ஸ்டைலிஷ் தேவ் திரை விமர்சனம்

ஸ்டைலிஷ் தேவ் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்தி, ரகுல் பிரித்தி சிங், ஆர்ஜே விக்னேஷ்காந்த், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா மற்றும் பலர்.

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் – ரஜத் ரவிசங்கர்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
எடிட்டிங் – ஆண்டனி ரூபன்

தயாரிப்பு – பிரின்ஸ் புரொடக்சன்ஸ்
பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்..

கார்த்தி, விக்னேஷ்காந்த், அம்ருதா மூன்று பேரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள். கார்த்தி பணக்கார வீட்டு பையன்.

எனவே தன் நண்பர்களை கூட வேறு வேலைக்குச் செல்ல விடாமல் கூட வைத்துக் கொள்கிறார்.

கார்த்தியின் தொல்லை தாங்காத இரு நண்பர்களும் அவரை காதலில் விழ வைத்துவிட்டால் நாம் எஸ்கேப் ஆகிவிடலாம் என்பதால் காதலியை தேடுகின்றனர்.

ஒருவழியாக பேஸ்புக்கில் ரகுலை பார்க்கும் கார்த்தி அவரை பிடித்து போக அவருடன் சுற்றுகிறார்.

ஆனால் தன் அப்பா தன்னை விட்டு போனதால் ஆண்களை வெறுக்கும் நபர் ரகுல் பிரித்தி சிங்.

ஆண்களை வெறுக்கும் நாயகி ரகுலை கார்த்தி எப்படி கரம் பிடித்தார் என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஆக்சன், ரொமான்ஸ், ரிச் பாய் என செம ஸ்மார்ட் லுக்கில் வருகிறார் கார்த்தி. நடனத்திலும் அசத்துகிறார்.

கொஞ்சம் திமிர், கொஞ்சம் அழகு, கொஞ்சம் நடிப்பு என வருகிறார் ரகுல் பிரித்தி சிங்.

பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.

மீசையை முறுக்கு படத்தில் நம்மை கவர்ந்த ஆர்ஜே. விக்னேஷ்காந்த் இப்படத்தில் தேவையா? என்றே தோன்றுகிறது. இவர் மட்டுமே வரும் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை ஓட்டலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வேல்ராஜ் ஒளிப்பதிவில் காட்சிகளை ரசிக்க முடிகிறது. கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.

எடிட்டர் தான் நம் பொறுமையை சோதித்துக் கொண்டே இருக்கிறார். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ வரை போதுமடா சாமி என்று எண்ணத் தோன்றுகிறது.

எடிட்டரை ஆர்ஜே. விக்னேஷ்காந்த் தனியாக கவனித்தாரோ என்னவோ? அவரின் காட்சிகளை நீட்ட்ட்ட்ட்டீ… நம்மை அட விடுய்யா? என்று கதறவைத்துவிட்டார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஒன்றிரண்டு ரசிகர்களை கவர்கிறது. ஆனால் பின்னணி இசை பல இடங்களில் நம்மை கடுப்பேத்துகிறது. படம் முடியும் தருவாயில் பாடல்களை வேற போட்டு நம்மை மீண்டும் சோதித்து விட்டார்.

திறமையான நடிகர்கள் வைத்துக் கொண்டு ஒரு நல்ல படத்தை வழங்க தவறவிட்டுள்ளார் ரஜத் ரவிசங்கர்.

தேவையற்ற காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை திரையிட்டால் இந்த தேவ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

First on Net : காதலர்களுக்கு சமர்ப்பணம்… ஒரு அடார் லவ் விமர்சனம்

First on Net : காதலர்களுக்கு சமர்ப்பணம்… ஒரு அடார் லவ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: பிரியா பிரகாஷ் வாரியர், நூரின் செரிப், ரோசன், ஷியாத் ஷாஜகான், மிஷேல் மற்றும் பலர்

இசை – ஷான் ரஹ்மான்
இயக்கம் – உமர் லுலு
ஒளிப்பதிவு – சினு சித்தார்த்
எடிட்டிங் – அச்சு விஜயன்

தயாரிப்பு – கலைப்புலி எஸ் தானு
பிஆர்ஓ – டைமண்ட் பாபு மற்றும் ரியாஸ்

கதைக்களம்…

+1 மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவர்களிடையே நடக்கும் ஒரு காதல் கதை தான் இப்படம்.

பள்ளிக்கூட காதலை நாம் ஆதரிக்க கூடாது என்றாலும் இது ஒரு படத்தை பற்றிய விமர்சனம் என்பதால் வேறு வழியில்லாமல் படத்தை மட்டுமே பாராட்டுகிறோம்.

ரோசன் மற்றும் நூரின் இருவரும் நல்ல நண்பர்கள். இதில் தன் தோழி உதவியுடன் பிரியாவுக்கு ரூட்டு விடுகிறார் ரோசன்.

பின்னர் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். ஒரு சூழ்நிலையில் ரோசனை பிரிந்து செல்கிறார் பிரியா. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார் ரோசன்.

அப்போது மற்றோரு பெண்ணை காதலிப்பது போல் நீ நடித்தால் உன் பிரியா உன்னைத் தேடி வருவாள் என்று ஐடியா கொடுக்கிறார்கள் மற்ற நண்பர்கள்.

யாரை காதலிப்பது என்று ரோசன் கேட்க, நம் தோழி நூரினை காதலிப்பது போல் நடி என்கின்றனர் நண்பர்கள். வேறு வழியில்லாமல் தோழியும் ஒப்புக் கொள்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பது மீதிக்கதை.

கேரக்டர்கள்…

புருவழகி பிரியா வாரியர் துறு துறு நடிப்பில் கவர்கிறார். சண்டை போடுவது, சின்ன சின்ன முக பாவனைகளில் நம்மை ஈர்க்கிறார். அதுவும் கண்ணடித்து கன் ஷாட் செய்து எல்லாம் செம.

ஒரு ஸ்கூல் பையன் கேரக்டரில் வெளுத்துக் கட்டியிருக்கிறார் ரோசன். நடிக்காமல் அந்த கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் ரோசன்.

இவரின் நண்பர்களாக வரும் அந்த குண்டு பையன் மற்றும் சினேகா மேடத்தை சைட் அடிக்கும் அந்த நண்பர்கள் படத்தின் ஹைலைட். படத்தை போரடிக்காமல் அழகாக ஜாலியாக கொண்டு செல்கின்றனர்.

ரோசன் மற்றும் பிரியா வரியர் இருவரும் படத்தின் நாயகன் நாயகி என்றாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார் நூரின். இவரின் காதா கேரக்டர் நம் மனதில் நிறைந்து நிற்கிறது.

அழகு நடிப்பு நடனம் என ஒவ்வொரு ப்ரேமிலும் நூரின் 100 அடித்திருக்கிறார். இவரின் கேரக்டரை பார்ப்பதற்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.

இவர்களுடன் படத்தில் வலம் வரும் ஆசிரியர்கள் அனைவரும் செம. அதிலும் ஒன்றுமில்லாத லெட்டரை படிக்கும் அந்த போலீஸ் கேரக்டர் சிரிப்பின் உச்சம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. பாடல் வரிகளை மலையாளத்திற்கு மெட்டு அமைத்துள்ளதால் சிலவற்றை முழுமையாக கேட்க முடியவில்லை.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.

ஒரு பள்ளிக் காதலையும் அதில் இல்லாத மெச்சுரிட்டியையும் அழகாக காட்டியிருக்கிறார் டைரக்டர் உமர் லுலு.

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. மனதை கனமாக்கி நம்மை அனுப்புகிறது.

ஒரு அடார் லவ் படத்தை 90% சிரித்து ரசித்திருந்தால் க்ளைமாக்சில் 100% நம்மை அழவைத்து அனுப்பி விடுகிறார் டைரக்டர்.

ஒரு அடார் லவ்… காதலர்களுக்கு சமர்ப்பணம்

சந்தானம் கெத்து.. தில்லுக்கு துட்டு2 விமர்சனம்

சந்தானம் கெத்து.. தில்லுக்கு துட்டு2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சந்தானம், மொட்டை ராஜேந்திரன், ஷ்ரத்தா சிவ்தாஸ், ஊர்வசி, பிபின் மற்றும் பலர்.
இசை – சபீர்
இயக்கம் – ராம்பாலா
ஒளிப்பதிவு – தீபக் குமார் பார்த்தி
எடிட்டிங் – மாதவன் மது
தயாரிப்பு – சந்தானம்
பிஆர்ஓ – ஜான்சன்

கதைக்களம்…

சந்தானம் அவரின் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். இவர்கள் தண்ணி போட்டு விட்டு செய்யும் அலப்பரையால் அந்த ஏரியாவே இவர்களுக்கு பயந்து வாழ்கிறது.

அதே ஏரியாவில் குடியிருக்கும் ஒரு டாக்டர் தன் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நாயகியிடம் தன் காதலை சொல்கிறார். ஐ லவ் யூ என்று சொன்ன மறு நிமிடமே இவருக்கு பல பிரச்சினைகள் பேய் ரூபத்தில் வருகிறது.

அதனால் அந்த பெண்ணை சந்தானத்திடம் கோர்த்துவிட நினைக்கிறார். சந்தானம் அந்த பெண்ணை லவ் செய்துவிட்டால் நிச்சயம் ஐ லவ் யூ என்று சொல்வார். அவரும் பேய்யிடம் மாட்டிக் கொள்வார். நாம் நிம்மதியாக வாழலாம் என்று கணக்கு போடுகிறார்.

அதன்படி சந்தானமும் நாயகி ஷ்ரத்தா சிவ்தாஸை காதலித்து அவரிடம் ஐ லவ் யூ சொல்கிறார். அப்போது பேய் இவரை தாக்குகிறது.

அப்படியென்றால் அந்த பேய் யார்? நாயகிக்கும் பேய்யும் என்ன தொடர்பு? சந்தானம் என்ன ஆனார்? காதல் கை கூடியதா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த பேய் படம் என்றாலும் அது மனிதர்களை பயமுறுத்தும். ஆனால் பேயை கலாய்ப்பவர் ஒரே ஒருவர் இருக்கிறார் என்றால் அது சந்தானம் மட்டும்தான். கலாய் சக்ரவர்த்தி இதிலும் மணக்கிறார்.

படம் தொடங்கியது முதல் க்ளைமாக்ஸ் வரை ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

சபரிமலைக்கு மாலை போடுவது முதல் சரக்கு போடுவது வரை சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காமெடி வேற லெவல்.

கவுண்டமணி செந்தில் காம்பினேஷன் போல சந்தானம் மொட்டை ராஜேந்திரனுடன் கூட்டணி போட்டுக் கொள்ளலாம். அப்படியொரு அசத்தல் காமெடியை கொடுத்துள்ளனர்.

கேரளத்து பைங்கிளி ஷ்ரத்தா சிவ்தாஸ் அழகுடன் நடிப்பையும் சேர்த்து கொடுத்துள்ளார். மிகையில்லாத நடிப்பு.
ஊர்வசி படத்தில் வந்த பிறகு படத்தின் காமெடி அடுத்த லெவலுக்கு போகிறது. அவரும் அந்த பிபின் மந்திரவாதியும் டம்மி பீஸ் என்று தெரிந்த பின் நடக்கும் கலாட்டக்கள் வரவேற்பை பெறும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

சபீர் இசையில் பாடல்களும் சபாஷ் ரகமே. அதிலும் மவனே யாருகிட்ட என்ற பாடலை சண்டையுடன் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் ராம்பாலா.

பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் தங்களின் பணிகளில் கச்சிதம்.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும். அதை சரியாக செய்தால் போதும் என்ற நல்ல எண்ணத்துடன் படத்தை கொடுத்துள்ளார்.

இண்டர்வெல் காட்சியில் அந்த பாட்டில் உடையும் காட்சியும் செம.

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருந்தாலும் சில டபுள் மீனிங் காட்சிகளை வெட்டியிருக்கலாம். புரிந்தவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.

க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் நிறைவாக செய்திருக்கலாம்.

தில்லுக்கு துட்டு 2… சந்தானம் கெத்து..

Dhilluku Dhuddu 2 review rating

கந்து வட்டி கலாட்டா… பொது நலன் கருதி விமர்சனம்

கந்து வட்டி கலாட்டா… பொது நலன் கருதி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சந்தோஷ், அருண் ஆதித், கருணாகரன், அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா, யோக் ஜபி, பாபு ஜெயன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை – ஹரி கணேஷ்
இயக்கம் – சீயோன்
ஒளிப்பதிவு – சுவாமிநாதன்
எடிட்டிங் – கிரேசன்
தயாரிப்பு – எவிஆர் புரொடக்ஷன்ஸ்
வெளியீடு – பிடி. செல்வகுமார்
பிஆர்ஓ – ராஜ்குமார்

podhu nalan karudhi 1

கதைக்களம்…

வட்டிக்குப் பணம் கொடுத்து மக்களை மிரட்டி தங்கள் கைக்குள் வைத்திருக்கும் இரண்டு தாதாக்களை பற்றிய கதை தான் இது.

வட்டிக்கு பணத்தை கொடுத்து, அவற்றை சொன்ன தேதிக்குள் கொடுக்கவில்லை என்றால் அதைக் கறாராக வசூலிப்பவர் யோக் ஜபி.

அவரிடம் அடியாளாக வேலை பார்ப்பவர்களில் முக்கியமானவர் சந்தோஷ். ஒரு கட்டத்தில் பிரச்சினையாகி சந்தோஷ் வெளியே செல்ல, இருவருக்கும் பிரச்சினை ஆரம்பமாகிறது.

மற்றொரு நடிகர் கருணாகரன். இவருடைய அண்ணன் காணாமல் போக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு நாயகன் அருண் ஆதித். இவர் தன் காதலிக்காக யோக் ஜபியிடம் ஒரு ஸ்கூட்டர் வாங்க வட்டிக்கு பணம் வாங்குகிறார்.

பின்னர் அடைக்க முடியாமல் பிரச்சினை வருகிறது.

இதனிடையில் மற்றொரு தாதாவான பாபு ஜெயன் தன் போட்டியாளர் யோக் ஜபியைக் கொல்லத் துடிக்கிறார்.

இந்த நால்வருக்குள் நடக்கும் விஷயங்கள்தான் இப்படத்தின் கதை.

podhu nalan karudhi 2

கேரக்டர்கள்…

நாயகன் சந்தோஷ்க்கு இது முக்கியமான படமாக இருக்கும். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க அடிக்கிறார். தன் தொழிலுக்காக காதலியை விட்டுச் செல்வதில் தனித்து நிற்கிறார்.

இவரின் காதலியாக வரும் லிசா கொஞ்சம் நேரம் என்றாலும் குடும்பத்திற்காக காதலை துறப்பதில் சில பெண்களை பிரதிபலிக்கிறார்.

கருணாகரன் படம் முழுவதும் கடுகடுப்பாகவே வருகிறார். காமெடி நடிகரை இப்படி பண்ணிட்டாரே டைரக்டர்.

இவரின் காதலியாக வரும் அனு சித்தாரா ரசிக்க வைக்கிறார். அழகுடன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அருண் ஆதித் மற்றும் சுபிக்ஷா ஜோடி ரசிகர்களை ஈர்ப்பார்கள். ஆனால் சுபிக்ஷா இவரை லவ் செய்கிறாரா? என்பதை கடைசி வரை யூகிக்கவே முடியவில்லை.

வில்லனாக வந்தாலும் யோக் ஜேபி மிரட்டியிருக்கிறார். அவருக்கு படத்தில் பில்டப் அதிகமாக இருக்கிறது. இவரின் சின்ன வீடு இளைஞர்களை ஈடேற்றுகிறார்.

podhu nalan karudhi 3

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹரி கணேஷ் இசையில் பாடல்கள் விட பின்னணி இசை பேசப்படும். லவ் ப்ரேக் அப் சாங் நீ ஒன்றும் கற்போடும் பாடல் புதுவிதம் அனுபவம்.

சுவாமிநாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. எடிட்டர்தான் நம் பொறுமையை சோதிக்கிறார். கதை ஓட்டத்தை சரியாக கொண்டு சென்றிருந்தால் படத்தை முழுமையாக ரசித்திருக்கலாம்.

தன் அவசர தேவைக்காக ரூ. 10 ஆயிரம் பணத்தை வட்டிக்கு வாங்கிவிட்டு 1 லட்சம் வட்டி கட்டும் நடுத்தர குடும்பங்களை அப்படியே காட்டியுள்ளார்.

அவர்கள் கட்ட முடியாமல் தவிப்பதும் வட்டிக்கு கொடுத்தவர் மிரட்டல் விடுப்பதும், அவர்களுக்குள் நடக்கும் அரசியல் ஆட்டம் என அனைத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளார் சீயோன்.

ஆனால் படத்தில் ஒருவரின் முகத்தில் கூட கொஞ்சம் கூட புன்னகை இல்லை. கருணாகரன் ஜோடி மட்டும் ஆரம்பத்தில் நிதானமாக இருப்பார். படத்திற்கு ஏற்ப அவரும் கடுகடுப்பாக இறுதியில் காட்டப்படுகிறார்.

கந்து வட்டி கொடுமை ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர்கள் எல்லார் முகத்திலும் கடுகடுப்பு இருப்பது நமக்கே வெறுப்பாக இருக்கிறது.

பொது நலன் கருதி என தலைப்பு இருந்தாலும் படத்தில் சுயநலனே அதிகமாக உள்ளது. பொது நலன் கருதி என்ன செய்தார்கள்? என்பதே தெரியவில்லை.

ஒருவேளை மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என இந்த தலைப்பை டைரக்டர் வைத்திருப்பாரோ? என்ற சந்தேகம் வருகிறது.

மொத்தத்தில் `பொது நலன் கருதி’.. கந்து வட்டி கலாட்டா

Podhu Nalan Karudhi review rating

டீன் ஏஜ் நட்பும் காதலும்… சகா விமர்சனம்

டீன் ஏஜ் நட்பும் காதலும்… சகா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சரண், பாண்டி இருவரும் நண்பர்கள். நட்பு என்ற உறவைத் தவிர இவர்களுக்கு யாரும் இல்லை.

இவர்களை வளர்த்த அம்மாவைக் கொன்றவர்களை இவர்கள் கொல்கிறார்கள். எனவே சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு (ஜெயிலுக்குள்) செல்கிறார்கள்.

அங்கு பெண்களைக் கடத்தி விற்கும் பிருத்விராஜ் உடன் மோதுகிறார்கள்.

இதனால் பாண்டியை சிறைக்குள்ளேயே கொன்று விடுகிறார் பிருத்வி. சில நாட்களில் ஜெயிலில் இருந்து விடுதலையாகி சென்றுவிடுகிறார்.

தன் நண்பனைக் கொன்றவனை சிறையிலிருந்து தப்பித்து கொல்ல வேண்டும் எனத் துடிக்கிறார் சரண். அவனுக்கு மற்றொரு சிறை நண்பன் கிஷோர் உதவுகிறார்.

அதாவது ஒருவன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க நினைக்கிறார். மேலும் அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க நினைக்கிறார்.

மற்றொருவர் காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார்.

அவர்கள் நினைத்ததை செய்து முடித்தார்களா? தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா? போலீஸ் என்ன செய்தனர்? கண்டு பிடித்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை ஆகும்.

கேரக்டர்கள்…

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘வடசென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தவர்தான் சரண்.

‘பசங்க’ படத்தில் நம்மை கவர்ந்த கிஷோர், ஸ்ரீராம். இதில் கிஷோர் அப்பாவி, ஸ்ரீராம் கோபக்காரன். பிருத்விதான் படத்தின் வில்லன். ஆனால் வில்லத்தனம் இல்லை.

படத்தில் எல்லாரும் எப்போதும் முறைத்துக் கொண்டே இடைவேளை வரை படத்தை ஓட்டி விட்டுள்ளனர்.

ஆய்ரா மற்றும் நீரஜா என இரண்டு அழகான நாயகிகள் உள்ளனர். இவரும் நல்ல தேர்வு. இருவருக்கும் ஓரிரு டயலாக்குகளே உள்ளன.

மேலும் இந்த வயசுப் பையன்களை விட மூத்தவர்கள் போல் அதாவது அக்கா போல் உள்ளனர்.

ஜோக்கர் படத்தில் நடித்த அபிராமி அவர்கள் இதில் சரணின் அக்காவாக நடித்துள்ளார். அவருக்கு ஓரிரு காட்சிகளே உள்ளது. அதுவும் படத்தின் ட்விஸ்ட்டுக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வழக்கம் போல சிறை வார்டனாக தீனா. உருட்டி மிரட்டுகிறார். சின்ன பசங்களிடம் அடிக்கடி அடியும் வாங்குகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஷபீரின் இசையில் பின்னணி இசை ஓகே. ஆனால் பல இடங்களில் ஓவர் இரைச்சலை கொடுத்து நம்மை கடுப்பேற்றுகிறார்.

கால் செருப்பு, டிரெஸ் என எதை காண்பித்தாலும் பின்னணை இசையை போட்டுள்ளார்.

ஆனால் யாயும், ஆத்தாடி பாடல்களால் நம்மை ஈர்த்து விடுகிறார். யாயும் பாடல் ஏற்கெனவே பல இளைஞர்களின் காலர் டியூனாக உள்ளது.

நிரன்சந்தர் ஒளிப்பதிவு பேசப்படும். ஹரிஹரன் படத்தொகுப்பில் முதல் பாதியில் நிறைய வெட்டியிருக்கலாம்.

ஒருவனின் கதை, மற்றொருவனின் கதை என மாற்றி மாற்றி காட்டியிருப்பதால் படம் மனதில் நிற்க மறுக்கிறது.

ஐந்து பையன்களிடமும் இயக்குனர் முருகேஷ் நன்றாக வேலை வாங்கியுள்ளார்.

சகா…. டீன் ஏஜ் நட்பும் காதலும்

நீங்க வாங்க.. ஆனா நாங்க..? வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

நீங்க வாங்க.. ஆனா நாங்க..? வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், நாசர், மகத், சுமன், யோகிபாபு, விடிவி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கோபி அமர்நாத்
எடிட்டிங் – என் பி ஸ்ரீகாந்த்,
இசை – ஹிப்ஹாப் ஆதி
பாடல்கள் – ஹிப் ஹாப் ஆதி, கபிலன், அறிவு
இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – லைகா
பிஆர்ஓ – ரியாஸ் கே அகமது

Vantha Rajavathaan Varuven Movie Stills (29)

கதைக்களம்…

மிகப்பெரிய கோடீஸ்வரர் நாசர். தமிழரான இவர் தன் மகன் சுமன், பேரன் சிம்பு உடன் வசிக்கிறார்.

இவரின் மகள் ரம்யா கிருஷ்ணன். மருமகன் பிரபு.

தன் மகள் தனக்கு தெரியாமல் திருமணம் செய்துக் கொண்டதால், அவரை வெறுத்து, அசிங்கமாக திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

ஆனால் அதன் பின்னர் வருந்தும் நாசர், தன் மகளை பார்க்க வேண்டும் என 20 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.

தன் கடைசி ஆசையாக மகளை பார்க்க வேண்டும். அவளை இங்கே அழைத்து வாருங்கள் என தன் பேரன் சிம்புவிடம் கோரிக்கை வைக்கிறார்.

இந்தியாவுக்கு செல்லும் பேரன், வந்தா அத்தையோடு தான் வருவேன் என சொல்லி கிளம்புகிறார்.

அதன்பின்னர் என்ன நடந்தது? அத்தையை அழைத்து வந்தாரா? எப்படி அவரின் மனதை மாற்றினார்? என்பதே மீதிக்கதை.

Vantha Rajavathaan Varuven Movie Stills (18)

கேரக்டர்கள்…

செக்கச் சிவந்த வானம் படத்தில் வைத்திருந்த கெட்அப்பையே இந்த படத்திலும் மெய்ன்டெய்ன் செய்துள்ளார் சிம்பு. அடிதடிகளில் அனல் பறக்க அசத்துகிறார் சிம்பு.

அத்தை மகள்கள் கேத்ரீன் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் உடன் ரசிக்க ரசிக்க ரொமான்ஸ் செய்துள்ளார்.

எல்லா காதலுக்கு நான் உதவி செய்றேன். ஆனா எனக்கு காதலியே இல்லை என்று பேசி தன் ரசிகர்களை கவர்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு விரல் வித்தைகளை காட்டி, பன்ச் டயலாக் எல்லாம் பேசியிருக்கிறார். க்ளைமாக்ஸில் அத்தையை உருக வைக்க சென்டிமெண்ட் டயலாக் பேசியிருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடனே வருகிறார். இவரின் கணவராக பிரபு. இவர் முகத்திலும் சிரிப்பே இல்லை.

மொட்டை ராஜேந்திரன், விச்சு, கௌதம், அபிஷேக். நாசர், சுமன், ராதாரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

விடிவி கணேஷ், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் இருப்பதால் சில காட்சிகளில் சிரிக்க வைத்துள்ளனர். கெஸ்ட் ரோல் மாப்பிள்ளையாக மகத் நடித்துள்ளார்.

கேத்ரீன் தெரசா மற்றும் மேகா ஆகாஷ் என டபுள் நாயகிகள். இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி காட்டியுள்ளனர். இதை போட்டியை நடிப்பில் காட்டியிருக்கலாம்.

மேகா ஆகாஷ் கவர்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். ஆனால் எல்லா டயலாக்குக்கும் ஒரே மாதிரியாக ரியாக்சனே கொடுத்துள்ளார்.

Vantha Rajavathaan Varuven Movie Stills (3)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹிப் ஹாப் ஆதி இசையில் பின்னணி இசை சில இடங்களில் பேசப்படுகிறது. ஓரிரு பாடல்களே கேட்க முடிகிறது.

வாங்க மச்சான் வாங்க… வந்தா ராஜாவாதான் வருவேன் பாடல் வழக்கமான சுந்தர் சியின் குடும்ப பாடலாக உள்ளது.

எனக்கா ரெட் கார்டூ எடுத்து பாரு என் ரெக்கார்டு… பாடல் சிம்புக்காகவே எடுத்து வைக்கப்பட்ட ரெடிமேட் டிரெஸ் போல உள்ளது.

மாடர்ன் முனியம்மா உள்ளிட்ட பாடல்கள் சுவாரஸ்யம் இல்லை.

”சிங்கத்தோட நின்னு செல்ஃபி எடுக்கணும்னு ஆசைப்பட்டா செல்ஃபி இருக்கும்… நீ இருக்க மாட்டே”, ”கெத்துதான் சொத்து”,  ” நீ வேஷம் போடுற ராஜா நான் பொறந்ததுல இருந்தே ராஜா” என்ற செல்வபாரதியின் வசனங்கள் ரசிகர்களை ஈர்க்கும்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக உள்ளது. ஆனால் எடிட்டிட்டர் இருக்காரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எடிட்டர் என் பி ஸ்ரீகாந்த் அவர்கள் யோகிபாபுவின் நாடக காட்சிகளை கண்ணை கட்டிக் கொண்டே வெட்டியிருக்கலாம். முடியலடா சாமி.

தன் குடும்ப படங்களில் ஒரு வழக்கமான டெம்ப்ளேட் வைத்திருப்பார் சுந்தர் சி. அதுபோல இதையும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் கொடுத்துள்ளார்.

ரஜினியின் மாப்பிள்ளை, விஷாலின் ஆம்பள என மாப்பிள்ளை மற்றும் அத்தை மோதல் பட மசாலாக்களை கலந்துக் கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமா ரீமேக் இந்த படம் என்பதால் தெலுங்கு ரசிகர்களை குறி வைத்தே படத்தை இயக்கியுள்ளார்.

வந்தா ராஜாவாதான் வருவேன்… நீங்க வாங்க.. ஆனா நாங்க..?

Vantha Rajavathaan Varuven review rating

More Articles
Follows