காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்

நடிகர்கள்: ஜெய்வந்த், ஐரா, ஆடுகளம் நரேன், யோகி தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் – யுரேகா
ஒளிப்பதிவு – மணி பெருமாள்
இசை – விஜய் சங்கர்
தயாரிப்பு : வி.ஜி. ஜெய்வந்த்
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

ஒரு சேட் வட்டி தொழில் செய்கிறார். அவர் நிறுவனத்தின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அவரது ஊழியர்களின் வாகனங்கள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இது தங்களது எதிரி கம்பெனிகளின் சதியாக இருக்கும் என நினைக்கின்றனர்.

ஆனால் இதை ஒரு சைக்கோ ஒருவர்தான் செய்கிறார் என தெரிய வருகிறது. அந்த சைக்கோ யார்? எதற்காக குறிவைத்து ஒரு நிறுவனத்தின் வாகனங்களை எரிக்கிறார்? என்பது புரியாமல் போலீசை நாடுகின்றனர்.

இதை விசாரிக்க ஒரு காட்டுப்பய தான் வேண்டும் என்பதால் காட்டுத்தனமான போலீஸ் காளியை நாடுகிறார் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன்.

காளி என்ன செய்தார்? எப்படி கண்டு பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போலீஸ்க்கு உரித்தான முரட்டுத்தனமாக இருக்கிறார் நாயகன் ஜெய்வந்த்.

அதிலும் காட்டுத்தனம் என்பதால் ரொம்பவே காட்டியிருக்கிறார். ஆனால் க்ளைமாக்சில் இவர் காட்டும் அந்த 15 நிமிட டயலாக் ரொம்பவே ஓவர்.

ஐரா படத்தின் நாயகி. அனாதை பெண்ணாக வந்து இறுதியில் கம்பீரம் காட்டியிருக்கிறார். படத்தில் இவருக்கான காட்சிகள் குறைவே.

வில்லன்களாக சி.வி.குமார், அபிஷேக், மூணாறு ரமேஷ்,மாரிமுத்து அனைவரும் தங்களது கேரக்டர்களில் கச்சிதம்.

ஒரு சஸ்பென்ஸ் கலந்த திரில்லரை சமூக பொறுப்புடன் கொடுக்க என நினைத்திருக்கிறார் யுரேகா.

இதனால் தேவையில்லாத பாடல்களை இடையில் சொல்லி வெறுப்பேத்தி விட்டார்.

லோன் என்ற பெயரில் அப்பாவிகளிடம் வங்கிகள் செய்யும் மோசடியை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அதற்காக சேட் லோன் என நீண்ட திரைக்கதையுடன் சொல்லி கொஞ்சம் குழப்பிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் மீது இருக்கும் அன்பு, வடநாட்டினர் மீது இருக்கும் ஆதங்கம் ஆகியவற்றை வலுக்கட்டயமாக திணித்திருக்கிறார் டைரக்டர் யுரேகா.

சொல்லவேண்டிய விஷயத்தை ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். ஆனால் வலுவில்லாத திரைக்கதையால் தடுமாற்றத்துடன் சொல்லியிருக்கிறார்.

காட்டுப்பய சார் இந்த காளி… ஆனால் கெட்டிக்காரத்தனம் இல்லையே

Kattu Paiyan Sir Intha Kaali movie review and posting

Comments are closed.

Related News

ஊடகவாதியான யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்…
...Read More
ஊடகவாதியான யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம்…
...Read More