக நிரஞ்சனி.. 2வது ஹீரோயின்.. ரக்ஷனை இவர் கலாய்க்கும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.
போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன்.. ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டல்.. இவரது ப்ளாஷ்பேக் எதிர்பாராத ட்விஸ்ட்.. அதுவும் அப்ளாஸை அள்ளும்..
பெரிய பணக்கார மனிதர்களுக்கே உள்ள சபல புத்தி ஆசாமியாக வரும் மிட்டலும் செம.. போனில் கிஸ் அடிப்பது எல்லாம் அல்டிமேட் ரகம்.. இவரின் ஹை டெக் கார் & வீடு வாவ் ரகம்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
எனை விட்டு எங்கும் போகாத… என்றும் போகாத பாடல் அழகான மெலோடி…
மசாலா காஃபி & ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இவர்களது பின்னணி இசை வேற லெவல்… ஒவ்வொரு ட்விஸ்ட் வரும்போதும் ஒலிக்கும் இசை சூப்பர்.
கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்… ஒரு அழகான சினிமாவை பார்க்க முடிந்தது.
மைனஸ்..
படத்தின் முதல் காட்சியே ஓவர் பில்டப் கொடுத்து பார்ட்டி சாங் வச்சது ஓவர்.. அந்த பாடலும் பெரிதாக கவரவில்லை..
ப்ளஸ்…
ஆன்லைன் திருட்டு விழிப்புணர்வு வரும்..
ஏடிஎம் மெஷின் எண்டர் கீ டெக்னிக்.. விழிப்புணர்வு வரும்.
கார் அன்லாக்.. & சிசிடிவி கேமராவுக்கே Infra red light அடிப்பது.. என நியூ டெக்னிக்கலை சொல்லியிருப்பது..
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வசனங்கள் சூப்பர்..
பசங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்… பொண்ணுங்களுக்கு ஆண்டவன் நிறைய குடுப்பான் ஆனா கைவிட்டுவான்..
ஏன்.. காதல்னா பசங்க தான் எப்பவுமே தோக்கனுமா?
ஹீரோயின் இன்ட்ரோ சாக்லேட் சீன் & சில்லறை காசு சீன் வசனங்கள் என நிறைய அப்ளாஸ் சீன்ஸ்..
இயக்கம்….
ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி.
இந்த படத்திற்காக கிட்டதட்ட 5 வருடங்கள் போராடி இருக்கிறார்.. நிறைய போராட்டத்திற்கு பிறகு இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.. முதல் பந்திலே சிக்ஸர் அடித்துள்ளார்.
எல்லாம் தரப்பு மக்களும் படம் பார்த்து என்ஜாய் செய்யனும் என்பதை அறிந்து வெயிட்டான ட்ரீட் கொடுத்துள்ளார்.
சரியான திட்டமிடல், சரியான விளம்பரம் செய்தால் பெரியளவில் இப்படம் பேசப்படும்..
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களுக்கு சேலன்ஞ்ச் செய்துள்ளார் துல்கர் சல்மான்.
ஆக…..
ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்..