ட்விஸ்ட் ப்ரோ… தம்பி விமர்சனம் 3.25/5

ட்விஸ்ட் ப்ரோ… தம்பி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

MLA சத்யராஜ் & சீதா தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகள் (ஜோதிகா) ஒரு மகன்.

இவர்களின் மகன் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி போய்விடுகிறார். தன் தம்பிக்காக 15 வருடங்கள் காத்திருக்கிறார் ஜோ. தன் தம்பி வரும்வரை திருமணம் செய்துக் கொள்ளாமலும் இருக்கிறார்.

இந்த நிலையில் கோவாவில் அடிப்பட்ட பிராடு கார்த்தியை உங்கள் மகன் கிடைத்துவிட்டான் என சொல்கிறார் போலீஸ் இளவரசு.

சத்யராஜீம் இவன் என் மகன் தான் என வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால் கார்த்தி ஒரு திருடன் என்பது பாட்டி சௌகார் ஜானகிக்கு மட்டும் தெரிந்து விடுகிறது. ஆனால் இவரால் பேசவும் முடியாது. காதும் கேட்காது.

கார்த்தி வீட்டிற்குள் நுழைந்த பின் என்ன ஆனது? திருடன் என தெரிந்தும் கார்த்தியை சத்யராஜ்க்கு வீட்டுக்கு இளவரசு அனுப்பியது ஏன்? ஜோதிகா என்ன செய்தார்? கார்த்தி அங்கேயே தங்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வீட்டில் கார்த்தி நுழைந்த பின் ஒவ்வொரு நபரையும் அவர்கள் யார்? என தெரிந்துக் கொள்ள அவர் செய்யும் முகபாவனைகள் சூப்பர். ஜோதிகாவின் பாசத்துக்காக ஏங்கும் காட்சிகளில் தம்பியாக ஜொலிக்கிறார். ஒரு பைட் தான் என்றாலும் சூக்சன் காட்சி ஓகே.

எப்போதும் ஜோதிகாவுடன் ஒட்டிக் கொள்ளும் குறும்பு புன்னகை இதில் மிஸ்ஸிங். ராட்சசி பட பிரின்ஸ்பால் போல இருக்கிறார். அதற்கு காரணம் க்ளைமாக்ஸில் உள்ளது. மற்றபடி கொடுத்த கேரக்டரில் குறையில்லை.

இவரது டியூசன் மாணவராக வரும் குட்டி பையன் அஸ்வத் நம் எல்லாரையும் கவர்ந்து விடுகிறான். சூப்பர் டா குட்டா. அதுபோல் அவனின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று.

நீண்ட நாளைக்கு பிறகு அரசியல்வாதியாக வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சத்யராஜ். சபாஷ் சார். அழகான அன்பான அம்மா சீதா.

வீல் சேரில் வந்தாலும் சௌகார் ஜானகி கேரக்டரில் நிற்கிறார். நாயகி நிகிலா விமல். படத்திற்கு நாயகி வேண்டும் என்கிற அளவில் மட்டுமே நிற்கிறார்.

சின்ன வயது ஜோதிகாவாக அம்மு அபிராமி நடித்துள்ளார். சில காட்சிகள் என்றாலும் நிறைவான நடிப்பு.

இளவரசு, கம்பீரமான போலீஸ் ஆன்சன் பால், பாலா, ஹரிஷ் பெராடி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோவிந்த வசந்தா இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முக்கியமாக பட ட்விஸ்ட் வேகத்தை பாடல்கள் குறைக்கிறது. பின்னணி இசை கவர்கிறது.

படத்தின் ஆரம்ப காட்சியில் 4 லாரிகள் நிற்பதும் அதனை கேமரா படம் பிடித்த விதமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகர் பணியில் எந்த குறையும் இல்லை.

எடிட்டர் வினாயக் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருந்தாலும் ஆமை வேக திரைக்கதை தான் மைனஸ்.

மலையாளத்தில் த்ரிஷ்யம் தமிழில் பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். எதிர்பாராத ட்விஸ்ட்டுக்களுடன் ஒரு குடும்ப கதையை கொடுத்துள்ளார்.

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பாபநாசம் படத்தை நினைவுப்படுத்துகிறது.

கார்த்திக்கு அந்த வீட்டில் நடந்த சில பிரச்சினைகள் தெரிய வருகிறது. ஆனால் அது எப்படி? என்பதை சொல்லாமல் விட்டு விட்டார். மற்றபடி இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு ஏற்ற குடும்ப படம் இது.

ஆக மொத்தம் இந்த தம்பி… ட்விஸ்ட் ப்ரோ..

காக்கி சட்டைக்கு கௌரவம்.. காளிதாஸ் விமர்சனம் 3.5/5

காக்கி சட்டைக்கு கௌரவம்.. காளிதாஸ் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து திருமணமான பெண் ஒருவர் கீழே விழுந்து இறக்கிறார். தற்கொலையா? அல்லது கொலையா? என விசாரணையில் இறங்குகிறார் காளிதாஸ் (பரத்)

எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என குழப்பத்தில் இருக்கும்போதே அதே போல மற்றொரு பெண் இறக்கிறார்.

இதனால் டென்ஷனில் இருக்கிறார். வீட்டிற்குள் சரியாக செல்வதில்லை. மனைவி ஆன் ஷீத்தலை கூட கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கிறார்.

இந்த கேப்பில் இவரின் மேல் மாடி போர்சனுக்கு ஒரு பேச்சுலர் வருகிறார். அவருடன் ஆன் ஷீத்தல் நெருங்கி பழங்குகிறார்.

கொலையில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் மேலதிகாரி சுரேஷ் மேனன் விசாரணைக்கு வருகிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? பரத் கொலையாளி யார் என கண்டுபிடித்தாரா? தற்கொலை எனில் அதற்கான காரணம் என்ன? தன் மனைவியுடன் நெருங்கி பழகும் ஆதவ் கண்ணதாசன் யார்? என பல கேள்விகளுக்கு விடையளிக்கும் படமே காளிதாஸ்.

கேரக்டர்கள்…

காவல்துறை பணியில் நேர்மை, உண்மை என இருக்கும் ஒருவர் எப்படியிருப்பார் என அசத்தியிருக்கிறார் பரத். கொலை, விசாரணை, என தினம் தினம் போராடும்போது வீட்டிற்குள் எந்த மாதிரியான பிரச்சினைகள் எழும் என்பதையும் தன் நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.

சமூகத்தில் கம்பீரம்.. குடும்பத்தில் கண்ணீர் என பரவச நடிப்பை கொடுத்துள்ளார் பரத். ஹாட்ஸ் ஆஃப் காளிதாஸ்.

சுரேஷ் மேனன் வந்தபிறகு பரத் கேரக்டர் கொஞ்சம் வலுவிழந்துள்ளது. ஒரு பெரிய ஆபிசர் வரும்போது அதுதான் யதார்த்தம் என்றாலும் பரத் ரசிகர்களுக்கு அது ஏமாற்றம்தான்.

நாயகி ஆன் ஷீத்தலை சுற்றிதான் படத்தின் கதையே நகர்ந்துள்ளது என்பதை க்ளைமாக்சில் வைத்திருப்பது சூப்பர்.

ஆதவ் கண்ணதாசன் வந்த பிறகு படம் வேற லெவலில் எதிர்பார்ப்புடன் செல்கிறது. அதுபோல போலீஸ் துறையில் துரை சிங்கமாக வருபவர் படத்தை ரசிக்க வைக்கிறார்.

விஜய் டிவி தங்கதுரை முதல் 4 கைதிகள் அட்டகாசங்களும் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நம்மை திகிலாகவே வைத்துள்ளது. பாரதியார் பாடல்களை சில இடங்களில் சரியாக பயன்படுத்தியுள்ளார்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

கொலையாளி யார்? ஆதவ் ? பரத்? சுரேஷ் மேனன்? என நம்பை குழப்பிவிட்டு நாம் எதிர்பாராத திருப்பங்களை கொடுத்திருப்பது செம.

பொதுவாக தமிழ் சினிமாவில் போலீஸ் படங்கள் என்றாலே நிச்சயம் பன்ச் டயலாக் இருக்கும். அதிரடி சண்டை காட்சிகள், ரவுடிகள் இருப்பார்கள். ஆனால் இதில் எதுவுமே இல்லாமல் வெறும் விசாரணையை வைத்து வித்தியாசமாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

ஆக காக்சி சட்டைக்கு கௌரவம் கொடுத்துள்ளார் காளிதாஸ்.

Kaalidas review rating

வரலாற்றுப் பதிவு.. மெரினா புரட்சி விமர்சனம்

வரலாற்றுப் பதிவு.. மெரினா புரட்சி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் எத்தனையோ போராட்டங்களை பார்த்திருக்கிறோம். கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் ஒரு தலைவன் இல்லாமல், எந்த ஒரு அரசியல் தலையீடும் இல்லாமல் நேர்மையான ஒரு போராட்டம், எந்த ஒரு அழைப்பும் இல்லாமல் நடந்தது என்றால் அது நிச்சயம் ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

மதுரை அலங்காநல்லுரில் ஜல்லிக்கட்டு நடத்த 2015 & 2016 ஆண்டுகளில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2017ல் அந்த ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மதுரையில் தொடங்கிய இந்த போராட்டம் சென்னை மெரினாவில் மிகப்பெரிய அளவில் தொடர்ந்தது.

10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டபோதும் ஒரு சின்ன அசம்பாவிதம் கூட நடக்கவில்லை. பெண்களை கண்ணியமாக நடத்தினர் இளைஞர்கள். இத்தனைக்கும் காவல்துறை கூட இதை செய்யவில்லை.

தமிழக இளைஞர்களால் அறவழியில் நடத்தப்பட்ட மெரினா புரட்சி போராட்டம் இறுதிநாளில் சில சமூக விரோதிகளால் கலவரமானது. இறுதியாக மெரினா கடற்கரையில் மீனவர்களை தாக்கினர்.

இந்த நிகழ்வுகளின் தொகுப்பை படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ். ராஜ்.

இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் வெற்றி எப்படி? நன்மைகள் என்ன? என்பதை விளக்கியுள்ளார்.

ஆனால் யூடிப் சேனல்கள் மற்றும் செய்தி சேனல்களில் வந்தவற்றை அப்படியே காட்சியாக வைத்து காட்டியுள்ளார் என்பதுதான் பலவீனம்.

இந்த விளக்க படத்தில் யூடியுப் புகழ் ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த போராட்டம் 8 பேரால் தொடங்கப்பட்டு 18 பேரால் சாதிக்கப்பட்டது போல் சொல்லியுள்ளார்.

நிச்சயம் இந்த போராட்டத்தில் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது.

அவரால் முடிந்தது… இவரால் சாத்தியமானது என்று சொல்லக்கூடாது என்பதுதான் சற்று வருத்தமாக உள்ளது. நல்லவேளை அவற்றை காட்சியாக வைக்காமல் மேலோட்டமாக சொல்லிவிட்டார்.

ஆக.. டிஜிட்டல் யுகத்தில் தமிழர்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்லிக் கொள்ள பொக்கிஷமாக அமைந்த போராட்டம் இந்த மெரினா புரட்சி.

Marina Puratchi movie review

லைஃப் கோல்… சாம்பியன் விமர்சனம் 3.25/5

லைஃப் கோல்… சாம்பியன் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் மகன் விஷ்வாவை ஒரு நேஷ்னல் புட்பால் ப்ளேயராக ஆக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் மனோஜ்.

ஆனால் இவர் ஒரு கட்டத்தில் புட்பால் விளையாடும் போது மரணமடைகிறார். (ஆனால் அது திட்டமிடப்பட்ட கொலை என்பது சஸ்பென்ஸ்)

இந்த இழப்புகள் எல்லாம் கால்பந்து விளையாட்டால் வந்த வினை என்பதால் தன் மகனை விளையாட அனுமதிக்க மறுக்கிறார் விஷ்வா அம்மா ஜெயலெட்சுமி.

ஆனால் விஷ்வாவிடம் இருக்கும் திறமையை கண்டு அவனை பெரிய ப்ளேயராக்க நினைக்கிறார் மனோஜ்ஜின் நண்பரும் பயிற்சியாளருமான நரேன்.

ஒரு பக்கம் அம்மா பாசம். மற்றொரு பக்கம் கோச் பயிற்சி. என்ன செய்தார் விஷ்வா என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

நாயகன் விஷ்வா. இவர் நடிகர் ஆர்கே. சுரேஷின் அக்கா மகன் ஆவார். இவருக்கு இதுதான் முதல் படம்.

நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு கால்பந்து விளையாட்டு வீர்ர் என்பதால் புட் பால் காட்சிளில் பின்னி எடுத்துள்ளார். ஆனால் முகத்தில் பெரிதாக எக்ஸ்பிரசன்ஸ் இல்லை. இவருக்கு 2 நாயகிகள் இருந்தும் ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகவில்லை.

நாயகிகள் டப்ஸ்மாஷ் புகழ் மிர்ணாளினி மற்றும் செளமிகா பாண்டியன் நடித்துள்ளனர். இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. ஆனால் நடிக்க ஸ்கோப் இருந்தால் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்கள் எனத் தெரிகிறது.

வில்லன் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார் ஸ்டண்ட் சிவா.

கோச்சாக வரும் நரேன் தன் நடிப்பில் நச். க்ளைமாக்ஸில் இவர் எடுக்கும் முடிவு நிச்சயம் ரசிகர்களை பாராட்ட வைக்கும்.

ஹீரோவின் தாயாக ஜெயலெக்‌ஷ்மி. கொடுத்த பாத்திரத்தில் நிறைவு. இவரின் கணவராக பாரதிராஜா மகன் மனோஜ் நடித்துள்ளார். அவரின் கேரக்டரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அரோல் கரோலியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னனி இசை பேசப்படும் வகையில் உள்ளது. சுஜித் சரங் ஒளிப்பதிவு கலர்புல்.

சுசீந்திரனின் வழக்கமான கதைக்களம் என்பதால் அவரும் புகுந்து விளையாடியிருக்கிறார். ஆனால் அண்மைக்காலமாக அவரது ஒரு சில படங்கள் ஓட வில்லை.

அதில் விட்டதை இதில் சாதித்து சாம்பியன் ஆகிவிட்டார் சுசீந்திரன்.

ஆக.. ஒரு லைஃபில் கோல் அடிக்க நினைக்கும் சாம்பியனாக ஜெயித்துள்ளார்.

Champion review rating

FIRST ON NET ஓவர் நைட்ல ஒலகம்.. 4 பீர்ல கலகம்.. கேப்மாரி விமர்சனம்

FIRST ON NET ஓவர் நைட்ல ஒலகம்.. 4 பீர்ல கலகம்.. கேப்மாரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கேப்மாரி படத்தின் முதல் காட்சியே ட்ரெயினில் ஆரம்பமாகிறது. அதுவரை அறிமுகமில்லாத ஹீரோ ஜெய் ஹீரோயின் வைபவ் சாண்டில்யா சந்திப்பு ரயிலுக்குள் போதை செக்ஸ் உடன் முடிகிறது.

நாலு பீரு அடித்துவிட்டால் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் செய்துவிடுவாராம் ஜெய்.

அதன்பின் மற்றொரு கட்டத்தில் சந்திக்கும் ஜெய் மற்றும் வைபவி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொள்கின்றனர்.

இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல அதுல்யா வடிவில் பிரச்சினை ஆரம்பமாகிறது.

ஜெய்யின் ஆபிசில் வேலை செய்யும் அதுல்யா இவரை திருமணத்திற்கு முன்பே காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் அதுல்யாவின் ஆசைக்கு சரக்கு போட்டுவிட்டு இணைங்கி விடுகிறார் ஜெய். இதனால் அதுல்யா கர்ப்பமாகிறார்.

உன்னால் நான் கர்ப்பமாகிவிட்டேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை திருமணம் செய்துக் கொள் இல்லை என்றால் போலீசில் புகார் செய்வேன் என பயமுறுத்துகிறார்.

அதன்பின்னர் ஜெய் என்ன செய்தார்? அதுல்யாவை திருமணம் செய்தாரா? அல்லது கருவை கலைத்தாரா? அல்லது இருவருடனும் உறவு வைத்துக் கொண்டாரா? வைபவி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

Capmaari 2

கேரக்டர்கள்…

முன்பு லவ்வர்… பின்பு இரண்டு மனைவிகள் என செம ஜாலியாக இருக்கிறார் ஜெய். பீர் அடிப்பது… கட்டிலில் ஆட்டம் போடுவது என இரண்டு நாயகிகளுடன் லுட்டி அடிக்கிறார் ஜெய். ஆனால் நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

வைபவி அண்ட் அதுல்யா.. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி மழை பொழிந்துள்ளனர். தொடை அளவு மட்டுமே துணி அணிந்து நம்மை நனைய வைத்துவிடுகின்றனர். அழகிலும் நடிப்பிலும் குறையில்லை.

இவர்களுடன் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு கூட்டமும் உள்ளது. தேவதர்ஷினி, சத்யன், சித்தார்த் விபின் என கலகலப்பாக டபுள் மீனிங் ட்ராக் ஓடுகிறது.

Capmaari 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் அடிக்கடி வந்து நம்மை கடுப்பேத்துகிறது. ஆனால் அழகான ஹீரோயின் கவர்ச்சியான கன்னிகள் என ஓரளவு தேற்றிவிடுகிறார் எஸ்ஏசி.

சென்சாரில் ஏ சான்றிதழ் வாங்கியிருப்பதால் எதையும் எடிட்டிங் செய்யவில்லை போல. டபுள் மீனிங் காட்சிகளை அப்படியே வைத்துள்ளனர்.

சித்தார்த் விபின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே. ஜீவன் ஒளிப்பதிவில் அத்தனையும் அழகு. ஆனால் நாயகியின் கால்கள் நடுவில் கேமரா வைத்து செய்திருப்பது எல்லாம் ரொம்ப ஓவர்.

கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம். ஆனால் ஏதோ வெறுமனே ஜாலியாக இருக்க வேண்டும் என படம் இயக்கியிருக்கிறார் எஸ்ஏசி.

வீட்டு வேலைக்காரி வந்தால் கூட.. வீட்டுக்கு வேலை வந்திருக்கேன் என சொல்ல மறுக்கிறார். நான்தான் பால் குடுப்பேன் என பேசுகிறார்.

ஓவர் நைட்ல எனக்கு ஒலகத்தைகே காமிச்சிட்டார். செம பீல்யா என என அதுல்யா டயலாக் எல்லாம் பேசுகிறார்.

அவன் அப்படிதான் சொருகினா அந்த மறந்துடுவான் பென்ட்ரைவ் என அதுல்யா வேற காம நெடிகளை அள்ளி வீசுகிறார்.

பேட்டு, பால் என கிரிக்கெட் போல பெட்ரூம் விளையாட்டு ஆடுகின்றனர்.

படம் முழுவதும் சரக்கு அடித்துக்கிட்டே இருக்கார் ஜெய்.

2 விசிலு வரத்துக்குள்ள குக்கர் ஆஃப் ஆச்சு என்று செக்சில் 2 ரவுண்டுகளை சொல்கிறார் பைவ்வி.

இவையில்லாமல் காண்டத்திற்கு க்ளவுஸ் என பெயரிட்டும் அழைக்கின்றனர்.
இப்படி படம் முழுக்க கேப்பே இல்லாமல் கேப்மாரி விளையாடியிருக்கிறார்.

சமூகத்திற்கு தேவையான புரட்சி கருத்துக்களை சொன்னதால் புரட்சி இயக்குனர் என்றொரு பெயர் எஸ்ஏ. சந்திரசேகருக்கு உண்டு.

ஆனால் இங்கே செக்சில் புதுமையான கருத்துக்களை சொல்லியுள்ளார்.

capmaari 1

எங்களுக்கு இதுபோன்ற காட்சிகள் இருந்தால் போதும். நாங்க என்ஜாய் பண்ணிப் பார்ப்போம் என நினைத்தால் கேப்மாரியை ரசிக்கலாம்.

யோவ் எப்படியா? பார்த்த உடனே காதல் வரலாம். ஆனால் செக்ஸ் எப்படியா? என நீங்கள் கேட்கிறீர்களா? அப்படி பார்த்தால் ஏகப்பட்ட லாஜிக் மிஸ் ஆகுது படத்தில்.

ஒரு வீட்டில் 2 பெண்களுடன் குடித்தனம் என்பது எல்லாம் ரொம்பவே ஓவர்.

இந்த பிரச்சினை எல்லாத்துக்கும் காரணம் குடி தான். எனவே இறுதியாக குடிப்பது உடம்புக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் நல்லதல்ல என ரொம்பவே பொறுப்பான கருத்துடன் படத்தை முடித்துள்ளார் எஸ்ஏ. சந்திரசேகர்.

ஆக… கேப்மாரி… ஓவர் நைட்ல ஒலகம்.. நாலு பீர்ல கலகம்!

CM aka Capmaari review rating

செவன்ஸ் புட்பால் புள்ளிங்கோ… ஜடா விமர்சனம் 3.25/5

செவன்ஸ் புட்பால் புள்ளிங்கோ… ஜடா விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு புட்பால் அணியில் 11 பேர் விளையாடி பார்த்திருப்போம். விளையாடியும் இருப்போம். ஆனால் இது 7 பேர் விளையாடும் புட்பால் விளையாட்டை பற்றிய கதை.

நாயகன் ஜடா (கதிர்), கால்பந்து வீரர். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது கோச் அருண் அலெக்சாண்டர்.

ஒரு கட்டத்தில் பல வருடங்களாக தென் சென்னையில் நடைபெறாமல் இருந்த ’செவன்ஸ்’ (7 பேர்) கால்பந்து போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என நினைக்கிறார் கதிர்.

செவன்ஸ் ஆட்டத்தை பொறுத்தவரை எந்த விதமான விதிமுறைகளும் கிடையாது. அவர்களின் டார்கெட் பந்து அல்ல. பந்தை எடுத்து செல்பவனே டார்கெட் நினைப்பார்கள். அதன் மூலம் அவனை அடித்து வீழ்த்தி பின்னர் கோல் போடுவார்கள். எனவே கதிரை அந்த ஆட்டத்தை ஆட வேண்டாம் என கோச் முதல் நண்பர்கள் வரை சொல்கிறார்கள்.

இதனால் பலர் கால்களை இழந்து, உயிரை இழந்துள்ளனர் என எச்சரிக்கின்றனர்.

ஆனால் ஜடா அவரின் முடிவில் இருந்து ஜகா வாங்கவில்லை.

அதன் பின்னர் அவர் சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை.

அந்த ஆட்டம் ஏன் நின்றது? யாரால் நிறுத்தப்பட்டது? திரும்பவும் அந்த ஆட்டத்தை ஆரம்பிப்பது ஏன்? இதனால் கதிருக்கு என்ன பயன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஒரு கால்பந்து வீரராக அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அதே சமயத்தில் சென்னை லோக்கல் வாலிபராகவும் தன் கேரக்டரை பலப்படுத்தியுள்ளார்.

யோகிபாபு இருந்தும் காமெடி ஒரு துளி கூட இல்லை, ஆனால் படம் முழுவதும் கதிரின் நண்பராகவும் புட் பால் ப்ளேயராகவும் வருகிறார் யோகி.

இடையில் அர்ஜீன் ரெட்டி விஜய் போல வேசம் வேற போட்டுள்ளார்.

படத்தில் 2 நாயகிகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இவர்களுடன் கிஷோர், லிஜேஷ் மற்றும் கோச் ஆகியோரின் நடிப்பு கூடுதல் பலம்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் ஓவியர் ஏபி ஸ்ரீதர் தனது பார்வையிலும் கேரக்டரிலும் மிரட்டல்

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஏ ஆர் சூர்யாவின் ஒளிப்பதிவு காட்சிகள் கச்சிதம். 2ஆம் பாதியில் நடக்கும் பேய் மிரட்டலுக்கு கைகொடுத்துள்ளது.

சாம் சி எஸ் பின்னனி இசை வழக்கம்போல பேய் பயத்தை கொடுத்துள்ளது. அதுபோல் புட் பால் காட்சியிலும் ரசிக்க வைக்கறிது-
பாடல்கள் ஓகே ரகம் தான்.

முதல் பாதி விறுவிறுப்பாக புட் பால் வேகத்துடன் செல்கிறது. ஆனால் 2ஆம் பாதியில் என்ன ஆனதோ? கொஞ்சம் புதுமை செய்ய வேண்டும் என பேய்யை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

புட் பால் விளையாட்டில் பேய் புதுமை தான். ஆனால் அது வேறு மாதிரியான கதைக்களத்தை கொண்டுள்ளது.

ஆக புட்பால் புள்ளிங்கோ

Jada movie review rating

More Articles
Follows