எங்க காட்டுல மழை விமர்சனம்

எங்க காட்டுல மழை விமர்சனம்

நடிகர்கள்: மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, மிலோ, கார்த்தி, சாம்ஸ், அருள்தாஸ், மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் – ஸ்ரீபாலாஜி
ஒளிப்பதிவு – ஏஆர். சூர்யா
இசை – ஸ்ரீவிஜய்
தயாரிப்பு : சி. ராஜா
பிஆர்ஓ : நிகில் முருகன்

கதைக்களம்…

குள்ளநரி கூட்டம் என்ற அழகான வெற்றிப் படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் இது.

நாயகனாக மிதுன் மகேஸ்வரன் நாயகியாக சுருதி ராமகிருஷ்ணன் நடித்துள்ளனர்.

மிதுன் மகேஸ்வரன், தனது நண்பன் அப்புக்குட்டியை தேடி சென்னை வருகிறார். ஆனால் அவரின் முகவரி தெரியாமல் தன்னுடன் பயணிக்கும் ஒருவருடன் நட்பாகி அவர் அப்பார்ட்மெண்டிலேயே வசிக்கிறார்.

இதனிடையில் நாயகி ஸ்ருதிக்கு உதவி செய்ய, இருவருக்கும் காதல் உண்டாகிறது.

இதனிடையில் போலீஸ் அருள்தாஸிடம் சின்ன பிரச்சினை ஏற்படுகிறது.

அதன்பின்னர் அப்புக்குட்டியை சந்திக்க, அவருடன் ஒரு பழைய இடிந்துப் போன கட்டிடத்தில் தங்குகின்றனர்.

ஒருநாள் போலீஸ் அருள்தாஸை பழிவாங்க, அவரிடம் இருக்கும் ஒரு பையை திருடி வருகிறார் மிதுன்.

அதன்பின்னர்தான் அந்த பையில் கோடிக்கணக்கான பணம் இருகிறது என்பது தெரிய வருகிறது.

அந்த பணத்தை தங்களின் பழைய கட்டிடத்தில் புதைத்து வைக்கின்றனர். அதில் உள்ள கொஞ்ச பணத்தை எடுத்து வெளியூர்களுக்கு சென்று என்ஜாய் செல்கின்றனர்.

திரும்பி வந்து பார்த்தால், அந்த இடத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசனே உருவாகி நிற்கிறது.

இதனால் பணத்தை அங்கிருந்து எடுக்க திட்டமிடுகின்றனர்.

காவல் நிலையத்திலிருந்து பணத்தை எப்படி எடுத்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் மிதுன் மகேஸ்வரன் சில நேரங்களில் பார்ப்பதற்கு நடிகர் சேது போலவே இருக்கிறார்.

எங்கேயும் எப்போதும் படத்தில் அறிமுகமாகி, சில படங்களில் நடித்தவர்தான் இந்த மிதுன் மகேஸ்வரன்,
நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில் இன்னும் கவனம் தேவை.

ஸ்ருதிக்கு பார்த்த மாப்பிள்ளையாக உள்ள சாம்ஸிடம் இவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க தக்கவை.

நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஜில்லென்று வந்து ரசிகர்களை சூடேற்றுகிறார். அழகான நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

மிடுக்கான போலீசாக அருள்தாஸ் அருமை. சில காட்சிகளில் வந்தாலும் சாம்ஸ் சபாஷ் போட வைக்கிறார்.

அப்புக்குட்டிக்கு இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளது. எனவே அவரும் கிடைத்த காட்சிகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அப்புக்குட்டி & மதுமிதா காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

குள்ளநரி கூட்டம் படத்திற்கு பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை காமெடியாக கொடுக்க நினைத்துள்ளார்.

அதில் ஓரளவே முயற்சித்துள்ளார்.

பணப்பை காணாமல் போனது முதல் பரபரப்பை கூட்ட முயற்சித்துள்ளார் டைரக்டர் ஸ்ரீ பாலாஜி. ஆனால் அடுத்தடுத்து காட்சிகளை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இல்லை.

ஸ்ரீ விஜய்யின் இசையில் மெலோடி பாடல் ரசிக்கலாம். சூர்யா ஏ.ஆர். ஒளிப்பதிவில் காட்சிகள் படத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

ஆனால் திரைக்கதையில் ட்விஸ்ட்டும் இல்லை. ஆக்சனும் இல்லை என்பதால் தொய்வு ஏற்படுகிறது.

இதற்கு நடுவில் இரண்டு நாய்கள் காதல் கதை வேற. அதற்கு வாய்ஸ் ஓவர் வேற கொடுத்துள்ளனர்.

அந்த பணம் நாயகனுக்கு கிடைக்கும்போது, அதை நல்லவிதமாக முடிக்காமல் நாய் வாயில் பையை வைத்து ஏதோ குழப்பி விடுகிறார் டைரக்டர்.

எங்க காட்டுல மழை… ஆனால் ரசிகர்கள் காட்டுல…?

Related Articles