காட்டேரி விமர்சனம் – 2/5.; செம கடுப்பேறி

காட்டேரி விமர்சனம் – 2/5.; செம கடுப்பேறி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாமிருக்க பயமேன் என்ற படத்தை இயக்கிய டிகே இயக்கியுள்ள படம் ‘காட்டேரி’.

இதில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி, சோனம் பஜ்வா, கருணாகரன் மைம்கோபி ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.

காமெடி- திகில்-திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியிருக்கிறது.

இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க எஸ்.என். பிரசாத் இசையமைக்க பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒன்லைன்…

வழக்கமாக பேய் பிசாசு கதைகளை போல் அல்லாமல் இதில் காட்டேரிகளை காட்டி நம்மை பயமுறுத்த முயற்சித்துள்ளனர்.

கதைக்களம்…

ஒரு புதையலை தேடி நாயகன் மற்றும் நாயகி தங்கள் நண்பர்களுடன் ஒரு கிராமத்திற்கு செல்கின்றனர். ஆனால் அந்த கிராமமே பேய் மயமாக உள்ளது. பேயாக மாற என்ன காரணம் என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

வைபவ்வின் முதல் இரவில் இருந்தே கதை ஆரம்பிக்கிறது. இவருடன் கருணாகரன் ரவி மரியா ஆகியோரின் காமெடியும் காம நெடியும் கலந்து பயணிக்கிறது.

மைம் கோபி வரலட்சுமி ஆகியோரின் பிளாஷ்பேக் கதை படத்திற்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளது. அதன் மூலம் ஊர் எப்படி பேயாக மாறுகிறது என்பது காட்டப்படும் காட்சிகளும் ஓகே.

ஆத்மிகா & சோனம் பாஜ்வா ஆகிய இருவரும் ஆங்காங்கே கொஞ்சம் கவர்ச்சிக்கு தேவைப்பட்டுள்ளனர். இவர்களை கருணாகரன் ரவி மரியா ஊறுகாய் போல தொட்டு கொள்கின்றனர்.

குட்டி கோபியின் நகைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை.

ஜான் விஜய், லொல்லு சபா மனோகர், பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரமும் வலுவாக இல்லை.

டெக்னீசியன்கள்…

பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். எஸ்.என். பிரசாத்தின் இசை ஓகே. பிரவீன் கே.எல் எடிட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை.

யாமிருக்கே பயமேன் எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டிகே. இந்த காட்டேரியில் நம்மை கடுப்பேற்றி உள்ளார்.

பெரிதாக திகிலும் இல்லை பயமும் இல்லை. ஆனால் இந்த சற்று வித்தியாசமாக காட்டேரிகளை காட்டியுள்ளது சிறப்பு. பல நடிகர்களுக்கு காட்டேரி போல மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளதை ரசிக்கலாம்.

ஆக.. இந்த காட்டேரி.. செம கடுப்பேறி..

Kaatteri movie review and rating in Tamil

குருதி ஆட்டம் விமர்சனம் 2/5.; அறுவை ஆட்டம்

குருதி ஆட்டம் விமர்சனம் 2/5.; அறுவை ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமர்சனம்..

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒன்லைன்..

பழிக்குப் பழி… பழிக்குப்பழி.. இதுவே கதை.

கதைக்களம்…

அதர்வா ஒரு கபாடி வீரர். ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். இவருக்கு பெற்றோர் இல்லை. ஒரு தங்கை மட்டுமே. இவரது கபடி அணியை வெல்ல பல எதிரணிகள் முயல்கின்றன.

இவர் பள்ளி ஆசிரியை பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார்.

ஊரில் பெரிய ரவுடி பெண் தாதா ராதிகா. அவரின் மகன் மற்றும் கூட்டாளிகளுடன் அடிக்கடி அதர்வாவுக்கு மோதல் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வெட்டு குத்து வழக்கில் அதர்வா கைதாகிறார்.

அப்போது ராதிகாவின் மகனே அதர்வாவை ஜாமீனில் எடுக்கிறார். இதனால் இருவரும் நெருக்கமான நண்பர்களாகி விடுகின்றனர்.

இவர்களின் நட்பை பிடிக்காத ஒரு கும்பல் அதர்வாவின் நண்பனை கொன்றுவிடுகிறது. மேலும் ராதிகாவை கொல்லவும் சிலர் திட்டமிடுகின்றனர்.

தன் நண்பனை இழந்த அதர்வா என்ன செய்தார்? அவர்கள் கொல்ல என்ன காரணம்? அவரது பின்னணியில் யார் என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

அதர்வாவுக்கு ஆக்சன் என்றால் அல்வா சாப்பிடுவது போல.. ஆக்ஷனில் பிரித்து மேய்ந்து இருக்கிறார். இந்த படத்தில் பெரிதாக ரொமான்ஸ் காட்சிகள் இல்லை.

பிரியா பவானி சங்கர் இருக்கிறார். அவ்வளவுதான். ஏற்கனவே பிரீயா கவர்ச்சி ஒன்றும் காட்ட மாட்டார். தன் நடிப்பால் மட்டுமே நம்மை கவர்வார். இதில் அது கூட இல்லை.

முக்கிய பாத்திரங்களில் கண்ணா ரவி மற்றும் வட்சன்.. இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையில் கன கச்சிதம்.

ராதாரவியால் படத்தில் ஆங்காங்கே சிரிப்பலைகள் எழுவதை காண முடிகிறது. போட்டியாடா…துப்பாக்கி என்றால் அதற்கு டபுள் மீனிங் என்ற பொருள் படும் காட்சி உள்ளது.

வித்தியாசமான வில்லி வேடத்தில் ராதிகா. தன் மகனை இழந்த ராதிகா ஒரு சபதம் போடுகிறார். தன் மகனை கொன்றவரை கொன்றால் மட்டுமே கொல்லி போடுவேன் என்கிறார். ஆனால் அடுத்த காட்சியிலே கொல்லி போடுகிறார். கொலைக்காரன் உயிரோடுதான் இருக்கிறான். என்ன லாஜீக்?

அதுபோல ஒரு காட்சியில் ராதிகா தீ மிதிக்கும் போது ஒருவர் கொல்ல நினைக்கிறார். அப்போது தன் மகளுக்காக தான் ராதிகா தீ மிதிக்கிறார் என தெரிந்ததும் அவர் கொல்லவில்லை. ஆனால் அடுத்த நாள் காட்சியில் அருவாள் கொண்டு கொல்ல முயற்சிக்கிறார்.. இதுவும் எந்த லாஜிக்கு புரியல..

டெக்னீஷியன்கள்..

படம் முழுவதும் வெட்டு குத்து வெட்டு குத்து என ரத்தம் திரையில் தெறித்து நம் கண் முகத்தில் படுகிறது. நல்லவேளை 3டி தொழில்நுட்பம் இல்லை.

மிஷ்கின் உதவியாளர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர்தான் எட்டு தோட்டாக்கள் படத்தை இயக்கியிருந்தார். அந்த நம்பிக்கையில் சென்றால் நம்மை ஏமாற்றி விட்டார்.

படத்தில் நந்தலாலா பிசாசு ஆகிய படங்களின் சாயல்கள் முக்கியமாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தெரிகிறது.

படத்தில் எடிட்டிங் என்ற பெயரில் பல காட்சிகளை வெட்டி வெட்டி அருவாள் வெட்டு போல நமக்கும் பல காயங்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அடுத்தடுத்து காட்சிகள் தொடர்பே இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்துடன் நம்மால் ஒன்றே முடியவில்லை.

பின்னணி இசையும் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை.. ஒளிப்பதிவும் சுமார் ரகமே. ஆக்ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் ஃபைட் போல அல்லாமல் எதார்த்தமான சண்டை காட்சிகளாக உள்ளது. எனவே அதனை பாராட்டலாம்.

ஆக மொத்தம்… இந்த ‘குருதி ஆட்டம்’.. குருட்டு ஆட்டம்.. அல்லது அறுவை ஆட்டம் எனலாம்.

Kuruthi Aattam movie review and rating in Tamil

பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

பொய்க்கால் குதிரை விமர்சனம் 3.25/5.; பொய் இல்லாத குடும்ப பாசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தன் மகளுக்காக போராடும் ஒற்றைக்கால் நாயகனின் வாழ்க்கையும் வலியும்.!

கதைக்களம்…

ஒரு விபத்தில் தன் ஒரு காலை இழந்தவர் நாயகன் பிரபுதேவா. இவர் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியை செய்கிறார். இவரது நண்பன் ஜெகன்.

மனைவியை இழந்த பிரபுதேவாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் மகளுக்கு இருதய பிரச்சனை இருப்பது தெரிய வருகிறது.

அதன் அறுவை சிகிச்சைக்காக ரூ.70 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக பலரிடம் பணம் கேட்கிறார் பிரபுதேவா. ஆனால் எவரும் உதவவில்லை.

எனவே ஒரு பிரபல நிறுவனம் சார்பாக கிரவுட் ஃபண்டிங் மூலம் தன் மகளுக்காக பணம் திரட்டுகிறார். ஆனால் வசூலான கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் எஸ்கேப் ஆகிறது.

இதனால் வெறுத்துப் போன பிரபுதேவா இனி நல்ல வழியில் சென்றால் தன் மகளை இழக்க நேரிடும் என்பதால் ஒரு தவறான வழிக்கு முயற்சி செய்கிறார்.

பெரிய கோடீஸ்வரியான வரலட்சுமி மகளை கடத்தி பணம் பறிக்க முயல்கிறார். அந்த குழந்தையை கடத்தும் போது வசமாக சிக்கி கொள்கிறார்.

அதன் பிறகு என்ன ஆனது.? தன் மகளைக் காப்பாற்றினாரா பிரபுதேவா? வரலட்சுமி என்ன செய்தார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஒற்றைக் காலால் நடிப்பதற்கே ஒரு பெரிய தைரியமும் தில்லும் வேண்டும். அதுவும் கோலிவுட் நாயகர்கள் சிலர் இதுபோன்ற விஷப்பரிட்சைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் இதை ஒரு சவாலாக ஏற்று நடித்திருக்கும் பிரபுதேவாவை கண்டிப்பாக பல மடங்கு பாராட்டலாம். ஒற்றைக் காலை வைத்துக் கொண்டு மகளுக்காக உருகுவதும்.. நடனமாடுவதும்.. பைட் செய்வதும் என அசத்திவிட்டார்.

ஒற்றைக்கால் நாயகனுக்கு உதவும் நண்பனாக ஜெகன். சில காட்சிகளில் அயன் பட நண்பர் பாத்திரத்தை நினைவுபடுத்துகிறார்.

படத்திற்கு நாயகி கேரக்டர் தேவைப்படும் என்பதால் ரைசா வில்சன் வருகிறார். அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை.

மகளாக நடித்திருக்கும் ஆலியா பாராட்டுக்குரியவர். அப்பா மீது பாசம் காட்டும் மகளாக நம்மை கவர்கிறார்.

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ள வரலட்சுமியை பாராட்டலாம். ஆனால் அவர் இவ்வளவு ஸ்பீடாக பேசுவது இன்னும் எத்தனை நாளைக்கு.?? நிறுத்தி நிதானமாக பேசினால் ரசிகர்களுக்கு புரியுமே..

வில்லனாக ஜான் கொக்கென். ஓகே தான். இவர் சார்பட்டா பரம்பரையில் நடித்தவர்.

பிரகாஷ்ராஜ் கேரக்டர் வலுவில்லாத ஒன்றாகும். அவரை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.

டெக்னீஷியன்கள்…

இமானின் இசையில் “சிங்கிளு.. சிங்களு..” பாடல் ஆட்டம் போட வைக்கும். பின்னணி இசையிலும் தெறிக்கவிட்டுள்ளார்.

சென்டிமெண்ட் பாடலில் கார்க்கியின் பாடல் வரிகள் பக்க பலம்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரிடம் இருந்து இனி நல்ல படங்கள் வருவதற்கு அறிகுறியாக இந்த படம் அமைந்துள்ளது.

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைப்பதாக எண்ணி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ட்விஸ்ட் என வைத்து போதும் என சொல்ல வைக்கிறார்.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் சிறப்பு.. (DOP – Ballu)

முக்கியமாக இந்த படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர் பிரீத்தி மோகன். இது போன்ற துறைகளுக்கு பெண்கள் வருவது அரிது. துணிச்சலாக வருகை புரிந்துள்ள பிரித்தியை வெகுவாக பாராட்டலாம்.

எனிமி படத்தை தயாரித்த வினோத்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒற்றைக்கால் நாயகனே நம்பி முதலீடு செய்த வினோத் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் தான்.

ஆக.. இந்த ‘பொய்க்கால் குதிரை’.. பொய் இல்லாத குடும்ப பாசம்

Poikkal Kuthirai movie review and rating

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

எண்ணித் துணிக விமர்சனம்.; வைரத்தை விட வைராக்கியமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rain Of Arrows என்டர்டைன்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதி தயாரித்து ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் வழங்க ஜெய், அதுல்யா ரவி, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா நடிப்பில் எஸ் கே வெற்றிச் செல்வன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய படம்.

ஒன்லைன்…

தன் காதலியை சுட்டுக் கொன்ற கொள்ளையர்களை நாயகன் பழிதீர்க்கும் கதை.

கதைக்களம்…

ஜெய் – அதுல்யா காதல் ஜோடிகள். இவர்கள் தங்கள் திருமணத்திற்காக நகை எடுக்க செல்கின்றனர்.

மறுபுறம்… அமெரிக்காவில் உள்ள கொள்ளைக் கும்பல் தலைவன் (தயாரிப்பாளர்) சுரேஷ் சுப்ரமணியம் இந்தியாவில் உள்ள வம்சி கிருஷ்ணா மூலம் டைமண்ட் கொள்ளைகளை நடத்துகிறான் .

இதில் அமைச்சர் சுனில் ஷெட்டி தனக்கு சொந்தமான நகைக் கடை ஒன்றில் உள்ள சுமார் 2000 கோடி மதிப்புள்ள பத்து வைரங்களை வைக்கிறார்.

அந்த கடையில் கொள்ளை நடக்கும் போது..

அதுல்யா அங்கு இருக்கிறார்.

அதே சமயம்… தன் குழந்தை சிகிச்சைக்க்காக தன் நகைகளை விற்க அஞ்சலி நாயரும் வருகிறார்.

அப்போது இவர்களை கொள்ளையர்கள் கொல்கின்றனர்.

எனவே அவர்களை பழி தீர்க்க புறப்படுகிறார் ஜெய். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெய் ஸ்மார்ட்டாக வருகிறார். அதுல்யாவுடன் கெஞ்சுகிறார். பயப்படும்போது அடிக்கடி எங்கேயும் எப்போதும் சீன்களை ஞாபகப்படுத்துகிறார்.

ஆக்சன் காட்சிகளில் அசத்தல். சில நேரம் ஓவர் பில்டப்.

அழகாக வருகிறார் அதுல்யா. பசுமைக்காக போராடுகிறார். ஆனால் முதல் படத்தில் பார்த்த முகப்பொழிவு இப்போ இல்லை.

அஞ்சலி நாயர். : அழகும் நடிப்பும் ஓகே. குழந்தைக்காக ஏங்கும் கேரக்டர்.

சரண்யா ரவி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கவனிக்க வைத்து விடுகிறார். அவர் பேசும் கிழாமத்து பாஷை அழகு.

வித்தியாசமான வேடத்தில் வித்யா பிரதீப்.

ஸ்டைலிஷ் வில்லன் வம்சி கிருஷ்ணா. சாம் சுரேஷ் உள்ளிட்டோரும் கச்சிதம்.

அதிரடி சண்டைக் காட்சிகளில் ஜொலிக்கிறார் ஃபைட் மாஸ்டர் முருகன்.

சாம் சி எஸ் இசை, தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு, சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு அனைத்தும் சிறப்பு.. பாடல்களை விட பின்னணி நன்றாக அமைந்துள்ளது.

வெற்றிசெல்வன் இயக்கியுள்ளார். முதல் பாதி குழப்பமாக இருந்தாலும் 2ம் பாதியில் தெளிவாகி விட்டார். ஆனால் 10 வைரக்கல் ரூ 2000 கோடி என்பது நம்பும்படியாக இல்லை.

வைரக்கல்லை தேடா விட்டாலும் பழி தீர்க்க புறப்பட்ட ஜெய்யின் வைராக்கியமே ‘எண்ணித் துணிக’.

Yenni Thuniga movie review and rating in Tamil

விக்ராந்த் ரோணா விமர்சனம்..2/5.; வீணா போணா..

விக்ராந்த் ரோணா விமர்சனம்..2/5.; வீணா போணா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கமரூட்டு என்ற மலைப் பிரதேச காட்டுப்பகுதிக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சுதீப். (என்ன படத்தில் அவர் போலீஸ் யூனிபார்ம் அணியவே இல்லை இது படத்தில் வரும் காட்சிகள் வசனமாக கூட வருகிறது)

அங்கு 15 குழந்தைகளும், சில நபர்களும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். ஆனால் பேய் தான் அந்த கொலைகளை செய்தது என்று சிலர் நம்புகின்றனர்.

அவற்றைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் போலீஸ்.. திடீர் திடீர் பேய்கள் வருகின்றன.. ஆனால் கடைசில என்னதான் நடக்கிறது என்பதே நமக்கே புரியவில்லை.

கொலைகளுக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சுதீப் இந்த படத்தில் நாயகன்.. நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் நம் மனதை கவர்ந்தவர் சுதீப்.. இந்த படத்தில் செம ஸ்டைலாக இருக்கிறார்.. சுருட்டு குடித்துக் கொண்டே இருக்கிறார்… விசாரணை செய்கிறார்.. ஆட்டம் போடுகிறார்.. அவ்வளவுதான்.

விசாரணைக்கு போகும்போது தன் மகளையும் சில இடங்களுக்கு அழைத்து செல்கிறார்.. அந்த லாஜிக் புரியவில்லை.

அம்மாவாக வரும் பிரியா வி., விஸ்வநாத்தாக வரும் ரவிசங்கர் கவுடா உட்பட பலரும் உள்ளனர்.

பெரிய புள்ளியாக மதுசூதன ராவ். அவரது மகனாக நிரூப் பண்டாரி, நிரூப் காதலியாக நீதா அஷோக் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

இயக்குநர் அனூப் பண்டாரி.. அடிக்கடி காட்டு பகுதிகளை மட்டுமே காட்டுகிறார் இயக்குனர்.. படம் முழுவதும் இருட்டாகவே இருக்கிறது.. ஒருவேளை சூரியனே சூட்டிங் நேரத்தில் உதிக்கவில்லையா என்னவோ?

ஊரில் மக்களே இருப்பதாக தெரியவில்லை.. ஆனால் ஒரு சாராயக் கடை காண்பிக்கப்படுகிறது.. அதில் மட்டும் நிறைய பேர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். படம் முழுக்க இருட்டு நமக்கு டையட் ஆயிட்டு..

ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட்.. முழு படத்தையும் இருட்டில் தான் எடுப்பேன் என்று முடிவெடுத்து விட்டாரோ என்னவோ..

ஆனால் 3d தொழில்நுட்பத்தில் பல காட்சிகளை எடுத்துள்ளனர்.. அதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். போர் அடித்துக் கொண்டிருக்கும் இந்த படத்தை ஓரளவுக்கு நிமிர்ந்து பார்க்க செய்வது 3டி தொழில்நுட்பம் தான்.

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடனமாடும் ஐட்டம் டான்ஸ் செம… ‘ரா ரா..ராக்கம்மா..’ பாடலில் இசையமைப்பாளர் அஜனீஷ் செம மெட்டு… பின்னணி இசையும் பாராட்டும்படி உள்ளது.

ஆர்ட் டைரக்டக்கு நல்ல வேலை.. பேண்டஸி படமாக எடுக்க நினைத்து விட்டார்கள்.் அதனால் கலை இயக்குனரை நல்ல வேலை வாங்கி உள்ளார்.. இடையில் பேய் படம் போல த்ரில்லராக எடுக்க முயற்சித்துள்ளார். இப்படியாகவே காட்சிகள் நகர்கின்றன..

ஆக விக்ராந்த் ரோணா.. வீணா போணா..

VikrantRona movie review and rating in Tamil

பேட்டரி விமர்சனம்.; சாமானியனின் சார்ஜ்

பேட்டரி விமர்சனம்.; சாமானியனின் சார்ஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இதய சிகிச்சையில் கூட இரக்கமற்ற நபர்களின் வியாபாரமே கதை.

மணிபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன், அம்மு அபிராமி, மற்றும் தீபக் நடிப்பில் உருவான படம் ‘பேட்டரி’.

கதைக்களம்…

சப் இன்ஸ்பெக்டர் ஹீரோ செங்குட்டுவன். சென்னையில் ஒரு கொலை நடக்க அந்த விசாரணையில் இறங்குகிறார் ஹீரோ.

அந்த நபர் கொலை செய்யப்படும்போது அவரது வாயில் பல பேட்டரிகளை திணித்து கொல்லப்படுகிறார். இதுபோல அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன.

ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்லப்படுகிறார். தீவிர விசாரணையில் இறங்கியும் துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.

பேட்டரிகளை வாயில் திணித்து கொல்லப்படுவது ஏன்? இந்த கொலைகளை யார் செய்வது? எதற்காக செய்கிறார்கள்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

ஹீரோ செங்குட்டுவன் கம்பீரமான போலீசாக வருகிறார். கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். சில காட்சிகளில் மெச்சூரிட்டி தேவை. முகபாவனைகள் போதுமான அளவு இல்லை.

கதையின் நாயகியாக அம்மு அபிராமி. முதலில் படத்துடன் ஒட்டாமலே இவரின் கேரக்டர் நகர்வது போல தெரிந்தாலும் கிளைமாக்ஸ் இல் இயக்குனர் ஒரு ட்விஸ்ட் கொடுத்துள்ளது சிறப்பு. ஆனால் ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்பது போல பல காட்சிகள் வருகிறார் அம்மு.

போலீஸ் அதிகாரியாக யோக் ஜேபி, தீபக் ஷெட்டி ஆகியோர் போலீசுக்கு உரித்தான கம்பீரத்தையும் தோற்றத்தையும் கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் அபிஷேக், நாகேந்திர பிரசாத், எம்.எஸ்.பாஸ்கர், சிறுமி மோனிகா என அனைத்து நடிகர்களும் கச்சிதம்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் பயணித்துள்ளது சிறப்பு. கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்.

மருத்துவத்துறையில் நடக்கும் மோசடியை பல படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இதில் பேஸ்மேக்கரில் பொருத்தப்படும் பேட்டரிகளாலும் அதில் நடக்கும் திருட்டு மோசடிகள் என அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணி பாரதி.

இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக இந்த பேட்டரி படம் க்ரைம் மெடிக்கல் த்ரில்லராக அமைந்துள்ளது.

ஆக… இந்த பேட்டரி… சாமானியனின் சார்ஜ்

Battery movie review and rating in Tamil

More Articles
Follows