நடிகர்கள் : சமந்தா, ஆதி, ஆடுகளம் நரேன், நரேன், பூமிகா மற்றும் பலர்
இயக்குனர் – பவன் குமார்
இசை – அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி
ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி
வெளியீட்டு உரிமை : தனஞ்செயன்
கதைக்களம்…
சமந்தா ஒரு பத்திரிகையாளர். அங்குள்ள ஒரு சக ஊழியரை காதலிக்கிறார். இருவரும் சென்னையில் பணி புரிகின்றனர்.
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் செல்லும் ட்வீலர்கள் நடுவில் இருக்கும் கற்களை அகற்றி வைத்து யூடர்ன் போட்டு செல்கின்றனர். இதை பார்க்கும் சமந்தா அங்கு ப்ளாட்பார்மில் வசிக்கும் ஒருவரிடம் யுடர்ன் போடும் வண்டிகளின் நம்பர்களை குறித்து வைத்து தன்னிடம் தர சொல்கிறார் சமந்தா.
இதை வைத்து ஒரு செய்தியை வெளியிட நினைக்கிறார்.
அவர் குறித்து தரும் அந்த வண்டி ஓட்டுனர்கள் எல்லாம் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
காவல்துறையும் இதை ஒரு பொருட்டாக கருதாமல் விசாரணையை மூட நினைக்கின்றனர்.
ஆனால் நேர்மையான அதிகாரி ஆதியும் சமந்தாவும் குழப்பம் அடைகின்றனர்.
யுடர்ன் போடுபவர்கள் மட்டும் மரணமடைவது ஏன் என்பதை கண்டு பிடிக்க, தானே ஒரு நாள் யுடர்ன் போடுகிறார் சமந்தா. அதன்பின்னர் என்ன ஆனது?
அவர் மரண அடைந்தாரா? தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்….
மரத்தை சுற்றி ஆடி பாடி டூயட் இல்லாத கதை. அப்படி இருந்தும் இந்தை கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார் சமந்தா. அதற்காகவே சமந்தாவுக்கு ஒரு பெரிய சபாஷ் சொல்ல வேண்டும்.
எனக்கு ஒன்னுமே தெரியாது. வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்? என அப்பாவியாக அவர் கேட்கும் கேள்வி முதல், கொலைக்கான காரணத்தை அவர் அறிய செய்யும் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.
பின்னர் கொலை எப்படி நடக்கிறது? என்பதை தெரிந்துக் கொண்ட பின் ஏற்படும் பதட்டத்தையும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
நேர்மையான மிடுக்கான போலீசாக ஆதி அசத்தல். தன் கீழ் வேலை செய்யும் மற்ற போலீஸ்களை அதட்டாமல் அவர் வேலை வாங்கும் முறைகளை நிறைய நிஜ போலீசார் கற்றுக் கொள்ள வேண்டும்.
உயர் அதிகாரி ஆடுகளம் நரேன் இவருக்கு நேர் எதிர். கடுப்பான போலீஸ் அவர்.
பூமிகாவும் அவரது மகளும் சிறிய வேடத்தில் வந்தாலும் நிறைவு.
மலையாள நடிகர் நரேன் தன் மகளை தானே கொன்று விட்டதை எண்ணி எடுக்கும் முடிவில் ஒரு அன்பான அப்பாவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்கள் இல்லாமல், படத்தின் பின்னனி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர். அவருக்கும் பாராட்டுக்கள்.
கொலை மேல் கொலை, யாரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட். தவறான எண்ணை பூமிகாவுடம் கொடுத்து விட்டோம் என சமந்தா தவிக்கும் அனைத்தும் செம ட்விஸ்ட்.
யுடர்ன் இடம், அந்த சாலைகளை அனைத்தையும் லாங் ஆங்கிளில் அருமையாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
யுடர்ன் செய்ய, போக்குவரத்து விதிகளை மீறி நாம் செய்யும் அலட்சியத்தால் எத்தனை உயிர் போகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் பவன்.
முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் குறைந்துவிடுகிறது. அதை தவிர்த்திருந்தால் இன்னும் ஸ்பீடு கிடைத்திருக்கும்.
இந்த படத்தை பார்த்த பிறகாவது சாலை விதிகளை மதித்து யுடர்ன் அடிக்காமல் யாராவது திருந்தினால் அதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றி.
யு டர்ன் – ஆச்சர்ய யுடர்ன் அடிக்க ஒரு படம்
U turn review and rating