அன்பே இனிது…; அன்பிற்கினியாள் விமர்சனம் 3.25/5

அன்பே இனிது…; அன்பிற்கினியாள்  விமர்சனம் 3.25/5

கதைக்களம்…

கோகுல் இயக்கத்தில் அருண் பாண்டியன், பிரவீன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ஹெலன்’ என்ற மலையாள படத்தை மகளுக்காக தமிழில் மறுஉருவாக்கம் செய்திருக்கிறார் அருண் பாண்டியன்.

*எல்ஐசி ஏஜன்ட் அருண் பாண்டியன். இவரின் மகள் கீர்த்தி பாண்டியன்.

வெளிநாட்டுக்கு சென்று நிறைய சம்பாதித்து அப்பாவின் கடனை அடைக்க நினைக்கிறார்.

கனடா வாய்ப்பு வரும் வரை (நர்சிங் படித்திருந்தாலும்) ஒரு மாலில் உள்ள ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறார்.

கனடாவுக்குச் செல்ல IELTS தேர்வும் எழுதி அதில் தேர்ச்சியும் பெறுகிறார்.

ஒருநாள் கீர்த்தி பிரவீன் என்பவரை காதலிக்கும் விஷயம் அருண் பாண்டியனுக்கு தெரிய வருகிறது.

இதனால், கீர்த்தியுடன் பேசாமல் இருக்கிறார் அருண் பாண்டியன்.

ஒரு கட்டத்தில் அவரது ரெஸ்டாரென்டில் உள்ள சிக்கன்களை வைக்கும் ப்ரீசர் ரூமுக்கு செல்ல மற்றொரு ஊழியர் இவர் உள்ளே இருப்பது தெரியாமல் ப்ரீசரை மூடி செல்கிறார்.

மகளைக் காணாமல் அப்பா மற்றும் கீர்த்தியின் காதலன் ஆகியோர் காவல் நிலையம் செல்கின்றனர்.

இறுதியில் கீர்த்தி கிடைத்தாரா? போலீஸ் என்ன செய்தனர்.? காதலை ஏற்றுக் கொண்டாரா அருண்பாண்டியன்? கனடாவிற்கு சென்று அப்பாவின் கடனை அடைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கலைஞர்கள்…

கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ கொடுத்துள்ளார் அருண் பாண்டியன்.

இதுவரை ஆக்சன் பாத்திரங்களில் மட்டுமே இவரை பார்த்துள்ளோம்.

இதில் மகள் மீது அன்பை பொழியும் அப்பாவாக அருணாக வாழ்ந்துள்ளார்.

அவரது குரலில் அதே கம்பீரம் இப்போது உள்ளது. இவர் போலீஸ் ஸ்டேசனில் கெஞ்சினாலும் மிரட்டலாகவே உள்ளது.

கீர்த்தி பாண்டியன் இதற்கு முன் ‘தும்பா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அப்பாவிற்கு மிகையான நடிப்பை கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

குடும்ப கடனை அடைக்க முயலும் பொறுப்பான மகளாகவும், அப்பாவின் சிகரெட் பழக்கத்தை கண்டிக்கும் யதார்த்த பெண்ணாகவும் நம்மை கவர்கிறார்.

உறைய வைக்கும் குளிர் ப்ரீசர் காட்சியில் ரசிகர்களின் அனுதாபத்தை அள்ளிவிடுவார்.

கீர்த்தியின் காதலன் பிரவீன் புதுமுகம் என்றாலும் தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

உண்மையாக நேசித்த காதலியே முக்கியம் என்று வேலையை விட்டு விட்டு வரும் பிரவீன் நிச்சயம் காதலிக்கும் இளம் பெண்களை கவருவார்.

இயக்குநர் கோகுலும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஜெயராஜ் கோலிக்கோடு, அடிநாட் சசி, பூபதி ராஜா ஆகியோரும் தங்கள் பத்திரங்களை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

திமிர் பிடித்த சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திர விஜய் என்பவர் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ப்ரீசர் அறைக்குள்தான் பாதி படம் என்பதால் அதை போரடிக்காமல் சரியாக செய்துள்ளனர்.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு காட்சிகளுடன் உறைய வைக்கிறது.

ஜாவித் ரியாஸின் இசை படத்திற்கு தேவையான அளவுக்கு விறுவிறுப்பு சேர்த்துள்ளது.

ரீமேக் என்றாலும் திரைக்கதை தமிழக ரசிகர்கள் ரசிக்கும் படி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நம்மை இருக்கை நுனியில் அமரவைக்கும்.

ஆக… அன்பிற்கினியாள்… அன்பே இனிது

Anbirkiniyal movie review and rating in Tamil

Comments are closed.