FIRST ON NET பிஸ்தா விமர்சனம்.; பேரு வச்சிட்டா போதுமா.?

FIRST ON NET பிஸ்தா விமர்சனம்.; பேரு வச்சிட்டா போதுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத நிலையில் பத்திரிக்கை மண்டபம் பேனர் எல்லாம் ரெடி.. கல்யாண நாளும் வந்துவிட்டது.. பெண் கிடைத்தாளா? என்பதே ஒன்லைன்.

இதேபோன்ற கதை ஒரு படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தின் பெயர் ‘கட்டம் சொல்லுது’. அந்த படத்தில் தீபா தன் மகனுக்கு பெண் கிடைக்காமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சதீஷ் நடித்துள்ள படம் ‘பிஷ்தா’.

இதே பெயரில் கார்த்தி, நக்மா, மணிவண்ணன் நடித்த (பிஸ்தா) படம் 15 – 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

சிரிஷ், செந்தில், யோகி பாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், நமோ நாராயணா, லொள்ளு சபா சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

படத்தின் ஆரம்ப காட்சியே அமர்க்களம்..

திருமணத்துக்கு ரெடியாகிவிட்டார் ஹீரோ சிரிஷ். திருமண அழைப்பிதழ் ரெடி.. பேனர் ரெடி.. ஆனா எதிலும் பெண்ணின் முகமும் இல்லை.. பெயரும் இல்லை..

இவரின் திருமணம் நடந்து விடக்கூடாது என வில்லன் கோஷ்டி தடுக்க நினைக்கிறது. அவர்கள் தடுக்க நினைக்க என்ன காரணம்.?

அன்று இரவு தான் நண்பர்கள் பெண் தேட ஆரம்பிக்கிறார்கள்.. அதற்கான காரணம் என்ன? அவருக்கு பெண் கிடைக்கவில்லையா? அப்படி என்றால் பத்திரிக்கை அடிக்க என்ன காரணம்?

இடையில் நடந்த குழப்பங்கள் என்ன என்பதை படத்தின் கதை.

கேரக்டர்கள்…

பெண்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்டாக இருக்கிறார் சிரிஷ். ஆனால் நடிப்பில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.. ரொமான்ஸ் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் உணர்வுகள் போதவில்லை

செந்தில், சதீஷ், யோகிபாபு, லொள்ளு சபா சாமிநாதன், ஞானசம்பந்தம் என பெரிய காமெடி நட்சத்திரங்கள் இருந்தும் காமெடி பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

சில இடங்களை சிரிக்க வைத்துள்ளனர். சதீஷ் காமெடி மொக்கையாக அமைந்துவிட்டது.

படத்தில் நாயகி மிருதுளாவை விட அக்கா அருந்ததி அழகாகவும் அருமையாகவும் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் எதிர்பாராத ட்விஸ்ட்.

டெக்னீஷியன்கள்…

தரண் இசையில்… உருவான 2 பாடல்கள் அருமை.. ஒன்று குத்தாட்டம்… 2 மெலோடி.. ‘ஆத்தாடி பாத்தேனே….’.. ‘என்னை கொல்ல வந்த தேவதையோ..’ பாடல் சிறப்பு.

ஆனால் இரண்டு பாடல்களிலும் குழப்பம் இருக்கு.. காரணம் ஒரு வரிக்கு பாடுகிறார்.. அடுத்தவரிக்கு பாடவில்லை.. பாடினால் பாடலை முழுவதுமாக பாடுவது போல காட்ட வேண்டாமா?

ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். பெயரளவில் இருக்கும் பிஸ்தா சுவையாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது பெரிய பிஸ்தா போல மாஸாக காட்டி இருக்கலாம். அதுவும் இந்த படத்தில் மிஸ்ஸிங்.

இசையமைப்பாளர் தரண் மற்றும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் தரன்-னின் இசையில் உருவாகும் 25-வது படமாகும்.

ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ளார்.

ஆக இந்த பிஸ்தா… பெயருக்கு மட்டுமே..

Pistha movie review and rating in tamil

FIRST ON NET பொன்னியின் செல்வன் விமர்சனம் 4.5/5.;. தமிழர்களின் பெருமை

FIRST ON NET பொன்னியின் செல்வன் விமர்சனம் 4.5/5.;. தமிழர்களின் பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கல்கி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.

முதல் பாகம் இன்று செப்டம்பர் 30-ம்தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ரவிவர்மன்.

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்.

————————————
கேரக்டர்கள் அறிமுகம்…

ஆதித்ய கரிகாலன் – விக்ரம்

வந்தியத் தேவன் – கார்த்தி

ராஜ ராஜ சோழன் – ஜெயம் ரவி

நந்தினி – ஐஸ்வர்யா ராய்

குந்தவை – த்ரிஷா

பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்

சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்

ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்

ரவிதாசன் – கிஷோர்

பூங்குழலி – ஐஷ்வர்ய லெட்சுமி

பார்த்திபேந்திரன் பல்லவன் – விக்ரம் பிரபு

பெரிய வேளார் – பிரபு

மலையமான் – லால்

சுந்தர சோழர் – பிரகாஷ் ராஜ்

மதுராந்தகன் – ரஹ்மான்

செம்பியன் மாதேவி – ஜெயசித்ரா

வானதி – சோபியா துலிபலா

(பாகுபலியோடு இப்படத்தை கம்பேர் செய்ய வேண்டாம்)

கதைக்களம்…

கமல்ஹாசன் குரலில் படம் தொடங்குகிறது.

சோழர் வம்சத்தை காக்கவும் எதிரிகளை பழி தீர்க்கவும் சியான் விக்ரம் & விக்ரம் பிரபு உடன் இணைந்து ஒரு போரில் எதிரி நாடுகளை கைப்பற்றி விடுகிறார்.

ராஷ்டிர நாட்டில் போரிட்டு வென்று தன்னுடைய சோழ நாட்டின் கொடியை நாட்டுகிறார்.

அதன் பின் விக்ரம் சொல்படி.. முக்கிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சை புறப்படுகிறார் வந்தியத்தேவன்.

(பெரிய பழுவேட்டரையர், இளம் பெண்ணான நந்தினியை (ஐஸ்வர்யா ராயை) திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.)

சுந்தரச் சோழரின் மகனான கரிகாலனும், பொன்னியின் செல்வனும் (ரவி) ராஜ பட்டத்தை ரகுமான் பெற கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

இதனிடையில் மதுராந்தக சோழரை (ரகுமானை) அரசனாக்க திட்டம் தீட்டுகிறார்கள் பெரிய பழுவேட்டரையர் (சரத்) மற்றும் சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) .

இதனை மறைந்து நின்று பார்த்த வந்திய தேவன், குந்தவையை சந்தித்து இந்த சதியை தெரிவிக்கிறார்.

இதனிடையில் ஒருபுறம் நந்தினி (ஐஸ்வர்யா ராய்) தன்னுடைய கணவன் வீர பாண்டியனை கொன்ற ஆதித்த கரிகாலனை கொல்லத் துடிக்கிறார்.

மற்றொரு புறம் அருண்மொழி வர்மனை (ரவியை) கொலை செய்ய பாண்டியர்களை அனுப்புகிறார் நந்தினி.

அதே நேரம் குந்தவை தன்னுடைய சகோதரன் அருண் மொழி வர்மனை தன்னிடம் அழைத்து வருமாறு வந்திய தேவனை இலங்கைக்கு அனுப்புகிறார்.

இவையில்லாமல் கரிகாலனும் பார்த்திபனை விட்டு அருள் மொழி வர்மனுக்கு அழைப்பு விடுகிறார்.

தன்னுடைய மகன் பத்திரமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் சுந்தர சோழன் (பிரகாஷ் ராஜ்) மகனை கொண்டு வர படையை அனுப்புகிறார்.

எனவே யாருடன் பொன்னியின் செல்வன் செல்வார்.? இப்படியாக கதை தொடர்கிறது..

இதற்கு மேல் சொன்னால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.. எனவே இனி கேரக்டர்கள் பற்றி பார்ப்போம்..

கேரக்டர்கள்..

விக்ரம் வீரம் என்றால் கார்த்தி கலகலப்பு.. இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

அது போல ஐஸ்வர்யா ராய் த்ரிஷா இருவரும் பேரழகில் உச்சம்.

இவர்களை பார்த்து மயங்காதவர்கள் இல்லை என்னும் அளவிற்கு அப்படி ஒரு அழகு. இவர்கள் சந்தித்து பேசும் வசனங்கள் பெண்களுக்கே உரித்தான அழகு. ஆண்களின் பலவீனம் கூட.

ஐஸ்வர்யா மற்றும் த்ரிஷாவிடம் கார்த்தி பேசும் வசனங்கள் சூப்பர். இருவரிடமும் கார்த்தி பேசும் வசனங்கள் (ஜொள்ளு) அழகான வழிதல்.. பெண்களை வசீகரிக்கும் வர்ணனைகள்..

ஜெயம் ரவி வந்தபின்னர் படம் மீதான எதிர்ப்பார்ப்பு வேற லெவலில் இருக்கும். தன் நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.

டெக்னீஷியன்கள்…

ரஹ்மானின் பாடல்கள்..பின்னணி இசை. தோட்டா தரணியின் பிரமாண்ட செட், என அனைத்து படத்திற்கு யானை பலம்..

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து கலைஞர்களும் சிறப்பு.

தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் ‘பொன்னியின் செல்வன்: படத்தை தமிழர்கள் பெருமை படும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.

சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. ஆனால் சரித்திரக்கதை என்றால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்றைய குழந்தைகளும் ரசிக்கும்படி சொல்லியிருப்பது மணிரத்னம் டச்.

படத்தின் கலை ஆர்ட் ஒர்க் அந்த காலக்கட்டத்திற்கே நம்மை பயணிக்க வைக்கிறது.

ஆக இந்த பொன்னியின் செல்வன்… தமிழர்களின் பெருமை

Ponniyin Selvan

FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

FIRST ON NET நானே வருவேன் விமர்சனம் 3.5/5.; தனுஷ் – செல்வா கூட்டணி எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தனுஷ் TWINS (இரட்டை பிறவி). இதில் ஒருவர் வில்லன். ஒருவர் ஹீரோ. சிறு வயதில் பிரியும் இவர்கள் ஒரு அமானுஷ்ய சக்தியால் இணைகின்றனர் என்பதே ஒன்லைன்.

கதைக்களம்…

கதிர் & பிரபு இருவரும் இரட்டை குழந்தைகள். இதில் கதிர் ஒரு முரடன்.

தன் சிறு வயதிலேயே ஒரு பிரச்சனையால் தன் தந்தையை கொன்று விட அவனை விட்டு விட்டு பிரபு உடன் பிரிந்து செல்கிறார் இவர்களின் அம்மா.

பிரபு (தனுஷ்) பெரியவனாகி இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள்.

ஒரு கட்டத்தில் அந்த சிறுமிக்குள் ஒரு அமானுஷ்ய சக்தி நுழைகிறது. அதனை கண்டுபிடித்தாரா பிரபு? அந்த அமானுஷ்ய சக்தியின் நோக்கம் என்ன? கதிர் என்ன ஆனார்? பிரிந்த சிறுவர்கள் இணைந்தார்களா? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

இதுவரை ஏற்காத வில்லன் மற்றும் ஹீரோ இரு வேடங்களில் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளார் தனுஷ். ஒருவர் சாதுவாகவும் ஒருவர் முரடனாகவும் நடிப்பை வேறுபடுத்தி தன் அசுரன் நடிப்பில் கவர்ந்திருக்கிறார் தனுஷ்.

ஒரு சிறுமிக்கு தாயாக இந்துஜா நடித்துள்ளது பாராட்டுக்குரியது.

இவர்களுடன் யோகி பாபு இளைய திலகம் பிரபு நடித்திருக்கின்றனர். இவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

செல்வராகவன் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். அவர் ஏன் வருகிறார்? அவரின் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை.

இதில் எல்லி அர்வம் நாயகி அவருக்கும் பெரிதாக வேலை இல்லை.

இவையில்லாமல் அமானுஷ்ய சக்தியை கண்டுபிடிக்க நான்கு ஐந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள். அது செம காமெடி.

ஆனால் படத்தில் சிறுவர்களாக நடித்திருக்கும் இரட்டையர்கள் நால்வருமே நல்லதொரு நடிப்பை கொடுத்துள்ளனர்.

அதுபோல தனுஷ் இந்துஜாவின் மகளாக வரும் அந்த பெண்ணும் பித்து பிடித்தவள் போல நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

ஆனால் தந்தையே டாடி என்பதற்கு பதிலாக டாடா என்று சொல்வது ஏதோ தேவையில்லாத ஒன்று போல தோன்றுகிறது.

டெக்னீஷியன்கள்..

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிறப்பு. படத்தை இரண்டே மணி நேரத்தில் முடித்துள்ளது கூடுதல் தகவல். படத்தில் மொத்தம் 15 பேரை வைத்து முடித்து விட்டார்கள். கச்சிதமாக கேரக்டரை கொடுத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது யுவன் சங்கர் ராஜாவின் இசை.. தீரா சூரா பாடல் தீப்பொறியாக இருக்கிறது. பின்னணி இசையில் தன் வழக்கம் போல மிரட்டி இருக்கிறார்.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை என்று சொல்லலாம். இடைவேளை காட்சியில் கொடுத்த பில்டப் சூப்பர்.

கிளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாம். ஒருவேளை பார்ட் 2 படத்திற்காக அப்படி முடித்து விட்டாரோ என்னவோ?

ஆக நானே வருவேன்… செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை இந்த படம் கொடுத்துள்ளது.

 

ட்ரிகர் விமர்சனம்..; ஆக்சன் அதர்வா

ட்ரிகர் விமர்சனம்..; ஆக்சன் அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

போலீஸ் தந்தை (அருண் பாண்டியன்) கண்டுபிடிக்க முடியாமல் விட்டதை மகன் போலீஸ் கண்டுபிடிக்கிறார்.

காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களைய உளவு பார்க்கும் போலீஸ் படை Vs குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல்.. இவர்களிடையே நடக்கும் யுத்தமே ‘ட்ரிகர்’.

கதைக்களம்…

போலீஸ் பிரபாகரன் (அதர்வா). ஒரு பிரச்சனையால் இவருக்கு வேலை பறிபோகிறது.

ஆனாலும் யூனிபார்ம் அணியாத அன்டர்கவர் போலீஸ் ஆக பணிபுரிய சொல்கிறார் மேலதிகாரி அழகம் பெருமாள்.

காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலையை கொடுக்கிறார்கள்.. ஆனால் இப்படி ஒரு வேலை நிஜத்தில் இருக்கிறதா? இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா என தெரியவில்லை. (சட்டமாக வந்தால் நாட்டுக்கே நல்லது)

இன்னொரு புறம்..: அனாதை குழந்தைகளை கடத்தல் செய்கிறார் வில்லன். ஆசிரமத்தில் உள்ள அவர்களை மட்டுமே அவர் குறிவைப்பது ஏன்? என்பதை கண்டறிய முற்படுகிறார் அதர்வா.

அதன் பின்னணியில் யார்? என்ன செய்கிறார்கள்? என்பதே படத்தின் கதை

கேரக்டர்கள்…

கொஞ்சம் ஆக்சன்.. கொஞ்சம் எமோஷன் என அசத்தலாக அதர்வா. நாயகி தான்யாவுக்கு பெரிய வேடம் இல்லை.

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், சீதா, வினோதினி, அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த், அன்புதாசன், முனீஷ்காந்த் என பலரும் உண்டு.

மறதி நோயாளியாக (செலக்டிவ் அம்னீஷியா) அருண் பாண்டியன்.. குழந்தை பெற முடியாத பெண்ணாக வினோதினி… தன் மகனிடம் தன்னைப்பற்றி சொல்லும் சின்னி ஜெயந்த் என இவர்கள் ஒவ்வொருவரும் கவனிக்க வைக்கின்றனர்.

வில்லனாக வரும் மைக்கேல். ஓவர் பில்டப். எல்லாம் திட்டங்களையும் சிறையில் இருந்து செய்கிறார். அது ஏன்? என்பது தெளிவாக சொல்லப்படவில்லை

டெக்னீஷியன்கள்…

கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். திலீப் சுப்பராயணின் சண்டைக்காட்சிகள் அதிரடி லெவல்.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பின்னணி இசை சூப்பர். ஹீரோவை விட வில்லனுக்கு தான் ஓவர் பில்டப். ஆனால் வில்லனிடம் அந்த கெத்து இல்லை.

இந்த படத்தை ஆக்ஷன் த்ரில்லராக கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சாம் ஆண்டன். ஆனால் திரைக்கதையில் அழுத்தம் இல்லை என்பதால் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆக இந்த ட்ரிகர் TRIGGER – ட்விஸ்ட் பத்தல

பபூன் விமர்சனம்.; கலையா.? போதையா.?

பபூன் விமர்சனம்.; கலையா.? போதையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

கூத்துக் கலை கலைஞர்கள் வைபவ் மற்றும் ஆத்தங்குடி இளையராஜா.

இந்த தொழிலில் வருமானம் இல்லாத காரணத்தினால் வெளிநாடு செல்ல நினைக்கின்றனர்.

ஆனால் வெளிநாடு செல்லவும் பணம் இல்லாத காரணத்தினால் கிடைத்த டிரைவர் வேலையை செய்கின்றனர்.

அப்பொழுது ஒரு லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு டெலிவரி செய்ய போகும்போது அதில் 20கிலோ போதை பொருள் இருப்பது தெரிய வருகிறது.

இவர்கள் சுதாரிப்பதற்குள் போலீஸ் இவர்களை கைது செய்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? வெளிநாடு சென்றார்களா? குற்றத்திலிருந்து தப்பித்தார்களா? என்பதே மீதி கதை.

கேரக்டர்கள்…

வைபவ் படம் என்றால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் சீரியஸ் கேரக்டர் செய்துள்ளார். இவருக்கு பதிலாக காமெடி சாரல்களை தூவ விட்டுள்ளார் நிஜ நாட்டுப்புறக் கலைஞர் இளையராஜா.

இவருக்கு இனி சினிமாவில் நல்ல நல்ல வாய்ப்புகளை எதிர்ப்பார்க்கலாம்.

படத்தின் நாயகி அனகா. ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

படம் முழுவதும் உச்சரிக்கப்படும் கேரக்டர் பெயர் தனபால்.. தனபால் யார்? தனபால் யார்? என கிளைமாக்ஸ் வரை நீண்டு கொண்டே செல்கிறது..

ஆனால் தனபாலாக நடித்துள்ள ஜோஜூ ஜார்ஜ் கேரக்டரில் வலுவில்லை. காட்சிக்கு காட்சி பில்டப் மட்டுமே இருக்கு.

ஆனால் திரையை அழுத்தமாக ஆக்கிரமித்துவிட்டார் ஜோஜு ஜார்ஜ். இவரை வைத்து பபூன் பார்ட் 2 எடுக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக தமிழ் சிறப்பாக நடித்துள்ளார். கம்பீரமான நடிப்பு. மூணார் ரமேஷ் நடிப்பும் ஓகே.

ஆடுகளம் நரேன் மற்றும் வ.ஐ. ச. ஜெயபாலன் உள்ளிட்டோர் அரசியல்வாதிகளாக அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

சந்தோஷ் நாராயணனின் இசையில் கூத்துப் பாடல் அருமை. ஆனால் வைபவ் அதுக்கு பொருந்தவில்லை. பின்னணி இசை ஓகே ரகம்.

போதை கடத்தல், அரசியல் களம், பாலிடிக்ஸ் ஈகோ, இலங்கை அகதிகள், போலீசில் சிக்கும் அப்பாவி என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் அசோக் வீரப்பன்.

போலீசால் தேடப்படும் குற்றவாளி வைபவ் கேரளாவில் இருந்து தமிழகம் வருகிறார். அவர் எப்படி வருகிறார்? என்று தெரியவில்லை. ஊருக்குள் எங்கும் ஓடுகிறார். போலீசிடம் சிக்கவில்லை. இதுபோன்ற லாஜிக் குறைகளை தவிர்த்து இருக்கலாம்.

ஆக இந்த பபூன்… பரவாயில்லை ரகமே..

குழலி விமர்சனம் 3.25/5..; காதலை எரித்த ஜாதீ

குழலி விமர்சனம் 3.25/5..; காதலை எரித்த ஜாதீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கீழ் ஜாதி மாணவனை காதலிக்கிறார் உயர் ஜாதி மாணவி. இதனால் இருதரப்பிற்கும் ஏற்படும் மோதலே இந்த காதல் கதை

கதைக்களம்…

காக்கா முட்டை (சுபு) விக்னேஷ் நாயகன். ஆரா (குழலி) நாயகி.

ஒன்றாக பள்ளியில் படிக்கும் இவர்கள் காதலிக்கின்றனர். இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவர மகளின் படிப்பை நிறுத்திவிடுகிறார் செந்தி அம்மா.

பின்னர் வேறு ஒருவருடன் அதே ஜாதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்கிறார்.

அதன் பின்னர் காதலர்கள் என்ன செய்தார்கள்? இறுதியில் என்ன ஆனது என்பது இந்தக் குழலி.

கேரக்டர்கள்…

காக்கா முட்டையில் சிறுவனாக நடித்த விக்னேஷ் தான் இந்த படத்தின் நாயகன். அவருக்கு படத்தில் பெரிதாக வசனங்கள் இல்லை. பயந்த சுபாவம் கொண்டவனாக நடித்திருக்கிறார்.

ஆராவின் கண்கள் ரொம்ப அழகு. கண்களால் பாதி பேசி விடுகிறார். ஆனால் வாயைத் திறந்து பேசினால் தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரோட சொந்த குரலா? என தெரியவில்லை. ஒரு ஆணின் குரல் போல உள்ளது.

ஆரா மற்றும் அவரின் அம்மா செந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஆனால் படத்தில் ஜாதி வெறி பிடித்தவர்களாக நடித்துள்ள பலர் ஓவர் ஆக்டிங் செய்துள்ளனர். வைத்தியராக வருபவர் எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார்

கிளைமாக்சில் , “என்னை படிக்க விடுங்கடா” என்று ஆரா உயிருக்கு போராடுவது பதை பதைக்க வைக்கிறது.

டெக்னீஷியன்கள்…

எம் உதயகுமாரின் இசை. பாடல்கள் இசைஞானி மெட்டுக்களாய் இதம். பாடல் இசையும் பின்னணி இசையும் அருமை.

படத்திற்கு மூன்று நான்கு பாடல்கள் போதுமானது. ஆனால் ஐந்து ஆறு பாடல்கள் போட்டுவிட்டு நம்மை வெறுப்பேற்றி விட்டார் இயக்குனர்.

சமீரின் ஒளிப்பதிபும் சிறப்பு. நம்மை கிராமத்துக்கே அழைத்து சென்றுவிட்டார். அப்படியொரு குளுமையான அழகு.

சாதிப் பிரச்னையில் முழுக்க முழுக்க அரைத்த மாவையே அரைத்து நம்மை கடுப்பேற்றி விட்டனர்.

கே பி. வேலு, எஸ் ஜெயராமன், எம்.எஸ். ராமச்சந்திரன் தயாரித்திருக்கின்றனர்.

சில கிராமத்தில் உலவும் சாதிய கொடுமையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சேரா கலையரசன். ஆனால் இடைவேளை வரை எந்த ட்விஸ்டும் இல்லை.. காதல்… இசை ஆகியவையே பிரதானமாக காட்டப்படுகிறது.

இறுதியாக சாதி வெறியர்களின் மீது காரி உமிழ்வதன் மூலம் செருப்படி கொடுத்துள்ளார்.

ஆக இந்த குழலி… காதலை எரித்த ஜாதீ

Kuzhali movie review and rating

More Articles
Follows