First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

First on Net அடங்காத அப்பாவி… அடங்க மறு விமர்சனம்

நடிகர்கள்: ஜெயம் ரவி, ராஷிகண்ணா, பாபு ஆண்டனி, பொன் வண்ணன், முனிஷ்காந்த் (ராமதாஸ்), சம்பத்ராஜ், அழகம் பெருமாள், மைம் கோபி, பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் – கார்த்திக் தங்கவேல்
எடிட்டர் – ரூபன்
ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
இசை – சாம் சி.எஸ்,
தயாரிப்பு – சுஜாதா விஜயகுமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. ஜெயம் ரவி. அழகான குடும்பம், அண்ணன் குழந்தைகள், காதலி, கில்மா என போலீஸாக வாழ்கிறார்.

குற்றவாளிகளை பிடித்து கொடுத்து நேர்மையான போலீஸாக இவர் வாழ விரும்பினாலும் உயர் அதிகாரிகளால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார்.

குற்றவாளிகளை கைது செய்ய இவர் நெருங்கும் போது வேறு வழக்கினை இவருக்கு கொடுப்பது வாடிக்கையாகிறது.

அப்படியிருந்தும் ஒரு சூழ்நிலையில் பாலியல் குற்றத்திற்காக பணக்கார முதலாளிகளின் பையன்களை அடித்து துவைத்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

சில நிமிடங்களிலேயே வெளியே வரும் அந்த குற்றவாளிகள் இவரது குடும்பத்தையே கொல்கின்றனர்.

எனவே காவல்துறைக்கும் அந்த குற்றவாளிகளுக்கும் ஒரு சவால் விடுகிறார்.

எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், நான் அவர்களின் தந்தைகளை வைத்தே அந்த குற்றவாளிகளை கொல்கிறேன் என சேலஞ்ச் செய்கிறார்.

அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஜெயம் ரவியின் போலீஸ் கேரக்டர்களில் மற்றொரு ஸ்டார் இந்த படம். இதில் போலீஸ் உடையில் வராமல் தன் பங்கை நிறுத்தி நிதானமாக செய்திருக்கிறார்.

அழகம் பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோர் பாத்திரங்கள் நிறைவை தருகின்றன.

வழக்கமாக நாயகிகள் வரும் சில காட்சிகளில் வந்து செல்கிறார் ராஷி கண்ணா. ஒரு டூயட்டும் உண்டு.

நிதானமாக ஸ்கெட்ச் போடும் வில்லன்கள் 4 பேர். அவர்களுக்கு விலை போகும் போலீஸ் அதிகாரிகள் மைம் கோபி மற்றும் சம்பத் ஆகியோரும் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர்.

பொன் வண்ணன் மற்றும் சுபு பஞ்சு அருணாச்சலம் ஆகியோரும் உண்டு. ஆனால் அவர்களது கேரக்டர்களில் வலுவில்லை.

பூர்ணா வக்கீலாக வருகிறார். ஆனால் ஏன் வருகிறார்? என்ன செய்தார்? என்பதே தெரியவில்லை. 2 டயலாக்குகளை ஜெயம் ரவிக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாயாலி மற்றும் பச்சை துரோகங்கள் பாடல் வரிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும். படத்தை சீரியஸாக கொண்டு சென்றதால் டூயட்டில் சரியான கெமிஸ்ட்ரி கூட ஒர்க் அவுட ஆகவில்லை.

பாடல்களை விட பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதுவும் டான்…டண்டன்ன… என்ற தீம் மியூசிக் படம் முழுவதும் வந்து ஹைப் ஏற்றுகிறது.

ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் மற்றும் எடிட்டர் ரூபன் இருவரும் தங்கள் பணிகளில் சிறப்பான காட்சிகளை கொடுத்துள்ளனர்.

ஆனால் பார்த்து பழகிப்போன பழிவாங்கல் கதையை நீளமாக சொல்லியிருப்பதால் 2ஆம் பாதியில் சோர்வை தருகிறது.

கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் நான் கொல்லமாட்டேன் ஆனால் குற்றவாளிகளின் தந்தையே அவர்களை கொல்வார்கள் என ஜெயம் ரவி பேசும்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறுகிறது.

க்ரைம் ப்ரான்ச் எஸ்.ஐ. என்பதால் ஜெயம் ரவியை தாடியுடன் அலைய விட்டுள்ளார்கள். அவரும் மிக சோகமாக முதல் பாதியிலும் வருவது பாவமாக இருக்கிறது.

பொதுமக்களின் வேலைக்காரன் தான் இந்த போலீஸ் என்பதை ஆணித்தரமாக சொன்ன ஜெயம் ரவிக்கும் டைரக்டர் கார்த்திக்கும் வாழ்த்துக்கள்.

ஜெயம் ரவி போலீஸ் விசாரணையில் இருக்கும்போது…

என் கையில் 2 எறும்புகள் இருக்கிறது. அது உயிரோட இருக்கா? இறந்துட்டா கேட்டா? நீ என்ன சொல்லுவ?

இறந்துட்டு சொன்னா அதை நான் உயிரோட காட்டுவேன். உயிரோடு இருக்கு சொன்னா நான் நசுக்கி சாகடிச்சிட்டு காட்டுவேன் என்ற வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பாலியல் குற்றங்களை கண்டு அடங்கமறுக்கும் ஒருவனின் கதை தான் என்றாலும் அதை தனிப்பட்ட பழிவாங்கல் கதையாக சொல்லாமல் இருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

அடங்கமறு… அடங்காத அப்பாவி

Comments are closed.

Related News

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான…
...Read More
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அடங்க…
...Read More
சின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய திருமதி…
...Read More