அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

அதர்மத்தை சுளுக்கு எடுப்பான்..; சுல்தான் விமர்சனம்

ரெமோ படத்திற்கு பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் தான் ‘சுல்தான்’.

நடிகர்கள் : கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால் யோகிபாபு, KGF கருடன் புகழ் ராமச்சந்திர ராஜு மற்றும் பலர்.
ஒளிப்பதிவு : சத்யன்
இசை : விவேக் – மெர்லின்
பிண்ணனி இசை : BGM கிங் யுவன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ணன்
தயாரிப்பு : ட்ரீம் வாரியர்ஸ்

கதைக்களம்…

கார்த்திக்கும் விவசாயத்துக்கும் அப்படியொரு கனெக்சனுக்கு எப்போதுமே உண்டு.. அதை மையப்படுத்தி கொஞ்சம் ரவுடியிசம் கலந்து கொடுத்துள்ளார் பாக்யராஜ் கண்ணன்.

கார்த்தி (சுல்தான்) அப்பா நெப்போலியன். இவர் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவர்.

அம்மாவை இழந்தவர் கார்த்தி. மும்பையில் ரோபோட்டிக்ஸ் என்ஜினியராக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீஸ் நடத்திய என்கவுன்டரில் நெப்போலியன் மரணிக்கிறார்.

ஒரு கிராமத்தினருக்கு அப்பா கொடுத்த வாக்கை காப்பாற்றவும் அந்த 100 ரவுடிகளின் கேங்கை காப்பாற்றவும் வருகிறார் கார்த்தி.

ஆனால் அடியாட்கள் போல பயன்படுத்தாமல் அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கிறார் கார்த்தி.

ஆனாலும் அவருக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மூலம் விவசாய பிரச்சினை வருகிறது.

மோசமான ரவுடியிடம் (கே.ஜி.எஃப். படம் புகழ் ராம்) இருந்து தங்கள் நிலத்தை காக்குமாறு விவசாயிகள் சுல்தானிடம் கேட்கின்றனர்.

அதன் பின் கார்த்தி என்ன செய்தார்.? என்ன நடந்தது என்பதே மீதிக்கதை கதை.

கேரக்டர்கள்…

கமர்ஷியல் படங்களில் உள்ள மாஸ் ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் செய்திருக்கிறார் கார்த்தி.. ஆக்சன் காட்சிகளில் அசத்தல்.

ருக்மணி (ராஷ்மிகா) இடையேயான காதல் காட்சிகள் சிறப்பு. ரஷ்மிகா காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும் நிறைய காட்சிகள் இல்லை. ராஷ்மிகா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

யோகி பாபு, சென்ராயன் காமெடி ஆங்காங்கே நம்மை சிரிக்க வைக்கிறது.

நெப்போலியன் & லால், அபிராமி காட்சிகள் கச்சிதம். பொன்வண்ணன், ரமா, சிங்கம்புலி, மயில்சாமி, மாரிமுத்து ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம். சுல்தானுக்கு சரியான பில்டப் கொடுத்து வெறியேத்துகிறார்.

ஒளிப்பதிவில் குறைவில்லை. எடிட்டர் தான் நம்மை சோதிக்கிறார்.

ரவுடியிசம், விவசாயம், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்து ஒரு பக்கா மசாலா படத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாக்யராஜ்.

முதல் பாதியும் இடைவேளையும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இரண்டாம் பாதி படம் மிகவும் நீளம். அதை குறைத்திருக்கலாம்.

விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை இன்றைய இளைஞர்களும் புரியும்படி தந்துள்ளார்.

ஆக…. விவசாயத்தை அழிக்க வரும் கார்ப்பரேட்டுகளை நிச்சயம் சுளுக்கு எடுப்பான் சுல்தான்.

Karthi in Sulthan Movie review in Tamil

Comments are closed.