எச்சரிக்கை விமர்சனம்

எச்சரிக்கை விமர்சனம்

‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

இதில் சத்யராஜ், வரலட்சுமி, கிஷோர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசை – சுந்தரமூர்த்தி,

ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,
படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ்,
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்,
எழுத்து, இயக்கம் – கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். மா, லட்சுமி உள்ளிட்ட பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

கதைக்களம்…

தன் 19 வயதில் தந்தையை கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்கு சென்று 15 வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார் கிஷோர்.

சிறுவயதில் அனாதையாக விடப்பட்ட தனது அக்கா மகன் விவேக் ராஜ்கோபாலை தேடி வருகிறார்.

அதன் பின்னர் இருவரும் சேர்ந்து ஒரு பெண்ணை (வரலட்சுமி) கடத்தி கோடிக்கணக்கில் பணம் பறித்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர்.

கிஷோரின் தம்பி தன் காதலியான வரலட்சுமியை கடத்த திட்டமிடுகிறார். கிஷோருக்கு தன் தம்பியின் காதலி என்பது தெரியாது.

அதன்படி கடத்துகின்றனர். பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

வரலட்சுமியின் தந்தை திறமையான ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி சத்யராஜை நாடுகிறார்.

ஆனால் சத்யராஜ்க்கோ மனைவியில்லை. வீட்டில் உடல் நிலை பாதிக்கப்ட்ட தன் மகள் மட்டுமே இருக்கிறாள். முதலில் மறுக்கும் அவர் வீட்டில் இருந்தபடியே உதவ நினைக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? வரலட்சுமியை காப்பாற்றினாரா? தம்பி காதலியை கடத்தும் நோக்கம் என்ன? கிஷோர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்..

கடத்தல்காரனை பிடிக்க சத்யராஜ் போடும் திட்டங்கள் ரசிக்க வைக்கிறது. மகள் பாசம், கடமை என தடுமாறினாலும் அந்த கம்பீரம் செம.

தன் தம்பி தனக்கு தெரியாமல் போடும் திட்டத்தால் கடைசியில் தடுமாறும் கிஷோர் எடுக்கும் முடிவு நல்ல ட்விஸ்ட்.

கிஷோரின் தம்பியும் அவரது நடிப்பில் கச்சிதம். வரலட்சுமியை பெரும்பாலும் கட்டி போட்டு விட்டனர். எனவே அவரது கேரக்டரில் பெரிய சுவாரஸ்யம் இல்லை.

கடத்தல் விறுவிறுப்பான திரைக்கதையில் சில நேரங்கள் காதல் பாடல் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதை குறைத்திருக்கலாம்.

குறும்படங்களை இயக்கியவர் சர்ஜீன். இதில் க்ளைமாக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

க்ளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் என்றாலும் அது ரசிக்க வைக்கவில்லை.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பாடல்கள் சுமார். பின்னணி இசையில் ஜெயித்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்… ஒருமுறை பார்க்கலாம்.

Comments are closed.

Related News

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எச்சரிக்கை…
...Read More