கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

நடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, இளவரசு, யுவராணி, பானுப்ரியா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.
இயக்கம் – பாண்டிராஜ்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
இசை – இமான்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்…

குடும்பத் தலைவர் சத்யராஜ். பெண் குழந்தைகளாகவே பிறப்பதால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே 2வது மனைவியாக பானுப்ரியா வருகிறார்.

அதற்குள் இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துவிடுகிறது. இறுதியாக கடைக்குட்டி சிங்கமாக கார்த்தி பிறக்கிறார்.

இவர் படிக்கவில்லை. ஆனால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் பார்த்து தன் பெரிய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சத்யராஜின் 5 மகள்களில் ஒருவரின் மகன்தான் சூரி. ஒருவருக்கு குழந்தையே இல்லை. மற்ற 3 மகள்களுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது.

சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கு வயதுக்கு வந்த மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரியா பவானி சங்கர். மற்றொருவர் அர்த்தா பினு.

இவர்கள் இருவரும் தாய்மாமன் கார்த்தியை மணக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அக்கா மகள்களை மணக்க விருப்பமில்லாமல் நாயகி சாயிஷாவை காதலிக்கிறார். அவரும் இவரை காதலிக்கிறார்.

அக்கா மகளை மணக்க கார்த்தி சம்மதிக்கவில்லை என்பதால் இந்த பெரிய குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கிறது.
இறுதியில் கார்த்தி என்ன முடிவு செய்தார்? குடும்ப பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? யாரை திருமணம் செய்தார்?

கேரக்டர்கள்…

விவசாயி கேரக்டருக்கு கார்த்திக் செம கச்சிதம். முதல் காட்சியிலே ரேஸில் கலந்துக் கொண்டு தன் அண்ணன் சூர்யாவுடன் நடித்து விட்டார்.

தன் வெற்றிக்கு காரணமான இரண்டு காளைக்கும் சூர்யாவிடம் மாலை இடச் சொல்வது கைத்தட்டலை அள்ளுகிறது.

சென்டிமெண்ட் போல ஆக்க்ஷனிலும் அதிரடி காட்டியுள்ளார் கார்த்தி.

ஊருக்கே சோறு போடும் விவசாயியும் கடவுளை போல ஒரு படைப்பாளிதான் என அவர் பேசும் வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

தான் தோளில் வளர்த்த அக்கா மகளை எப்படி மனைவியாக்கி கட்டி அணைத்து கொள்வது? என கார்த்தி கேட்கும்போது அக்கா மகளை மணந்த பலருக்கு உறுத்தலாக அமையும்.

கூட்டுக் குடும்பமாக வாழ நினைப்பது, குழந்தையில்லாத அக்காளுக்கு மகனாக வாழ்வது என கார்த்தி ஸ்கோர் செய்கிறார்.

சூரியும் அவ்வப்போது கலகலப்பு கொடுத்து கார்த்திக்கு ஈடு கொடுக்கிறார்.

என்ன ஆனாலும் தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என குறியாக இருக்கும் சத்யராஜ் கேரக்டர் சூப்பர். தன் மாப்பிள்ளை இவரை அவமானப்படுத்தும் போது தன் மகள்களுக்காக பொருத்துக் கொள்வதில் மாமனாரின் மனது தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகியோரை பார்க்கும் போது பலருக்கும் தங்கள் அத்தை மகள்கள் நினைவில் நிச்சயம் வந்து செல்வார்கள். இருவரின் நடிப்பும் அவர்களை போல செம க்யூட்.

இவர்களுடன் பானுப்ரியா, விஜி, கார்த்தியின் 5 அக்காஸ் அவர்களின் புருசர்கள் என அனைவரும் கச்சிதம். எந்த கேரக்டரையும் டம்மியாக்காமல் எல்லாருக்கும் சம பங்களிப்பு கொடுத்துள்ளார்.

வில்லனாக வரும் சந்துரு (படத்தில் கொடியரசு) செம மிரட்டல். இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள ஆர்.கே.சுரேஷின் வாய்ஸ் அசத்தல்.

ஜான்விஜய், பொன் வண்ணன், சௌந்தரராஜா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அழகான தமிழ் பெயர் சூட்டியிருப்பது படக்குழுவினரின் தமிழ் பற்று தெரிகிறது. (இதன் தெலுங்கு டப்பிங்கில் எப்படி எனத் தெரியவில்லை)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிச் செல்வது சிறப்பு. சண்டக்காரி, செங்கதிரே பாடல்கள் ரசிக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் சூப்பர் சுப்பராயனின் சண்டையும் படத்திற்கு வலு சேர்கிறது.

பாண்டிராஜ் இயக்கம் பற்றிய அலசல்…

தங்கள் மகளுக்கு தாய் மாமனை மணக்கும் ஆசை இருக்குமா? என்பதை எண்ணி பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் எனவும் ஒரு அட்வைஸ் செய்துள்ளார் டைரக்டர்.

அக்காக்களுடன் பிறந்த எல்லா தம்பிகளுக்கும் இந்த படத்தை அர்ப்பணிக்கலாம். தினம் உணவருந்தும் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

படத்தின் எல்லா கேரக்டர்களும் கச்சிதம் இருந்தாலும் படத்துடன் ஒன்றாத ஒரே கேரக்டர் சாயிஷா தான். இவரது முகம் இந்த கிராமத்து காவியத்திற்கு பொருந்தவேயில்லை.

புகழ்பெற்ற இளம் புது ஹீரோயின் என பார்க்காமல் படத்திற்கு இவர் பொருந்துவாரா? என்பதை டைரக்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த பீட்சா, பர்கர் காலத்துக்கு இது செட்டாகுமா? என யோசிக்காமல், செட்டாகும் வகையில் ஒரு பக்கா கதையை கொடுத்துள்ளார் பாண்டிராஜ்.

நாம் சோறு சாப்பிடும் வரை எந்த காலத்துக்கும் விவசாய குடும்பக் கதை செட்டாகும் என உறுதியுடன் நம்பி களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம்… கர்ஜிக்கும் விவசாய கடவுள்

Comments are closed.

Related News

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில்…
...Read More
நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர்.…
...Read More
அட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட்…
...Read More
கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர்…
...Read More