தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
பழனி மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சூப்பர் வைசராக வேலை பார்க்கிறார் சித்தார்த். அண்ணன் தவறியதால் அண்ணி மற்றும் 8 வயது மகள் இருக்கிறார். அண்ணிக்கு உடன்பிறந்த தம்பியை போல ஆதரவாக இருக்கிறார்
தன் பள்ளி தோழி துப்புரவு தொழில் செய்யும் நிமிஷா சஜயனை காதலித்து வருகிறார் சித்தார்த்.
ஒவ்வொரு நிமிடமும் தன் அண்ணன் மகளையே (செல்ல பெயர் சேட்டை) நினைத்து பாசம் கொட்டுகிறார் சித்தார்த். பள்ளியில் கொண்டு விடுவதும் அழைத்து வருவதை கடமையாக செய்து வருகிறார். அவரும் சித்தப்பாவை சித்தா சித்தா என்று அழைப்பார்.
சித்தார்த்தின் நெருங்கிய நண்பர் வடிவேலு. அவர்கள் வீட்டில் உள்ள அக்கா மகளுடனும் (பெயர் பொன்னி) பாசமாக பழகி வருகிறார் சித்தார்த்.
ஒரு சூழ்நிலையில் தன் மகளுக்கும் அவளின் பள்ளி தோழிக்கும் சின்ன (பொன்னி & சேட்டை) சண்டை வருகிறது. இந்த சூழ்நிலையில் அவளின் தோழியே சமாதானம் செய்ய பைக்கில் கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட செல்கிறார்.
சில மணி நேரங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் பொன்னி. உன் மகளை விட்டுவிட்டு எங்கள் மகளை மட்டும் நீ தனியாக அழைத்து வர காரணம் என்ன என கேட்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் பொன்னி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிகிறது. எனவே சித்தார்த் மீது பாலியல் புகார் விழுகிறது.
இதன்படி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் சித்தார்த். அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் என்ன ஆனது? சித்தார்த் நிரபராதி என நிரூபித்தாரா? அப்படி என்றால் குற்றவாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை
கேரக்டர்கள்..
ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்த இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்.. இவரை சித்தா சித்தா என்று தன் அண்ணன் மகள் அழைக்கும் போதெல்லாம் உருகுவதும் அவர் மீது பாசம் கொட்டுவதும் என ஒரு தந்தையாக தரம் உயர்ந்து நிற்கிறார்.
தன்மீது பாலில் குற்றம் சாட்டப்பட்ட பின் எதையும் செய்வது அறியாமல் சித்தார்த் தவிக்கும் காட்சிகள் சிறந்த நடிகனை காட்டியிருக்கிறது.
சித்தார்த் காதலியாக நிமிஷா சஜயன் மற்றும் அண்ணியாக அஞ்சலி நாயர். இரண்டு பெண் குழந்தைகளாக சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.
அதிலும் நிமிஷா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.மலையாளத்தில் சிறந்த நடிகையாக பெயர் எடுத்த இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இனி இவரை தேடி வாய்ப்புகள் குவியும்.
சித்தார்த், நிமிஷா, அஞ்சலி ஆகிய மூவரும் மட்டுமே அனுபவிக்க கலைஞ்ர்கள். அவர்களுக்கு ஈடு கொடுத்த நடிப்பை குழந்தைகளும் கொடுத்துள்ளனர்.
சித்தார்த் நண்பர்கள் வடிவேலு & சதீஷ்.. போலீஸ்.. பாலியல் குற்றவாளி என ஒவ்வொருவரும் நாம் அன்றாட பார்க்கும் மனிதர்களாக உணர வைத்துள்ளனர்.
போலீஸ் படங்களில் காட்டப்படும் கமர்சியல் போலீசாக அல்லாமல் யதார்த்த போலீசாக ஒவ்வொருவரும் நடித்துள்ளனர் என்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
டெக்னீசியன்கள்…
திரைக்கதை அமைப்பதிலும் வசனங்களிலும் தான் ஒரு இயக்குனரின் பலம் புரியும். அதை இரண்டையும் சரியாக கொடுத்திருக்கிறார் அருண்குமார்.
வசனத்தில்…
ஆண்கள் எவனும் உத்தமன் இல்லை.. தன் வீட்டு பெண்களை பொக்கிஷமாகவும் அடுத்த வீட்டுப் பெண்களை வேறு மாதிரியாகவும் பார்க்கின்றனர்.. நான் இப்போ உன்னை ஓடி வந்து பார்க்கும்போது ஆண்களின் கண்கள் என் மார்பு மீது தான் இருந்திருக்கும் என நாயகி பேசும் போது… (சிலருக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.)
பெண் குழந்தைகள் அவர்கள் விவரம் அறியும் வரை பொத்தி பொத்தி வளர்ப்பது அவசியம் என இன்றைய சூழலை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதேசமயம் செல்போன் வீடியோ விளையாட்டுக்களால் குழந்தைகளின் கவனம் சிதறுவதையும் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார்.
பழனி என்றாலே கோயில்தான். ஆனால் கோயிலை மையப்படுத்தாமல் உடுமலைப்பேட்டை பழனி உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை காட்சிகளையும் அழகாக படம் பிடித்துள்ளார். பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணி.
குடும்ப உறவு… த்ரில்லர் பாணி என இரண்டு இசை முறைகளையும் சரிசமமாக கொடுத்து மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ். பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் விஷால் சந்திரசேகர்.
சுரேஷ் A.பிரசாத்தின் எடிட்டிங் பணிகள் இதை ஒரு திரில்லர் பாணியில் கொண்டு செல்கிறது.. முக்கியமாக குற்றவாளியை போட்டு தள்ள சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சீட்டு நுனியில் அமர வைக்கும் காட்சிகள்.
பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தான் இந்த படத்தின் இயக்கி இருக்கிறார் அவரது முந்தைய படங்களைப் போலவே இதிலும் குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார். கொஞ்சம் திரில்லர் கலந்து கொடுத்து சுவை கூட்டி இருக்கிறார்.
கதைக்குத் தேவையான நடிகர்களையும் அவர் சரியாக தேர்ந்தெடுத்துள்ளது அவரின் நம்பிக்கை வலுவை காட்டுகிறது.
நம் குழந்தைகளுடன் நெருங்கி பழகும் எந்த நபராக இருந்தாலும் அவரையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அருண்.
ஆக சித்தா… சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்
Chithha movie review and rating in tamil