‘படம் நல்லாயிருந்தா உடனே சொல்லுங்க… நல்லாயில்லேன்னா அப்புறம் சொல்லுங்க…’ உதயநிதி

Saravanan Irukka Bayamaen Press Meet Photos (7)எழில் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, லிவிஸ்டன், ரவிமரியா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வருகிற மே 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

விழாவில் உதயநிதி பேசும்போது…

“’எம்புட்டு இருக்குது ஆசை’ பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய ஹிட்டாக ரெஜினாதான் காரணம்.

‘கெளரவ் படம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படங்களை தொடர்ந்து 3வது ஆக நான் ஒப்பந்தமான படம்தான் இது.

ஆனால் இந்த படம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்கு காரணம் இயக்குனர் எழில்.

இந்த படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் செய்யுங்கள் எழுதுங்கள். படம் நன்றாக இல்லை என்றால் 3 நாட்கள் கழித்து எழுதுங்கள்” என்று பேசினார்.

Udhayanithi request regarding movie reviews at Saravanan Irukka Bayamaen Press meet

Overall Rating : Not available

Related News

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும்…
...Read More
ஒரு படத்தை முடித்துவிட்டே தன் அடுத்த…
...Read More
தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் வாரிசு…
...Read More

Latest Post