ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், கல்யாணி நட்ராஜன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர்.
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : பி.சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : 24ஏஎம் ஸ்டூடியோஸ் – ஆர்.டி.ராஜா

remo 3

கதைக்களம்…

சினிமாவில் நடித்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை போல வரவேண்டும் என துடிக்கும் சிவகார்த்திகேயன் சான்ஸ் தேடி அலைகிறார்.

அதற்காக பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்திக்கிறார்.

ஆனால், அவரின் கதைப்படி பெண் வேடமிட ஒரு ஹீரோ தைரியமாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

அதற்காக துணியும் சிவகார்த்திகேயன், பெண் வேடமிட்டு கேஎஸ்ஆரை கவர நினைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பெண் வேடத்தில் இருக்குபோது இவர், கீர்த்தி சுரேஷை சந்திக்க அவர் மீது காதல் வருகிறது.

அப்போது எஸ்கே பெண் என்று நினைத்து கீர்த்தி இவரிடம் நெருங்கி பழகிறார்.

அதன்பின்னர் நாம் என்ன சொல்லபோகிறோம் என்று தெரியாதா உங்களுக்கு..? காதல் கைகூடியதா? பெரிய நடிகர் ஆனாரா? என்பதே இந்த ரெமோ.

remo 1

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகன் நாயகி எல்லாம் எஸ்கே.தான். அதிலும் ரெஜினா மோத்வானி (ரெமோ) ஆக வரும் காட்சிகளில் டபுள் சென்சுரி அடிக்கிறார்.

நிச்சயம் இதற்கு ஒரு கெத்து வேண்டும். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பொருந்திய பெண் வேஷம் போன்று சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு பொருத்தம்.

லேடி கெட்டப்பில் இடும் பைட் செம. எதிரிகளை அடித்து விட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சியின் போது, ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகும்.

காதலி வீட்டுல படுக்கிற பாக்கியம் எத்தனை பசங்களுக்கு கிடைக்கும், அதுவும் அவ நைட்டிய போட்டுக்கிட்டு படுற சுகமே தனி தான் எனும் போது கிளுகிளுக்க வைக்கிறார்.

இவர் பெண்ணாக இருக்கும்போதும், ஆணாக வரும்போதும் அது என்னமோ கீர்த்தியிடம் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. எப்படி ப்ரோ? இதெல்லாம்?

ஹீரோயின் கேரக்டரும் படத்தில் செம வெயிட். அதில் குறை வைக்காமல் ஸ்கோர் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.

நிச்சயம் செய்தபின் காதல் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் படி தன் அழகிய கண்களால் உணர வைக்கிறார்.

அப்பா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட என்னால நிம்மதியா வாழ முடியாது என்று சொல்லும்போது கண் கலங்க வைக்கிறார்.

மேலும் பி.சி. ஸ்ரீராமின் கேமரா கண்களில் செம பிகராய் தெரிகிறார் கீர்த்தி. மேனகா மேடத்திடம் சொல்லி திருஷ்டி சுத்திதான் போடனும் போல.

சதீஷின் ஒன் லைன் காமெடி வரிகள் ரெமோவுக்கு கைகொடுத்திருக்கிறது. இவருடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

உதாரணத்திற்கு… முகத்தில மாவு இருக்கும்போது.. அடிக்கிற வெயிலுக்கு வெளியில போனா தோசையாயிடும் அதான் உள்ளிட்ட படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.

சில நேரமே வந்தாலும் என் காமெடி சோடை போகாது என்கிறார் யோகி பாபு.

பஸ்சில் ஸாரி சொல்லும்போது, கண்டக்டர் டிரைவர் இருவரையும் பிரித்து எடுத்துக்க சொல்லுவது, டானு டானு பாடல்கள் என இவர் வரும்போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

வழக்கம்போல் லவ்வுக்கு கீரின் சிக்னல் காட்டும் சினிமா அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்.

கீர்த்தியின் அப்பாவாக நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

remo 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இப்படத்தை முழுமையாக ரசிக்க வைக்க முழுக்காரணமே பி.சி. ஸ்ரீராம்தான். அவ்வளவு அழகாக ஒவ்வொரு ப்ரேமையும் பார்க்க வைக்கிறார்.

இத்தனை நாட்களாக பாடல்களில் கவனம் செலுத்திய அனிருத், இப்படம் மூலம் பின்னணி இசையில் முன்னணிக்கு வருகிறார். கமான் அனி.

கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணத்தின் மருத்துவமனை, வீடு, சூட்டிங் லொக்கேஷன் அனைத்தும் ரசிக்கும் ரகமே.

சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, எஸ்.கேயின் குரலை அழகான பெண் குரலாக மாற்றியிருப்பது சிறப்பு.

remo 4 stills

படத்தின் ப்ளஸ்

  • சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் அழகும் நடிப்பும்
  • பி.சி.ஸ்ரீராம் மற்றும் அனிருத்
  • ‘பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி’… புடிச்ச புடவைய கட்டிகிட்டு இவ்ளோ அழகா இருக்கீங்க, புடிச்சவனையே கட்டிக்கிட்ட வாழ்க்கையே அழகா இருக்கும்…  உயிரா காதலிப்பாங்க, உயிரை கொடுத்தும் காதலிப்பாங்க பசங்க… உள்ளிட்ட பல வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

remo 5

இயக்குனர் பற்றி…

அண்மைக் காலமாக வரும் படங்களில் ஒரு குரல் பேச படம் ஆரம்பிக்கும்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணனும் அந்த பாணியில் ஆரம்பித்து, கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரையே ‘ரெமோ நீ காதலன்’ படத்தின் டைரக்டர் ‘பாக்யராஜ் கண்ண’னாக  மாற்றியிருப்பது நச்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ரெமோ… சிவகார்த்திகேயனின் அடுத்த லெவல்

Comments are closed.

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…
...Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…
...Read More