மெர்சல் விமர்சனம்

மெர்சல் விமர்சனம்

நடிகர்கள் : விஜய், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : அட்லி
இசை : ஏஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: விஷ்னு
படத்தொகுப்பு: ரூபன்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி, கிளாமர் சத்யா, ரியாஸ்
தயாரிப்பு : தேனாண்டாள் பிலிம்ஸ்

mersal dance

கதைக்களம்…

வெற்றிமாறன் என்ற தளபதி விஜய் மற்றும் நித்யாமேனனுக்கு இரண்டு குழந்தைகள்.

ஒரு சூழ்நிலையில் தாயும் தந்தையும் கொல்லப்பட இரு குழந்தைகள் பிரிகின்றனர்.

ஒருவர் டாக்டர் ஆக, மற்றொருவர் மேஜிக் மேன் ஆகிறார்.

இவர்களில் ஒருவர் தொடர்ந்து கொலைகளை செய்ய, போலீஸ் அவரை கைது செய்கிறது.

இவர் எதற்காக கொலை செய்கிறார்? என்ற கதைக்களத்துடன் படம் செல்கிறது. அதன்பின்னர் வரும் அதிரடி திருப்பங்களே படத்தின் மீதிக்கதை.

mersal kajal

கேரக்டர்கள்…

இதுவரை 3 வேடங்களில் நடிக்காத விஜய் இதில் மிரட்டியிருக்கிறார். அதிலும் தளபதி கேரக்டரில் இவரின் பாடி லாங்குவேஜ் அசத்தல்.

தன் ரசிகர்களுக்கு ஏற்ற வகையிலும் அதே சமயம் படத்திற்கு ஏற்ற வகையிலும் தன் கேரக்டரை பெஸ்ட்டாக கொடுத்துள்ளார்.

விஜய்க்கு நித்யாமேனன் கெமிஸ்டரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

3 நாயகிகள் இருந்தாலும் அதிகம் ஸ்கோர் செய்பவர் நித்யாதான். ஐசு கேரக்டரில் உருவ வைக்கிறார்.

2வது இடம் பெறுகிறார் சமந்தா. டேய் தம்பி என்று விஜய்யை அழைப்பதும், ரோஸ்மில்க் வாங்கி தரேன்டா என சொல்லுவதும் ரசிக்கும் ரகம்.

தெலுங்கு பட ஹீரோயினை போல காஜல் வந்து செல்கிறார்.

திரையில் தோன்றும்போதே படத்தின் நாயகன் போல எதிர்பார்ப்பை உண்டாக்குகிறார் வில்லன் எஸ்.ஜே.சூர்யா. சபாஷ் ஜி.

அனுபவமிக்க நடிகர்களான சத்யராஜ், கோவை சரளா, வடிவேலு கேரக்டர்களில் அழுத்தமில்லாமல் செய்துவிட்டார் அட்லி.

யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து சென்றாலும் சிரிக்க வைக்கிறார்.

mersal poster kaalai

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏஆர். ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் செம மெர்சல்.

மெர்சல் அரசன், ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு விஜய்யை துள்ளி வைத்து ஆடவைத்திருக்கிறது.

எடிட்டர் ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே.விஷ்னு ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

mersal vijay dance

பிளஸ்…

படம் முழுவதும் விஜய் தெறிக்கவிட்டுள்ளார்.

ஏஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டல்.

க்ளைமாக்ஸில் ஜிஎஸ்டி வசனங்களும் மெடிக்கல் துறை ஊழலும் கைத்தட்டல்களை அள்ளும்.

பைட் மாஸ்டர் கனல் கண்ணன் ஆக்சன் காட்சிகளில் அடி தூள் பண்ணியிருக்கிறார்.

mersal stills

மைனஸ்…

சமந்தா, காஜல்அகர்வால் கேரக்டர்கள் பாட்டுக்காக வந்துபோவது போல் உள்ளது.

ரொமான்ஸ் இருந்தாலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சத்யராஜ் கேரக்டரில் வெயிட் இல்லை. வடிவேலு இருந்தும் காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை.

 

Mersal-Movie-Shooting-Spot

இயக்கம் பற்றிய அலசல்…

ரமண கிரிவாசன் மற்றும் அட்லியின் வசனங்கள் அரசியலை சாடியிருக்கிறது. அதை விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் அரசியல் பேசும்போது இன்னும் பளிச்சிடுகிறது.

விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது இல்லத்தரசிகளையும் கவரும் வித்தை தெரிந்தவர் அட்லி. போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கிறார்.

ஆண்டவனை நம்பி மசிர கொடுக்கிறோம். டாக்டர நம்பித்தான் உசிர கொடுக்கிறோம் என்ற டயலாக்குகளும் மருத்துவ துறையில் ஊழல் வந்தால் எப்படி மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை அப்பட்டமாக கமர்ஷியல் மசாலா கலந்து சொல்லியிருக்கிறார் அட்லி.

அரசு மருத்துவமனைகளை பார்த்து மக்கள் பயப்படுவதுதான் தனியார் மருத்துவனைகளின் பலம்.

பிரதமர், முதல்வர், அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். அப்பொழுதுதான் இந்திய மருத்துவதுறையை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்ற வசனம் செம.

படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தமான காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்களோ? என்னவோ?

இரண்டு கேரக்டர்கள் என்றாலே ஆள்மாறாட்டம் செய்துவிடுகிறார்கள். அந்த பார்முலா? இன்னும் எத்தனை காலத்துக்குதான்..?

மெர்சல்… மிரட்டல் விஜய்

Comments are closed.

Related News

தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More