சிறையிலிருந்து வெளியான கைதி & போலீஸ் துறை & போதை பொருள் கும்பல்.. இவர்களுக்கும் ஓர் இரவுக்குள் நடக்கும் கதையே இதன் பயணம்.
போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து 900 கிலோ அளவிலான போதை பொருளை போலீஸ் பிடித்து விடுகிறது.
அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ் நரேன் டீம்.
ஆனால் அதை எப்படியாவது மீட்க ஆட்களை அனுப்புகிறது வில்லன் டீம்.
இந்த 2 கும்பலில்… போலீசில் கறுப்பு ஆடுகளும்… ரவுடி கும்பலிடம் அண்டர் கவர் போலீசும் தகவல் சொல்கின்றனர்.
இதனிடையில் 10 வருட ஜெயிலில் இருந்த கார்த்தி தன்னுடைய மகளை பார்க்க வெளியில் வருகிறார்.
ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜீப்பில் வைத்திருக்கிறது போலீஸ் டீம்.
ஒரு கட்டத்தில் போலீஸ் துறை விருந்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்க அனைவரும் மயங்கி விழுந்து விடுகின்றனர்.
எனவே அவர்களை 5 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல லாரியை எடுக்க வேண்டிய சூழ்நிலை.. கார்த்தி உதவியை நாடுகிறார் நரேன்.
லாரி செல்லும் வழியில் நடக்கும் ட்விஸ்டுகளே படத்தின் கதை..
கேரக்டர்கள்…
கனமான கேரக்டரை லாரி சவாரியில் சுமந்திருக்கிறார் கார்த்தி. கைதி.. பாசமான அப்பா.. அதிரடி ஹீரோ என பிரித்து மேய்ந்திருக்கிறார் கார்த்தி.
ஆக்சனில் செம செம செம… பைட் சீன் அனல் பறக்கிறது.
போலீஸ் ரோலில் நரேன் நச். கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
கார்த்தியின் மகளாக பேபி மோனிகா. கியூட்டான நடிப்பு.
ஹரீஸ் உத்தமன், அன்புவாக அர்ஜீன் தாஸ், மரியம் ஜார்ஜ், காலேஜ் பசங்க, கறுப்பு ஆடுகள், போலீஸ் ஜெயசந்திரன் என அனைவரும் அவரவர் ரோலில் சூப்பர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்..
படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கிறது.
சண்டை காட்சிகள் மிக நேர்த்தி. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் படத்தின் பலம்.. இருட்டிலும பக்கா கலர்புல்.
சாம் CSன் பின்னணி இசை சூப்பர் சூப்பர். சாங் இல்லை.. எனவே பின்னணி இசையில் புல் பார்ம் காட்டியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜின் திரைக்கதை தான் படத்தின் வெற்றிக்கு காரணம்..
ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை த்ரில்லாகவே வைத்திருக்கிறது. லாரி பைட் & ட்விஸ்ட்கள் அசத்தல்
புல் ஆக்க்ஷன் தான் என்றாலும், இடையிடையே சென்மெண்ட்.
இதுதான் வெறித்தனமான தீபாவளி விருந்து..